சருமம் அதிக எண்ணெய் பசையோடு இருக்கா? அப்ப இத படிங்க..
Sat Mar 07, 2015 12:21 am
சிலருக்கு சருமத்தில் எண்ணெய் பசையானது அதிகம் இருக்கும். இவ்வாறு சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசையானது இருந்தால், நிறைய சருமப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிலும் சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் உள்ளது என்பதற்கான அறிகுறிகளான முகப்பரு, கரும்புள்ளிகள், பெரிய சருமத்துளைகள் போன்றவை. இத்தகையவை சருமத்தில் இருப்பதற்கு, எண்ணெய் சுரப்பியானது அதிகப்படியான எண்ணெய் சுரப்பதே ஆகும். சருமத்தில் எண்ணெய் பசை இருப்பதால் ஏற்படும் நன்மை என்னவென்றால், வறட்சி இருக்காது. ஆனால், அதுவே அதிகமானால், நிறைய கெடுதல்களை சந்திக்க நேரிடும். எனவே சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவது என்பது மிகவும் முக்கியம்.
சந்தனப் பொடி
சந்தனப் பொடியை, மூல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டரில் கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, பருக்களும் குறையும்.
தயிர்
தயிர் என்பது ஒரு நேச்சுரல் கிளின்சர். எனவே தயிரில் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் இருக்கும் அதிகமான எண்ணெய் பசையானது நீங்கிவிடும்.
வெள்ளரிக்காய்
குளிர்ச்சி மிகுந்த வெள்ளரிக்காயை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, முகத்தில் தடவினால், எண்ணெய் பசை நீங்குவதோடு, சரும அழகும் கூடும்.
ஆரஞ்சு
காய்ந்த ஆரஞ்சு தோலை அரைத்து பொடி செய்து, ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 காய வைத்து கழுவ வேண்டும்.
மூல்தானி மெட்டி
மூல்தானி மெட்டியை குளிர்ந்த நீரில் கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை போக்கலாம்.
கற்றாழை
கற்றாழையின் ஜெல்லை சருமத்தில் தடவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்குவதோடு, அதிகமான எண்ணெய் பசையையும் போய்விடும்.
ஆவி பிடித்தல்
வாரத்திற்கு ஒரு முறை ஆவிப் பிடித்து, பின் ஒரு ஈரமான துணியைக் கொண்டு, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்தால், சருமத்துளைகள் விரிவடைந்து, எண்ணெய் பசை நீங்கி, கரும்புள்ளிகள் வெளியேறிவிடும்.
மாய்ஸ்சுரைசர்
அதிகப்படியான எண்ணெய் பசை உள்ள மாய்ஸ்சுரைசர்கள் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். இவை நிலைமையை மோசமாக்கிவிடும். எனவே சருமத்திற்கு தகுந்த பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
ஃபேஷியல் வேண்டாம்
முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், அப்போது ஃபேஷியல் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை பருக்களை உடைத்து, அதிலிருந்து வரும் நீர்மம் முகத்தில் பரவி, அவற்றை அதிகமாக்கிவிடும்.
எண்ணெயில்லா உணவுகள்
எண்ணெயில் பொரித்த உணவுகள் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பானங்கள், காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum