உப்பு பற்றிய சில சுவையான தகவல்கள்
Sat Mar 07, 2015 11:39 am
உப்பு என்றால் தெரியுமா? என்று உங்களிடம் கேட்டால், 'உணவில் சுவைக்கு சேர்ப்பார்களே அதுதானே உப்பு' என்று பதில் சொல்வீர்கள். அது பாதிதான் சரியான பதில். உணவில் சேர்ப்பது உப்பின் ஒரு வகை. 'அமிலத்தில் அல்லது நீரில் கரையும் எந்தப் பொருளும் உப்பு' என்று வகைப்படுத்துகிறார்கள் வேதியியல் விஞ்ஞானிகள். ஏராளமான உப்பு வகைகள் இருக்கிறது. உப்பு பற்றிய சில சுவையான தகவல்கள் இங்கே...
* நாம் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பு. இதில் ஒரு குளோரின் அணுவுடன், 23 பங்கு சோடியம் அணுக்கள் இணைந்திருக்கும்.
* மனிதன் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உப்பை பயன்படுத்தி இருக்கிறான். 3500 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்திய ஓவியத்தில் உப்பு தயாரிக்கும் முறை சான்றாக கிடைத்துள்ளது. சகாரா பாலைவனத்தில் உப்பு படிவுகளை அவர்கள் வெட்டி எடுத்து வணிகம் செய்துள்ளார்கள்.
* இறந்தவர்களின் உடலை பாதுகாக்க முதன்முதலில் உப்பை பயன் படுத்தியவர்களும் எகிப்தியர்களே. சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், சோடியம் குளோரைடு, சோடியம் சல்பேட் ஆகிய 4 உப்புக்களின் கலவை 'நார்டான்' எனப்படுகிறது. இதைக் கொண்டுதான் அவர்கள் 'மம்மி'க்களை பாதுகாத்தனர்.
* பழங்காலத்தில் மத்திய ஆப்பிரிக்க பகுதிகளில் 10 அங்குல நீளமும், இரண்டு அங்குல தடிமனும் கொண்ட உப்புக் கட்டிகளை நாணயங்களாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
* இந்தியாவில் பழங்காலத்தில் 5 வகை உப்புக்களை தயாரித்து பயன்படுத்தி இருக்கிறார்கள். சமுத்ரா எனப்படும் கடல் உப்பு, மண்ணில் இருந்து எடுக்கப்படும் உத்பேஜா, உறைந்து படிவங்களாக கிடைக்கும் ரோமகா உப்பு, அவுத்பிதா மற்றும் சைந்தவா ஆகிய உப்பு வகை சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
* கடல் நீரில் இருந்து உப்பு பிரித்தெடுக்கும் முறையை கண்டுபிடித்தவர்கள் ஜெர்மானியர்கள்.
* வெனிஸ் நாட்டிற்கும் ஜெனோவாவுக்கும் இடையே 1482-1484 சமயத்தில் போர் நடந்தது. 'பெர்ராரா போர்' என அழைக்கப்படும் இந்தப் போருக்கு 'உப்பு போர்' என்று மற்றொரு பெயரும் உண்டு. பல்வேறு அரசியல் காரணங்களுக்கு இடையில், உப்பு வணிகத்தில் ஏற்பட்ட பகையும் இந்த போருக்கு காரணம் என்பதால் அப்படி ஒரு பெயர்.
* சில நூற்றாண்டுகளுக்கு
முன்புவரை உப்பு உற்பத்தி அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. உப்பிற்கு அதிக வரி வசூலிக்கப்பட்டது. பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டதன் பின்னணியில் உப்பிற்கும் பங்கு இருக்கிறது. நமது நாட்டின் சுதந்திரப்போர் தீவிரம் அடைந்தது உப்பு சத்தியாகிரகத்திற்கு பின்புதான்.
* இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அதிக உப்பு உற்பத்தி செய்யப் படுகிறது. இரண்டாவது இடம் தமிழ்நாட்டிற்கு. தமிழகத்தில் தூத்துக்குடியில் மிகுதியாக உப்பு உற்பத்தி நடக்கிறது. இந்தியாவில் இமாசல பிரதேசத்தின் மாண்டி பகுதியில் பாறைகளில் இருந்து உப்பு வெட்டி எடுக்கப்படுகிறது.
* முதன் முதலாக உப்பில் அயோடின் (1924-ல்) கலந்து விற்பனை செய்தவர்கள் அமெரிக்காவின் 'மார்டான் சால்ட்' என்ற உப்பு நிறுவனத்தினர்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum