வரலாற்றுப் பிழை செய்யும் வருவாய்த்துறை !!!
Fri Feb 20, 2015 9:53 pm
தமிழக மக்களின் நெஞ்சம் முழுதும் பரவிக் கிடக்கும் வருவாய்த்துறையின் லஞ்சம் பற்றிய ஒரு பார்வை ஒரு காட்சியாக உங்கள் முன் !
1. ராமசாமி (வயது 27) : ஐயா ! வணக்கம் ! வயசு சர்டிபிக்கேட்டு வேணுங்கண்ணே. கண்ணாலம் பண்ணணும்.
V. A. O. : பார்ரா... அதுக்கென்னப்பா 500 வெட்டு. கொடுத்துரலாம்.
2. ராமசாமி (வயது 29) : அண்ணே ! பையன் பொறந்திருக்கான். பொறந்த சர்டிபிக்கேட்டு வேணுங்கண்ணே.
V. A. O. : நல்ல விசயம் ராமசாமி. 700 வெட்டு. கொடுத்துரலாம்.
3. ராமசாமி (வயது 34) : அண்ணே ! பையன இசுகூலுல சேர்த்தேன். அவைங்க சாதி சர்டிபிக்கேட்டுக் கேக்கறாங்க.
V. A. O. : பார்ரா... இப்போதான் பொறந்த சர்டிபிக்கேட் கொடுத்த மாதிரி இருக்கு. சரி சரி ஒரு 2000 வெட்டு. மேல ஐயாங்ககிட்ட எல்லாம் கையெழுத்துப் போட்டு கலர் அட்டைல வரும்.
4. ராமசாமி (வயது 54) : ஐயா ! பையன் வேலைக்குப் போகணும். இருப்பிட சான்று வேணுங்கய்யா.
V. A. O. : நல்ல விசயம்யா. ஒரு 4000 கொடு. கை நிறைய சம்பளம் வாங்க போறான்.
5. ராமசாமி (வயது 57) : ஐயா ! பையனுக்குக் கண்ணாலமுங்க. அதுக்கு இன்னாரு மகன் இன்னாருனு ஒரு அடையாள சான்று வேணுமுங்க.
V. A. O. : உன் பையனுக்குக் கண்ணாலமா? சந்தோசம்யா. ஒரு 5000 கொடு. பெரிய இடத்துச் சம்பந்தம். நல்லபடியா பண்ணிரலாம்.
6. கிருஷ்ணன் s/o ராமசாமி : வணக்கம் சார் ! அப்பா இறந்துட்டாரு. மின் மயானத்துல சர்டிஃபிக்கேட் கேக்கறாங்க சார்.
V. A. O. : அட ராமசாமி மகனா நீங்க ? கியுவ்ல நாலு பொணம் கெடக்கு. அப்பா நம்ம ஃபெரண்டுதான். சரி ஒரு 1500 கொடுங்க. முன்னாலேயே முடிச்சிரலாம்.
7. கிருஷ்ணன் s/o ராமசாமி : சார் ! அப்பாவோட டெத் சர்டிஃபிக்கேட் வேணும்.
V. A. O. : என்னப்பா கிருஷ்ணா அப்பாவ பத்தி கொஞ்சம் கசமுசான்னு பேசிக்கிறாங்க. மேல பெரிய ஐயா வரைக்கும் போகணும். 9000 ஆவும்பா. அப்பான்னா கேக்காம கொடுப்பாரு. பாவம் அவரு போய்ட்டாரு.
V. A. O. கொடுத்த தனது தந்தையின் இறப்புச் சான்றிதழைக் கிருஷ்ணன் பார்த்துக்கொண்டிருந்தபோது, பின்னால் அவர் மகன் கார்த்தியின் குரல் கேட்டது. "அப்பா ! அப்பா ! மிஸ் நாளைக்கு எல்லாரும் கண்டிப்பா ஜாதி சர்டிபிக்கேட் எடுத்துக்கிட்டு வரணும்னு. இல்லனா வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்கப்பா...".....................
நன்றி: உங்களுக்கு வந்த பதிவு
Permissions in this forum:
You cannot reply to topics in this forum