“ஜெபிக்கும் கைகள்” ஓவியம் உருவான உண்மை சம்பவம் தெரியுமா?
Thu Mar 12, 2015 5:00 pm
இந்த ஜெபிக்கும் கைகள்(PRAYING HANDS) படத்தை உலகம் நினைவு கூருகிறதோ இல்லையோ ஆனால் கிறிஸ்தவர்கள் இந்த படத்தை அதிகமாக பயன்படுத்துகின்றனர்,வீடுகளிலும், ஆலயங்களிலும் ஜெபக்கூட்டங்களிலும், பத்திரிகைகளிலும் இந்த ஜெபிக்கும் கைகள் படத்தை பயன்படுத்துவதுண்டு, ஆனால் உண்மையில் இந்த படம் தோன்றிய விதம் நம்மில் அனேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன், எனவே அந்த உண்மை சம்பவத்தை உங்கள் பிரயோஜனத்திற்க்காக உங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்,
பதினைந்தாம் நூற்றாண்டில் ஜெர்மனியிலுள்ள நியுரம்பெர்க்(NUREMBERG) அருகாமையிலுள்ள ஒரு சிறு கிராமத்தில் ஒரு குடும்பம் வசித்துவந்தது, அதன் குடும்பத் தலைவர் ஒரு பொற்கொல்லர்(GOLDSMITH), அவருக்கு எத்தனை பிள்ளைகள் தெரியுமா? 18, ஆம் பதினெட்டு பிள்ளைகள், அத்தனை பேருக்கும் உணவு வழங்குவது என்பது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரு சிறு கூட்டத்திற்கே உணவு வழங்குவதற்கு சமமாகும், ஆகவே அதன் குடும்ப தலைவர் ஒவ்வொரு நாளும் தன் பொற்கொல்லர் வேலையை தவிர வருமானம் வரக்கூடிய அனைத்து வேலைகளையும் சுமார் பதினெட்டு மணிநேரம் ஓய்வின்றி பாடுபடுவார்.
இந்த வறுமை போராட்டத்தின் மத்தியில் அவருடைய பதினெட்டு பிள்ளைகளில் மூத்தவர்களான ஆல்பிரக்ட்(ALBRECHT) ஆலபர்ட்(ALBERT) என்ற இரு மூத்த சகோதரர்களுக்கு ஒரு கனவு இருந்தது, அது என்னவென்றால், நியுரம்பெர்க்கில் இயங்கும் ஒவிய கலை பயிற்சி அகாடமியில் பயின்று பட்டம் பெற்று சிறந்த ஓவியராக வரவேண்டும் என்பதுதான், ஆனால் நிச்சயமாக அவர்களுடைய தந்தையால் இவர்களுடைய கனவை நனவாக்க இயலாது என்பதை உறுதியாக நம்பினர்,
ஆயினும் எப்படியாகிலும் தங்கள் திறமையை நிருபிக்கும் எதிர்கால கனவை நோக்கி அவர்கள் கண்கள் இருந்தபடியால், அதற்கு என்ன வழி என்பதை யோசித்தவாறே இருந்தனர், இறுதியாக, ஒரு வழி கிடைத்தது, அது என்னவென்றால், காசை சுண்டி விட்டு பார்த்து அதில் யார் ஜெயிக்கிறானோ அவன் ஓவியப்பயிற்சி அகாடமிக்கும் யார் தோற்கிறானோ அவன் அருகாமையிலுள்ள தங்க சுரங்கத்தில் வேலை செய்து அதில் வரும் பணத்தில் தன் சகோதரனை பயிற்சி செலவீனங்களை பார்த்துக்கொள்ள வேண்டும், பினபு பயிற்சி முடித்தவர் வந்து தன் ஓவிய திறமையின் மூலமோ அல்லது சுரங்க வேலையின் மூலமோ முன்பு வேலை செய்த சகோதரனுடைய ஓவிய பயிற்சிக்கு நிதி சேகரிக்க வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம்.
இதற்கு அந்த இரு சகோதரர்களும் சம்மதித்து காசை சுண்டினர், அதில் ஆல்பிரக்ட் ஜெயித்து ஓவிய பயிற்சி அகாடமிக்கு படிக்க சென்றார், ஆல்பர்ட் அருகாமையிலுள்ள மிகவும் ஆபத்தான் சுரங்கத்தில் வேலைக்கு சேர்ந்து ஆல்பிரக்ட்டின் படிப்புக்கு பணத்தை அனுப்பினார், இவ்வாறாக அவர் நான்கு வருடங்கள் கடினமாக உழைத்து தன் சகோதரனை படிக்க வைத்தார்,அவர் தனக்கு கற்று கொடுத்த ஆசிரியர்களை விட ஓவிய பயிற்சியில் சிறந்து விளங்கினார், ஒரு வழியாக அவர் சகோதரன் ஆல்பிரக்ட் பயிற்சி முடித்து பட்டம் பெற்றவராய் தன் தகப்பன் வீட்டிற்கு திரும்ப வந்தார்,
தங்கள் சகோதரன் ஆல்பிரக்ட் சிறந்த முறையில் பட்டம் பெற்று திரும்புவதால் அவ்ர்கள் வீட்டில் சிறந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியாக காணப்பட்டனர், அவர்கள் வீட்டில் எங்கும் சிரிப்பும் சந்தோஷ ஒலிகளுடன் மிக நீண்ட விருந்தாக இருந்த அந்த விருந்தின் இறுதியில் ஆல்பிரக்ட் தன் இருக்கையில் இருந்து எழுந்து அந்த விருந்து மேசையின் கடைசியில் இருந்த தன் அன்பு சகோதரன் ஆல்பர்ட்டிடம் ஒரு சிற்றுண்டியை நீட்டி கொடுத்த பின், “என் ஆசிர்வாதமுள்ள சகோதரன் ஆல்பர்ட், இனி நீ சுரங்க தொழிலுக்கு செல்ல வேண்டாம், இனி நீ உன் கனவை சொந்தமாக்க நியுரம்பெர்க போகும் நேரம் வந்துவிட்டது, உனக்கான செலவுகளை நான் பார்க்கும் நேரம் வந்துவிட்டது” என்று ஆல்பிரக்ட் சொன்னவுடன் அனைவருடைய கண்களும் ஆல்பர்ட் மேல் பதிந்தது, ஆனால் ஆல்பர்ட்டோ தலையை குனிந்தவாறு விம்மி அழுதுகொண்டே, தலையை அசைத்தவாறு “இல்லை…இல்லை….இல்லை” என்று தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டிருந்தார். சுற்றி இருந்த அனைவரும் அதிச்சியுடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி திகைப்புடன் அமர்ந்திருந்தனர்.
கடைசியில் கண்ணத்தில் வழிந்தோடிய கண்ணீரை துடைத்து எழுந்து நின்றஆல்பர்ட், அந்த பெரிய மேசையில் தான் அதிகம் நேசித்த தன் சகோதர சகோதரிகளை பார்த்தவாறு, தன் கைகளை வலது கன்னத்தோடு பற்றி பிடித்தவாறு, தன் சகோதரன் ஆல்பிரக்டை பார்த்து,”இல்லை சகோதரனே, என்னால் நியுரம்பெர்க் செல்ல இயலாது, இதோ பார் என் கைகளை, சுரங்க வேலை எனது கைகளுக்கு கொடுத்த விலையை, என் கை விரல்களில் உள்ள எல்லா எலும்புகளும் நொறுங்கிப்போன நிலையிலுள்ளது, என்றோ ஒரு நாளோ அல்லது சீக்கிரத்திலோ என் வலது கை செயலிழந்து போகும், நான் எவ்வாறு ஒரு பேனாவையோ அல்லது பிரஷையோ கொண்டு ஓவியனாக இயலும், ஆகவே இனி அதை நான் நினைத்துப்பார்க்க இயலாது என்று கூறி அமர்ந்தார்,
அனைவருடைய சிரிப்பொலிகளும் மறைந்து ஒரு இருக்கம் பிடித்துக்கொண்டது, அப்போதுதான் ஆல்பிரக்ட் தன் சகோதரன் தனக்காக செய்த தியாகத்தை நினைத்துப்பார்த்தார்,அதன் விளைவாக தன் அன்பு சகோதரன் ஆல்பர்டின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக ஆல்பிரக்ட் டியுரர்(ALBRECHT DURER) தன் சகோதரனுடைய பெலவீனப்பட்ட கரங்கள் வானத்தை நோக்கியவாறு கூப்பிய நிலையில் அவர் வரைந்த அந்த படமே ஜெபிக்கும் கரங்கள்,
முதலில் அதற்கு அவர் “கரங்கள்” என்ற பெயரையே சூட்டியிருந்தார், பின் நாட்களில் மக்கள் அந்த அன்பை நினைவுகூர்ந்தவர்களாக ஜெபிக்கும் கரங்கள்(PRAYING HANDS) என்ற பெயரை சூட்டினர்,
ஆல்பிரக்ட் டியுரர் நூற்றுக்கணக்கான ஓவியங்களை விதவிதமான திறமைகளை பயன்படுத்தி வரைந்திருந்த போதிலும் பல நூற்றாண்டுகளை கடந்தும் இன்றும் அவர் பேர் சொல்லும் ஓவியம் என்றால் அது அந்த “ஜெபிக்கும் கரங்கள்” ஓவியம் தான், காரணம் அவருடைய சகோதரனுடைய தியாகத்தினால் அவருக்கு உண்டான புகழ்.
இதை போலவேதான் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து பூமியில் தோன்றி மனுக்குலம் அனைத்திற்குமான தீர்வாக மானிடர்களின் மேன்மைக்காக, மனுக்குலத்தின் விடுதலைக்காக, அனைவரும் அழிந்து நரகம் செல்லாதபடி அதற்கான கூலியாக, அவர் தம்முடைய பாவமில்லாத இரத்தத்தை சிந்தி நம்மை மீட்க அவர் தம்மை பலியாக்கினார்,
இந்த தியாக அன்பை நினைத்தால் அவர் வெளிநாட்டு தெய்வம் என்று சொல்ல நாவு எழும்புமா? அவர் மனுக்குலத்தின் இரட்சகர் என்பதை நினைவு கூற வேண்டாமா?,
இயேசு கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் சொந்தம் என்பது போல சிலர் எண்ணுகின்றனர், ஆனால் இயேசு பேதமில்லாமல் மனுக்குலம் யாவருக்குமான ஆண்டவர், அவரிடம் வேண்டுதல் செய்ய நீங்கள் எங்கும் அலைந்து திரிய வேண்டாம், நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் இருக்கும் இடத்தில் அவரை கூப்பிட்டால் உங்களுக்கு பதில் வருகிறதா இல்லையா என்று பாருங்கள், ஆனால் சந்தேகத்தோடல்ல உள்ளன்போடு கூப்பிட வேண்டும், உங்கள் பிரச்சனைகளை தீர்க்க அவர் உங்களை தேடி வருவார்.
“ஏழை மனு உருவை எடுத்த
இயேசு ராஜன் உன் அண்டை நிற்கிறார்
ஏற்றுக்கொள் அவரை தள்ளாதே
ஏற்றுக்கொள் அவரை தள்ளாதே”
source:http://jeevavootru.com
Permissions in this forum:
You cannot reply to topics in this forum