ஹேட்டி மே வியாட் – Hattie May Wiatt
Wed Mar 04, 2015 4:05 pm
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாகானங்களில் ஒன்றாகிய பிலெதெல்பியாவில் ஏறக்குறைய 1883-ல் நடந்த உண்மைச் சம்பவம் இது. மூன்றரை வயதே ஆன அந்த சிறுமியின் பெயர் ஹேட்டி மே வியாட். ஞாயிறுக் கிழமை எப்போதும் போல உற்சாகமாய் ஞாயிறு சிறுவர் பள்ளிக்கு சென்றாள். சிறுவர்களுக்கான அந்த மெதொடிஸ்ட் சபையின் ஞாயிறு பள்ளி அறையானது மிகவும் சிறியது. ஆவலுடன் சென்ற ஹேட்டிக்கு அறையில் அமருவதற்க்கு இடம் இல்லாததால் சோர்வுடன் வெளியில் கண்ணீரோடு நின்று கொண்டிருந்தாள். இதை பார்த்த அந்த சபையின் போதகர் ரஸ்ஸல் கான்வெல், ஹேட்டியினை சபைக்குள் அழைத்துச்சென்று அவளைத் தேற்றினார். நாம் புதிய ஆலயத்தை கட்டப்போவதாகவும் அந்த ஆலயத்தில் நிச்சயம் அணைத்து குழந்தைகளுக்கும் இடமிருக்கும் என்றும் அவளை உற்ச்சாகப்படுத்தினார்.
அன்றிலிருந்து ஹேட்டி, தனக்கு கிடைக்கும் சிறிய தொகையை ஆலய கட்டுமான பணிக்காக சேர்த்து வைக்க ஆரம்பித்தாள். ஒரு வருடத்திற்க்கு மேலாக சேர்த்து வைத்ததின் விளைவாக 57-சென்ட் பணம் சேர்ந்தது. இந்த நிலையில் "டிபெத்திரியா" என்னும் வைரஸ் நோயால் ஹேட்டி பாதிக்கப்பட்டு மருத்துவ பலனின்றி தனது 5 வயதிலேயே மரித்துப்போனாள். இந்த சிறுமியின் புதிய ஆலய ஆசையும் ஏக்கமும் இதோடு முடிந்தது என்று எண்ணி அவளுடைய தாயார் மனவேதனையுடன் அடக்க ஆராதனைக்கு 57-சென்டு பணம் அடங்கிய அந்த சிறுபையை எடுத்துச் சென்றார்கள்.
சபையின் போதகர் ரஸ்ஸல் கான்வெல் அவர்கள் தாங்க முடியாத வேதனையோடு அடக்க ஆராதனையை நடத்தினார். ஹேட்டியின் தாயார் போதகரிடம், ஹேட்டி சபை கட்டுமான பணிக்காக சேர்த்து வைத்திருந்த 57-சென்ட் பணத்தைக் கொடுத்தார். இதை வாங்கிய ரஸ்ஸல் கான்வெலின் உள்ளம் நெகிழ்ந்தது. எப்படியாவது ஹேட்டியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணி புதிய ஆலய கட்டுமானப் பணிக்கான முதல் காணிக்கையாக ஹேட்டி சேர்த்து வைத்திருந்த 57- சென்ட் பணத்தை அங்கிகரிப்பதாக தனது சபையில் அறிக்கை செய்தார். இதைக் கேட்ட அநேகரது உள்ளம் உருகியது. புதிய ஆலயக் கட்டுமானப் பணிக்காக அநேகர் உற்ச்சாகமாய் கொடுக்கத் தொடங்கினர்.
உள்ளத்தை உருகவைக்கும் ஹேட்டியின் தியாகத்தை அறிந்த பிரபல செய்தித்தாள் நிறுவனம் இதை தனது செய்தித்தாளில் வெளியிட்டது. இந்த செய்தியை வாசித்த செல்வந்தர் ஒருவர் தனது நிலத்தை புதிய ஆலயத்திற்க்காக வெறும் 57-சென்ட் பணத்திற்க்கே கொடுத்தார். இப்படியாக அநேகர் உதாரத்துவமாக கொடுத்ததின் விளைவாக 25 இலட்சம் டாலர்கள் ($250,000) சேர்ந்தது. ஹேட்டியின் சுயநலமற்ற தியாகம் பிலெதெல்பியாவிலும் அமெரிக்கா முழவதும் ஒரு பெரிய எழுப்புதலை கொண்டுவந்தது. போதகர்.ரஸ்ஸல் கான்வெல் தலைமையில் இந்த நிதியிலிருந்து 3300 பேர் அமர்ந்து ஆராதிக்க கூடிய புதிய சபையும், 1400 மாணவர்கள் பயிலும் வேதாகம கல்லுரியும் 520 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையும், பிலெதெல்பியாவில் கட்டப்பட்டது. அந்த சிறுபெண் ஹேட்டியின் 57-சென்ட் பணம் அந்த நகரத்திலேயே மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது.
“ஹேட்டி மே வியாட்” 5 வருடமே இந்த உலகில் வாழ்ந்தாலும் அவளுடைய தியாகத்தால் அநேகர் சரீரத்திலும் ஆவியிலும் இன்றளவும் உயிரடைந்து வருகிறார்கள். உற்ச்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருப்பதை பார்க்கிறோம் (2 கொரி 9:7). நாமும் நம்மால் இயன்றதையும், நேரத்தையும் உற்ச்சாகமாய் கர்த்தரிடத்தில் கொடுக்கும் போது, தேவன் நம்மையிம் அநேகருக்கு ஆசீர்வாதமானவார்களாக ஏற்படுத்துவார். "ஹேட்டி மே வியாட்"-யைக் கொண்டு பெரியகாரியங்களை செய்தத கர்த்தர், நம்மைக்கொண்டும் மிகப்பெரியகாரியங்களை செய்வார். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum