இயர் மஃப் - செஸ்டர் கீரின் வுட்
Wed Mar 11, 2015 11:16 am
வாழ்வில் முன்னேற கடின உழைப்பு மட்டுமின்றி சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி எடுக்கும் முடிவுகளும் முக்கியம் என்பதை உணர்த்தும் சம்பவம்.
ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில், தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது. ""இந்தப் பள்ளியில் பத்துவருஷமாப் படிச்சிருக்கே; ஒரு பாடத்துல கூட பாஸாகலை. வகுப்புல பாடம் நடத்தும் போது நீ என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சுகிட்டிருந்தியா?ன்னு கோபமாக திட்டினார்.
அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான். ""இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று டி.ஸி. கொடுத்து அனுப்பி விட்டார்.
அந்தப் பையன் தெருவில் இறங்கி நடந்தான். ""உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே? என்ற அந்த வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக முடினான்.
அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. ஒரு புதிய சிந்தனை உருவானது.
தலைமையாசிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான். ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான். அதன் பெயர் இயர் மஃப்.
பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க வாங்கினார்கள். இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள். ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது. அந்தச் சமயம் முதல் உலகப் போர் ஆரம்பமானது.
பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர் மஃப் கட்டாயம் அணிய வேணடும் என அதிகாரி உத்தரவிட்டார். போர்வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் அமைத்து கொடுத்தான். கோடீஸ்வரனானான்.
அவர்தான் செஸ்டர் கீரின் வுட். சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை சரியான முறையில் பயன்படுத்தியதால் முன்னேறினார். நாமும் முயல்வோமே!
- தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum