பிதாகரஸ் தேற்றம்
Tue Mar 05, 2013 12:17 am
பிதாகரஸ் தேற்றம் பல கணக்குகளுக்கு அடிப்படையானது.
தேற்றம் என்பதனை நம்மில் பலர் AC SQUARE = AB SQUARE + BC SQUARE என்பதனை
மட்டும் நினைவில் வைத்து இருப்போம், அது எப்படி இந்த ஃபாமுலா வந்தது என்று
தெரியாமலே.
சுருக்கமாக கூறின்...
""ஒரு செங்கோண முக்கோணத்தின்
கர்ணத்தின் மீது வரயபட்ட சதுரத்தின் பரப்பளவானது , மற்ற இரு பக்கங்களின்
மீது வரையப்பட்ட சதுரங்களின் பரப்பளவுகளின் கூட்டுத் தொகைக்கு சமம்.""
படத்தின் படி AC SQUARE என்பது கர்ணத்தின் மீது வரையபட்ட சதுரத்தின் பரப்பளவு (C)
AB SQUARE, BC SQUARE என்பது மற்ற இரு பக்கங்களின் மீது வரையபட்ட சதுரங்களின் பரப்பளவுகள் ( A மற்றும் B)
அதாவது C யின் பரப்பளவு, A மற்றும் B யின் பரப்பளவுகளை கூட்டினால் சமமாக இருக்கும்.
இன்று
நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் தியரம் (Pythagoras
Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே,
போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.
"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே."
- போதையனார்
இக்கணிதகூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே."
- போதையனார்
முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான
இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள்
கணக்கிடப்பட்டுள்ளன.
போதையனார் தியரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் (Square root) இல்லாமலேயே, நம்மால் இக்கணிதமுறையை பயன்படுத்த முடியும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum