சுவிசேஷத்தின் ரேட் மிகக் கடுமையாக ஏறிவிட்டது
Sat Feb 21, 2015 9:19 pm
(சுவிசேஷத்தையும் அதன் தொடர்பான நன்மைகளையும்) இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள் என்றார் இயேசு (மத்தேயு 10:.
சுவிசேஷத்தை அறிப்பவர்களுக்கு சுவிசேஷத்தால் பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தர் கட்டளையிட்டதாக பவுல் சொன்னார் (1 கொரி. 9:14). இங்கு பிழைப்பு என்பது உணவு/உடை போன்ற அடிப்படைத்தேவைகளை மட்டுமே குறிக்கிறது. ஆனாலும் இந்த உரிமையைத் தான் அனுபவிக்கவில்லை என அடுத்த வசனத்திலேயே பவுல் கூறினார்.
இப்படி மிகுந்த சுயமரியாதையுடன் அக்காலத்தில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு வந்து சுவிசேஷத்தை அறிவித்த மிஷனரிகள்கூட, தங்கள் உடைமைகளை விற்று கிடைத்த பணத்தைக் கொண்டு சுவிசேஷம் அறிவித்தனர்.
சுமார் 40 வருடங்களுக்கு முன்னர்கூட ஒரு சிறிய ஒலிபெருக்கியைக் கையில் வைத்துக்கொண்டு தெருத்தெருவாக சுவிசேஷம் அறிவித்தனர், பல சுவிசேஷகர்கள். ஆனால் அய்யகோ, சுமார் 30 வருடங்களாக இந்நிலை கடுமையாக மாறிவிட்டது.
ஆரம்பத்தில் சுவிசேஷம் அறிவிக்க இவ்வளவு செலவாகிறது என்று சொல்லி, ஜனங்களிடம் பணம் கேட்கத் தொடங்கினார்கள், சுவிசேஷகர்கள். இவ்விதமாக சுவிசேஷத்திற்கு மறைமுகமாக விலை (ரேட்) நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆளாளுக்கு பெரிய மேடை போட்டு சுவிசேஷம் அறிவிப்பதாகச் சொல்லி, ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்தனர். பின்னர் ஆயிரம் என்பது பத்தாயிரமாக மாறியது, பின்னர் அது லட்சமாக மாறியது. இப்படியாக ஏறிவந்த சுவிசேஷத்தின் ரேட், இன்று கோடிக்கணக்காகிவிட்டது.
ஆம், ஆல்வின் தாமஸ் என்பவருக்கு சுவிசேஷத்தை அறிவிக்க 2 கோடி தேவைப்படுகிறதாம். அதற்கென கொடுக்கக்கூடிய நபர்கள் தேவை என அவர் விளம்பரம் செய்துள்ளதை, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படத்தில் பார்க்கிறீர்கள்.
ஆலன்பால் என்பவருக்கு 20 கோடிக்கு மேலாக தேவைப்பட்டதை, தனது டிவி மூலம் சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இவ்வாறே பால் தினகரன், சாது செல்வராஜ், மோகன் சி லாசரஸ் போன்ற பலருக்கும் அவர்களது சுவிசேஷப் பணிக்காக கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுவதாக அவ்வப்போது அறிவிப்பதை நாம் பல்வேறு ஊடகங்களிலும் பார்க்கலாம்.
இதிலிருந்து நாம் அறிவதென்ன? இயேசுவின் காலத்தில் இலவசமாகக் கொடுக்கப்பட்ட சுவிசேஷத்தின் ரேட், இன்று மிகக் கடுமையாக உயர்ந்துவிட்டது என்பதே.
இந்த உயர்வுக்குக் காரணமென்ன? என்ன/ஏது என்ற கேள்வி கேட்காமல், இயேசுவின் பெயரைச் சொல்லி எவர் பணம் கேட்டாலும், பணத்தை அள்ளிக்கொடுக்கிற ஜனங்களாகிய நாம்தான்.
பணம் கேட்பவர்களின் செயல் வேதபோதனைக்கு உட்பட்டதா இல்லையா என்பதையெல்லாம் நாம் சிந்திப்பதில்லை. ஊழியத்தின் பெயரால் எவர் வந்தாலும் அவருக்குக் கொடுத்தால் நமக்கு இவ்வுலக ஆசீர்வாதம் கிடைக்கும் எனும் மூடத்தனமான எதிர்பார்ப்பால்தான் நம்மில் அநேகர் பணம் கொடுக்கிறோம்.
கேட்டால், இச்சிறியரில் ஒருவருக்குக் கொடுப்பவன் அதற்கேற்ற பலனை அடைவான் என இயேசு கூறியதாகக் கூறுகிறோம். உண்மையில் இயேசு என்ன சொன்னார்?
மத்தேயு 10:42 சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
பணம் அல்ல, தண்ணீர் கொடுப்பதைப் பற்றி இவ்வசனத்தில் இயேசு கூறுகிறார். இதன் விரிவாக்கமாக உணவு மற்றும் உடையைச் சேர்த்துக்கொள்ளலாம். மற்றபடி அவர்களின் ஆடம்பரச் செலவுகளுக்குப் பணம் கொடுப்பதைப் பற்றி இயேசு கூறவில்லை.
ஆனால் நாமோ அவர்கள் ஆடம்பரமாகக் கட்டுகிற கட்டடங்களுக்கும் பிற செயல்களுக்கும் பணத்தை வாரிவழங்குகிறோம். நம்மை நன்றாகப் புரிந்துகொண்ட அவர்களும், ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு, கோடிக்கணக்காகப் பணம் கேட்கின்றனர். அவர்களுக்கு நாம் கொடுக்கிற வரை அவர்கள் கேட்டுக்கொண்டேதான் இருப்பார்கள்; அது ஒரு நாளும் ஓயாது.
நன்றி: ரூபன்சாம் - முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum