எளிய இயற்கை வைத்தியம் :-
Mon Mar 16, 2015 7:49 pm
1. அரிசி அல்லது ஜவ்வரிசிக் கஞ்சியுடன் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். வெந்தயத்தை ஊர வைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலை முடி நன்றாக வளரும். வெந்தயக் கீரை அஜீரணக் கோளாறை நீக்கும். தினமும் இரவில் ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
2. வயிறு இதமாக புழுங்கலரிசி நொய்க்கஞ்சியுடன் வெந்தயம் கால் ஸ்பூன் சேர்த்து, மோருடன் கலந்து காலையில் 2 கப் குடித்தால் வயிறு இதமாகும்.
3. பன்னீரில் ஏலக்காய், தேன் கலந்து குடிப்பது மூளைக்குப் புத்துணர்ச்சி தரும்.
4. வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், லெமன், ஜூஸ் ஆகியவை சிறுநீரகத்தை குளுமைப்படுத்தும்.
5. பெருங்காயம் கசப்பும், காரமும் கலந்த சுவை கொண்டது பெருங்காயம். வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும். சுவை சேர்க்க மட்டுமின்றி, உணவு செரிக்கவும் இது உதவும்.
6. 1 டேபிள் ஸ்பூன் ஓமத்தை மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடியுங்கள். பிறகு அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் வெல்லத்தைச் சேர்த்து அரையுங்கள் (வெல்லத்தின் நீர்ப் பசையே இதற்குப் போதும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை) இந்த பேஸ்ட்டை கரப்பான், சிரங்கு ஆகியவற்றால் வந்த தழும்புகள் மீது பூசி, பத்து நிமிடங்கள் ஊற வைத்துத் குளித்தால் தழும்புகள் மறையும்.
7. சிறுநீர் எரிச்சல் நீங்க ஜீரகத்தையும், கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிடுதல் நல்ல பயன் தரும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum