நில உரிமையின் நகலை ஆன்லைனில் பார்வையிடுவது எப்படி?
Wed Mar 06, 2013 2:36 am
தமிழ் நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா)
விவரங்கள் மற்றும் அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம்.
முன்னர், நில உரிமை பட்டா விவரங்கள், அரசின் பதிவேடு விவரங்கள் பற்றி
தெரிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் வட்டார தாலுகா அலுவலகத்திற்கு
சென்றுதான் பார்க்க முடியும். ஆனால் இப்போதோ அந்த வசதிகள் இணையத்திலே
இருக்கிறது.
அதாவது நீங்கள் சொந்த ஊரிலிருந்து வெளியூர் அல்லது வெளிநாடுகளில் பணியில்
இருக்கலாம். நமக்கு சொந்தமான வீடு, நிலம், தோட்டம் ஆகியவை உங்கள் சொந்த
ஊரில் இருக்கும். நீங்கள் வரும் சமயத்தில் தான் அதை நேரில் சென்று பார்க்க
முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே
அந்த இடத்திற்கு நீங்கள் தான் அதிகாரபூர்வமான உரிமையாளர் என பார்ப்பது
பற்றிய தகவலை தான் இன்று பார்க்க இருக்கிறோம்.
அதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது உங்களது நிலம் அமைந்துள்ள மாவட்டம்,
வட்டம், கிராமம், முதலிய விவரங்களை குறித்து கொண்டு அடுத்ததாக உங்கள் வசம்
இருக்கும் உங்களது நிலத்தின் பத்திரத்தில் உள்ள பட்டா எண், சர்வே எண்,
சர்வே உட்புல எண் அனைத்தையும் குறித்து கொள்ளுங்கள்.
தற்போது நில உரிமை நகல் பார்வையிட கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து அந்த
இணையத்தளத்தில் சென்று உங்களிடம் உள்ள தகவல்களை அதற்குரிய காலங்களில்
சரியாக பதிவிட்டு சமர்பிக்க வேண்டும். அதில் உங்களது நில உரிமையின் பட்டா
சிட்டா விவரங்கள், உங்களது நிலத்தின் உரிமையாளர் பெயர் உறவுமுறை ஆகியவையும்
உங்கள் நிலத்தின் பரப்பும் எவ்வளவு என்பதும் வரும் அவ்வபோதே சரியாக உள்ளதா
என்பதை நீங்கள் பார்த்து கொள்ளலாம்..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum