ஜல்லிக்கட்டு ...
Tue Jan 20, 2015 8:09 pm
ஜல்லி என்பது விழாவின் போது புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் மாட்டப்படும் வளையத்தினைக் குறிக்கிறது. எனவே ஜல்லியை கட்டுதல் என்ற பொருளில் ஜல்லிக்கட்டு என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
அதேபோல 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. அவ்வாறு மாட்டை அடக்கும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்த பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிகட்டு' என்று மாறி பின்னர் 'ஜல்லிக்கட்டு' என்று ஆனதாக ஒரு கருத்து நிலவுகிறது.
இதுதவிர தனித்தமிழில் ஏறுதழுவல் அல்லது ஏறுதழுவுதல் என்றும் ஜல்லிக்கட்டு குறிப்பிடப்படுகிறது. அதாவது ஏறு எனும் காளை மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு என்பதால் இப்பெயர் பெற்றது.
தமிழகத்தை பொருத்தவரை மதுரை மாவட்டத்தில் ஆண்டு தோறும் முதலில் அவனியாபுரத்திலும், அதன் பிறகு பாலமேட்டிலும், பின்னர் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு அடுத்தடுத்து நடத்தப்படுகிறது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum