மின் உபயோகத்தைக் குறைக்க சில டிப்ஸ்! ! ! !
Thu Feb 05, 2015 8:55 am
• மோட்டாரிலிருந்து தண்ணீர் தொட்டிக்கு செல்லும் குழாய்களை அதிக வளைவில்லாமல் பொருத்தினால்தண்ணீர் விரைவாக மேலேறும்; மின்சாரமும் மிச்சமாகும்.
• காய்ந்த துணியில் தண்ணீர் தெளித்து அதன்மீது இஸ்திரி போட்டால் மின்சாரம் அதிகமாக செலவாகும்.
• தானாக "டீஃப்ராஸ்ட்' ஆகாத ஃபிரிட்ஜாக இருந்தால் ஐஸ்கட்டி அதிகமாக பிடித்துப் போகாமல் அடிக்கடி "டீஃப்ராஸ்ட்' செய்யுங்கள். இல்லாவிட்டால் அதிக மின்சாரம் செலவாகும்.
• கோடை காலங்களில் வாஷிங் மெஷினில் துவைக்கும் பகுதியை மட்டும் பயன்படுத்தவும்.டிரையரை குளிர், மழை காலங்களில் மட்டும் பயன்படுத்தினால்மின்சாரம் மிச்சமாகும்.
• கம்ப்யூட்டரை ஸ்டார்ட் செய்ய, ஷட்டௌவ்ன் செய்ய சோம்பற்பட்டு ஸ்க்ரீன் சேவரில் போட்டு வைப்பதால் மின்சாரம் பெரிய அளவில் விரயமாகும்.
• ஏசி-யை வருடத்திற்கு இருமுறை சுத்தம் செய்யுங்கள். ஏசி ஃபில்டரை மாதாமாதம் சுத்தம் செய்யுங்கள். இதனால் மின்சாரம் விரயமாவதைத் தவிர்க்கலாம்.
• ஃப்ரிட்ஜின் கதவு சரியாக மூடாமலிருந்தாலும், அடிக்கடி ஃப்ரிட்ஜின் கதவைத் திறந்து மூடினாலும் மின்சாரம் பாழாகும்.
• நீண்ட நாள்களுக்கு வெளியூருக்குச் சென்றால் ஃபிரிட்ஜை அணைத்துவிடுவதன்மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம்.
• பல்புகளின் மீதுள்ள தூசியை துடைத்து வைத்தால் அதிக வெளிச்சம் கிடைப்பதோடு, மின்சாரமும் மிச்சமாகும்.
• பயன்படுத்திய விளக்குகள், மின்விசிறி, டிவி, கம்ப்யூட்டர் என அனைத்தையும் அணைத்தபிறகே அறையைவிட்டு வெளியேறுங்கள்.
• கூடியவரை வீட்டில் பலர் ஒரே அறையில் இருந்து படிப்பது, டிவி பார்ப்பது என திட்டமிட்டால் மின்சார செலவு குறையும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum