செல்வமகள் திருமணத்திட்டம் - அஞ்சலகத்தில்
Thu Mar 05, 2015 2:14 am
நமது அஞ்சலகத்தில் புதிய நல்ல திட்டம் ஒன்றை அமுல் படுத்தபட்டுள்ளது. செல்வமகள் திருமணத்திட்டம் என அழைக்கப்படும் இத்திட்டத்தில் பத்து வயதிற்க்கு உட்பட்ட 02/12/2003 பிறகு பிறந்த பெண் குழந்தைகள் பதிவு செய்ய தகுதி பெற்றவர்களாவர்.!
முதன் முதலாக ₹1000 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து உங்கள் குழந்தைகளை இந்த திட்டத்தில் இணைக்கலாம்..!அதன் பிறகு மாதம் 100 ரூபாய் மட்டும் செலுத்தி வர வேண்டும்.இது 21 வயதை தொட்டதும் உங்கள் குழந்தையின் திருமணத்திற்காக ₹6,50,000-/- கிடைக்கும் .மத்திய அரசின் சிறப்பான திட்டம் அனைத்து பெண்குழந்தைகளுக்கும் கிடைக்கப்பெற்று வளமான வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.
மிக இலகுவான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்ய தேவையானவை.!
(1) தந்தையின் புகைப்படம் ஒன்று.மற்று இருப்பிடம் உறுதி செய்ய அடையாள அட்டை.(வாக்காளர் அட்டை. அல்லது ஆதார் அட்டை நகல் ஓன்று)
(2).பெண் குழந்தையின் பிறப்புச்சான்று நகல்
(3)₹1000 ஆயிரம் ரூபாய் பணம்.!
இது அனைத்து அஞ்சலகத்திலும்(post office)கிடைக்கப்பெறும்.!
- முத்துக்குமார்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum