கற்பூரம் கொளுத்தினால் புற்றுநோய் வரும் !
Fri Feb 20, 2015 12:57 am
இது எப்படி இருக்கு?
கற்பூரம் கொளுத்தினால் புற்றுநோய் வரும் !
-தாசங்லின்,விஞ்ஞானி, தைவான் பல்கலைக்கழகம்.
கற்பூரத்திலிருந்து வரும் புகை ஒரு கிருமிநாசினி!
-இராமகோபாலன், நம்மூர் விஞ்ஞானி
கற்பூரம் ஏற்றுவதால் எங்களுக்கு உடல்நலக்கேடு ஏற்படுகிறது. கற்பூரம் ஏற்ற அரசு தடை விதித்திருப்பதை வரவேற்கிறோம்!
-திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயில் அர்ச்சகர்
நன்றி: முகநூல் - Dhalapathi Raj

Re: கற்பூரம் கொளுத்தினால் புற்றுநோய் வரும் !
Fri Feb 20, 2015 1:03 am
கற்பூரம்-பார்ப்பனர்களின் இரட்டை வேடத்தைப் பார்த்தீர்களா?
கற்பூரம்
கோவில் பூஜைகள்பற்றிக் கொட்டிக் கொட்டி அளப்பார்கள்; சூடம் கொளுத்துவதில் உள்ள தாத்பரியத்தை சுவை சொட்ட சொல்லுவார்கள்.
சாம்பிராணி என்றால் சாதாரணமா - அதில் உள்ள சமாச்சாரங்கள் சாதாரணமானவை யல்ல என்று சண்டமாருதம் செய்வார்கள்.
ஆனால், இந்து அறநிலை யத்துறை தெரிவித்துள்ள தகவல்களோ அவர்களின் அடிமடியில் கைவைக்கும் அவல நிலைதான்.
6.12.2014 நாளிட்ட இந்து ஏட்டில் வெளிவந்துள்ள ஒரு தகவல் என்ன கூறுகிறது?
Ban on Chmphor use in Temples to be Strictly Enforced
கோவில்களில் கற்பூர ஆராதனை கண்டிப்பாகத் தடை செய்யப்படுகிறது என்று இந்து அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
இப்பொழுது மட்டுமல்ல, 2001 ஆம் ஆண்டிலேயே இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் இப்படி ஒரு செய்தி வெளி வந்ததுண்டு (4.8.2001).
ஆண்டவன் அருளைப் பெறவேண்டிய பக்தர்கள் கோவில்களில் கற்பூரம் கொளுத்துவது, சாம்பிராணி தூபம் காட்டுவது சகஜம். ஆனால், காற்றோட்டமில்லாத கருவறைக்குள் சுற்றிக்கொண் டிருக்கும் இவற்றின் புகை புற்றுநோயை உண்டாக்குவதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (கடவுளை நம்பிப் பயனில்லை).
சாதாரணமாக ஒரு பூட் டப்பட்ட அறையிலோ அல்லது காற்றோட்டமில்லாத வீட்டிலோ சாம்பிராணி புகை போட்டால், அது நுரையீரல் புற்றுநோயைத் தோற்றுவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகையை எந்த முறையில் பயன்படுத் தினாலும், புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக் கப்பட்டுள்ள உண்மை. புகைப் பிடிப்பதால் ஏற்படும் தீமையை விட நாற்பது மடங்கு அதிகமாக சாம்பிராணி கற்பூரப் புகையால் புற்றுநோய் உறுதிப்படுத்தப் படுகின்றன!
இந்த ஆய்வு தைவானில் உள்ள தேசிய சேங்குப் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த தாசங்லின் என்பவரால் நடத் தப்பட்டது. அவர் பேட்டியை நியூ சைன்டிஸ்ட் என்ற ஏடு வெளியிட்ட தகவலைத்தான் இன்றைக்கு 13 ஆண்டுகளுக்கு முன் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு தெரிவித்தது.
இந்தச் செய்தி அப்பொழுது வெளிவந்தபோது இந்து முன் னணியின் மாநில அமைப்பாளர் திருவாளர் ராம.கோபாலன் என்ன கூறினார் தெரியுமா?
கற்பூரத்தில் இருந்துவரும் புகை ஒரு கிருமி நாசினி; (பெரிய விஞ்ஞானிதான்!) கற்பூரம் பல ஆயிரம் ஆண்டு காலமாக இந்துக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பூஜை முறையிலும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. கோவில்களில் கற்பூரம் ஏற்ற பொதுமக்கள் வற்புறுத்தவேண்டும் என்று கூறினார் (ஆதாரம்: தினத் தந்தி, 3.6.2002, பக்கம் 4).
இவர் இப்படி சொன்னார் என்றால், கோவிலில் சூடம், சாம்பிராணி கொளுத்துவது தடை செய்யப்பட்டு இருப்பது குறித்து சென்னை திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் என்ன சொல்லுகிறார்?
கோவில் கர்ப்பக்கிரகத்தில் ஏற்றுவதால் அர்ச்சகர்களுக்கு உடல்நலக் கேடு ஏற்படுவதால் இந்தத் தடை ஆணையை வரவேற் பதாகக் குறிப்பிட்டுள்ளார் (தி இந்து, 6.12.2014).
இந்தப் பார்ப்பனர்களின் இரட்டை வேடத்தைப் பார்த்தீர்களா? பிழைக்கத் தெரிந்தவர்கள்!
கழுதைக்குக் கற்பூர வாசனை தெரியாவிட்டால் பரவாயில்லை; மனிதனுக்குக் கண்டிப்பாகத் தெரியவேண் டும், எச்சரிக்கை!
-------------- மயிலாடன் அவர்கள் 16-02-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum