எத்தனை பெண்களிடன் இந்த செல் நம்பர் உள்ளது.....? 9962500500
Mon Jan 19, 2015 6:00 pm
ரயில் பயணங்களில் இருக்கும் எத்தனை பெண்களிடன் இந்த செல் நம்பர் உள்ளது.....? 9962500500
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்காக செய்திசேகரிக்க சென்று பணியை முடித்துவிட்டு வீடு திரும்ப இன்று அன்ரிசர்வ்டு வைகை எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் ஏறினேன். வழக்கம் போல கூட்டநெரிசல். நிற்பதற்குக்கூட இடமில்லை. ஆனால், மேலே உட்கார இடம் இருந்தபோதும் மற்றவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இடம் கொடுக்காமல் படுத்துக்கொண்டார்கள் ஆண்கள். ஒருவரை எழுப்பிய போது, கொடூரமாக முறைத்து, “எழுந்திருக்க முடியாது என்ன இப்போ.....?” என்று மிகத் திமிறாக பேசிவிட்டு படுத்துக்கொண்டார். எவ்வளவோ சொல்லியும் எழுந்திருக்காதவர் மீது எனக்கு கோபம் உண்டானது.
உடனே, ட்ரெயின் கம்ப்ளைண்ட் நம்பர் 9962500500 க்கு தொடர்புகொண்டு சொன்னேன். ட்ரெயின் அரியலூர் வந்ததுமே ஐந்துக்குமேற்பட்ட போலீஸார் அவரை மட்டுமல்ல, மேலே படுத்துக்கொண்டு மற்ற பயணிகளுக்கு இடம் கொடுக்காமல் இருந்த அத்தனை பேரையும் எழுப்பி எச்சரித்துவிட்டு சென்றனர். அங்கு இருந்த பெண்கள் மட்டுமல்ல, ஆண்களூம் என்னை மனதார பாராட்டினார்கள்.
இது, சாதாரண விஷயம் என்றாலும்கூட ரயில் பயணங்களில் இருக்கும் எத்தனை பெண்களின் செல்ஃபோனில் இந்த செல் நம்பர் உள்ளது...? “ஏற்கனவே, பெண்களுக்கு உதவும் ஹெல்ப்லைன் நம்பர்களை தொகுத்து புதிய தலைமுறையில் கட்டுரை எழுதியிருக்கிறேன். அதில், எழுதப்பட்ட நம்பரில்தான் இன்று புகார் கொடுத்தேன். மிக்க நன்றி” என்று மறுபடியும் போலீஸ் பெண்மணியிடம் சொன்னபோது அவருக்கு அப்படியொரு சந்தோஷம்.......!
சில நேரங்களில் போலீஸுக்கு சல்யூட் அடிக்கத்தோன்றுகிறது! உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum