அமெரிக்க பட்டப் படிப்பு வேண்டுமா?
Thu Jan 22, 2015 1:07 pm
யார் வேண்டுமானாலும் படிக்கலாம். எந்த ஒரு படிப்பையும் படிக்கலாம். ஒரு வாரத்தில் சுமார் 6 மணி நேரம் மட்டுமே செலவழித்து, உங்கள் வாழ்நாளில் நீங்கள் கற்க வேண்டிய அனைத்துப் படிப்புகளையும் படிக்கலாம்.
சரி எவ்வளவு காசு செலவாகும்? உங்களுக்கு verified சான்றிதழ் வேண்டாம் எனில், இந்த படிப்பு அத்தனையும் ஒரு காசு கூட செலவில்லாமல்.
ஆனால் உங்களுக்கு இந்த சான்றிதழை உங்களது பயோ டேட்டாவில் பயன் படுத்துவீர்களே ஆனால், அந்த பல்கலைக் கழகம் நீங்கள் படித்துப் பெற்ற பட்டம் உண்மையானது என்று தங்கள் வலைத் தளத்தில் பதிப்பிப்பார்கள். உங்களது சான்றிதழும் சரிபார்க்கப் படும். இதற்காக 40 டாலர்கள் (ரூ. 2400) வசுலிக்கிறார்கள்.
பல அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் இணைந்து இந்த ஒரு நெட்வொர்க்கை உருவாக்கி இருக்கிறார்கள். நல்ல நல்ல ஆசிரியர்கள் விடியோ மூலமாக உங்களுக்கு போதிக்கிறார்கள். பொறுமையாகக் கேட்டு பதில் எழுதலாம். பதில் எழுதும்போது நீங்கள் உங்களது புத்தகத்தையோ விடியோவையோ திறந்து வைத்துக் கொள்ளலாம். வெளிப்படையான படிப்பிக்கும் முறையைக் கையாள்கிறார்கள்.
இது தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும், பணியில் அடுத்த கட்ட படிக்கட்டில் ஏற இருக்கும் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கீழ்க் காணும் வலைத் தளத்தில் உங்களுக்குத் தேவையான கோர்ஸ் இருக்கிறதா என்று தேட வேண்டும். அது என்று தொடங்குகிறதோ அதற்கு முன்பாக உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பாடங்கள் தொடங்கும் முன் உங்களது இமெயிலில் பேராசிரியர்கள் தொடர்பு கொள்கிறார்கள். நீங்கள் அந்தப் படிப்பை முடிக்கும் வரை உங்களுக்கு ஓபன் ஃ போரம் மூலமாக எல்லா உதவிகளும் செய்கிறார்கள்.
இந்தப் பட்டயப் படிப்புகள் 6 அல்லது 8 அல்லது 10 வாரங்கள் வரையே.
மிகச் சுலபமாக புரியும் வகையில் சப் டைட்டிலுடன் பாடங்கள் விடியோ படுத்தப் பட்டுள்ளன.
கடந்த 6 மாதங்களில் நான் 3 படிப்புகளை முடித்து விட்டேன்.
முயன்றால் உங்களாலும் முடியும்.
வாழ்த்துக்கள்
டி.பெட்
Links
www.Coursera.org
www.Alison.com
நன்றி: டிமிடித் பெட்கோவ்ஸ்கி - முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum