"ஆட்டுக் கறி பொடிமாஸ்" மற்றும் இஞ்சி தொக்கு
Mon Jan 19, 2015 10:10 pm
பொடி மாஸ்
கொத்துக்கறி –¼கிலோ
கடலைப்பருப்பு – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சைமிளகாய் -4
பூண்டு – 5 பல்
இஞ்சி –சிறிது
தாளிக்க:
பட்டை –சிறிதளவு
சோம்பு –சிறிதளவு
உளுந்தம்பருப்பு –சிறிதளவு
துருவிய தேங்காய் – ¼கோப்பை
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மிளகாய்தூள் – 1 தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயம்,பச்சைமிளகாய்,பூண்டு,இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
சட்டியில் எண்ணெய் ஊற்றி பட்டை,சோம்பு போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,பூண்டு,இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின் கொத்துகறியையும் நன்கு வதக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றி தேவைக்கு ஏற்ப மிளகாய்தூள்,உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்தவுடன் கடலைப்பருப்பையும்,தேங்காய் துருவலையும் சேர்த்து இறக்கவும். சுவையான பொடிமாஸ் தயார்.
குறிப்பு: இதில் முட்டையை அவித்து வெள்ளை கருவை மட்டும் சிறு துண்டுகளாக நறுக்கி போடவும்.
*************************************************************************************************************************************
இஞ்சி தொக்கு
இஞ்சி – 50 கிராம்
மிளகாய்தூள் – 2 தேக்கரண்டி
உப்பு –தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
இஞ்சியை தோல் சீவி துருவி வைத்துக்கொள்ளவும்.
சட்டியில் எண்ணெய் ஊற்றி துருவலை நன்கு வதக்கவும். மிளகாய்தூள், உப்பு இவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இது தயிர் சாதத்திற்கு ஏற்றது. செறிமானத்திற்கு மிக நல்லது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum