ஆல்பா நகரம் என்றால் என்ன?
Sat Mar 07, 2015 7:35 am
நாட்டின் முக்கிய பொருளாதார மையமாக திகழும் நகரை 'ஆல்பா நகரம்' என்று குறிப்பிடுவார்கள். அது சர்வதேச வணிக மையமாகவும் திகழும். பங்கு வர்த்தகம் மற்றும் முக்கியமான நிதி நிறுவன அமைப்புகளின் கூடாரமாக அந்த நகரம் விளங்கும். பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் தங்கள் நிறுவன கிளையை ஆல்பா நகரில் கொண்டிருக்கும். அதனால் முக்கிய ரியல் எஸ்டேட் மையமாகவும், நிறைய வங்கிப் பணிகள் மிகுந்த நகரமாகவும் ஆல்பா நகரம் விளங்கும்.
ஆல்பா நகரில் ஏற்றுமதி மையங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகள் அதிகமாக செயல்படும். சர்வதேச விமான நிலையமும், துரிதமான போக்குவரத்துக்கு உதவும் சாலைவசதி, பஸ் மற்றும் வாகன வசதி மிகுந்ததாக காணப்படும். புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி மையங்களும் பெருகி இருக்கும். ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு மையங்கள் அங்கே மையமிட்டிருக்கும். அதே நேரத்தில் முக்கிய கலாசார மையமாகவும், பிரபல சுற்றுலா நகரமாகவும் புகழ் பெற்று விளங்கும். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகராகவும், நாட்டு மக்களின் செல்வாக்கு மிக்க நகரமாகவும், உலகின் கவனம் ஈர்க்கும் நகராகவும் ஆல்பா நகரம் திகழும்.
'குளோபல் சிட்டி', 'வேர்ல்டு சிட்டி' என்ற பெயரிலும் ஆல்பா நகரங்கள் அழைக்கப்படும். இவை உலக அளவில் வழங்கப்படும் சிறப்பு பெயர்களாகும். இந்த நகரங்களின் பெயரைக் கேட்டாலே உலக மக்கள் அந்த நாட்டையும், அதன் முக்கிய இடங்களையும் நினைவு கூர்ந்துவிடுவார்கள்.
லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்கள் உலகின் 'ஆல்பா++' அந்தஸ்து பெற்ற நகரங்களாகும். இந்தியாவில் மும்பை 'ஆல்பா+' நகரமாக விளங்குகிறது. டோகியோ, துபாய், சிங்கப்பூர் ஆகியவையும் மும்பை போன்ற அந்தஸ்து கொண்ட ஆல்பா நகரங்களாகும். இதற்கு அடுத்த நிலையில் இருக்கும் நகரங்களை பீட்டா சிட்டி என்றும் காமா சிட்டி என்றும் தரம் பிரிக்கிறார்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum