உ.வே.சாமிநாதய்யர் ...
Tue Jan 20, 2015 8:06 pm
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் மாணவப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சி இது.
அவருடைய தாத்தா, ""சாமிநாதா, நீ ஆங்கிலம் படிக்க விரும்புகிறாயா, சமஸ்கிருதம் படிக்க விரும்புகிறாயா?'' என்று கேட்டார்.
அதற்கு சுவாமிநாதர், ""நான் தமிழ் படிக்க விரும்புகிறேன்..'' என்றார்.
தாத்தா உடனே, ""நீ ஆங்கிலம் படித்தால் பூலோகத்தில் பெருமையுடன் வாழலாம். சமஸ்கிருதம் படித்தால் மேலோகத்தில் பெருமையுடன் வாழலாம். இரண்டும் இல்லாமல் தமிழ் படிக்கப் போகிறேன் என்று சொல்கிறாயே?'' என்று கேட்டார்.
சுவாமிநாதரிடமிருந்து உடனடியாக பதில் வந்தது, ""தாத்தா, ஆங்கிலம் படித்தால் பூலோகத்தில் பெருமையுடன் வாழலாம். சமஸ்கிருதம் படித்தால் மேலோகத்தில் பெருமையுடன் வாழலாம். தமிழ் படித்தால் இரண்டு லோகங்களிலும் பெருமையுடன் வாழலாம்!'' என்று கூறினார்.
இந்தத் தமிழ்ப்பற்றினால்தான் அழியும் நிலையில் இருந்த எண்ணற்ற சாகாவரம் பெற்ற நூல்களை அச்சுப் பதிப்பேற்றி அழியாமல் காப்பாற்றினார் உ.வே.சாமிநாதய்யர்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum