பாடல் பிறந்த வரலாறு
Thu Jan 08, 2015 3:01 am
அன்பே ! அன்பே ! அன்பே !
ஆருயிர் உறவே
ஆனந்தம் ! ஆனந்தமே !
ஒருநாள் உம் தயை கண்டேனையா
அந்நாளென்னை வெறுத்தேனையா
உம்தயை பெரிதையா - என் மேல்
உம் தயை பெரிதையா
இந்த பாடலை தமிழ் கிறிஸ்தவர்கள் நன்கு அறிவார்கள். இந்த பாடலை எழுதிய காரணமாயிருந்த சம்பத்தை நீங்கள் அறிந்தால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் பேய்குளம் என்ற ஊரில் இருந்து சுமார் இருபது மைல் தூரத்தில் கருங்குளம் என்ற ஊர் உள்ளது. பேய்குளத்தில் இருந்து நேராக வடக்கு நோக்கி நடந்து போனால் சுமார் நான்கு மணி நேரத்தில் கருங்குளம் போய் சேரலாம். பிரசிங்கியார் பால் என்பவர் அந்த பகுதியில் அந்த நாட்களில் ஊழியம் செய்து வந்தார். ஒருநாள் இவர் தம் மூலமாக இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட நபரை சந்திக்கும் படியாக பேய்குளத்திலிருந்து கருங்குளத்திற்கு புறப்பட்டார். காலையில் எட்டுமணிக்கு பேய்குளத்தில் இருந்து கருங்குளம் வழியாக திருவைகுண்டம் போகும் பேருந்து அன்று வரவில்லை. ஆகவே பால் பிரசிங்கியார் பேய்குளம் சாலையில் கருங்குளம் நோக்கி நடக்க ஆர்மபித்தார்.
அவரின் காலை சாப்பாடு வயிற்றிற்குள் எதோ செய்யவே, கொஞ்சம் ஒதுங்கினால் நல்லது என்று நினைத்து தூரத்தில் தெரிந்த ஒரு கிணற்றை நோக்கி நடந்தார். கால் கழுவதற்காக கிணற்றை எட்டிப் பார்த்தார். பதினைந்து அடிக்கு கிழே தண்ணீர் இருந்தது. கிணற்றின் உள்பக்க சுவரில் கால்மிதத்து இறங்க ஒருகல் படிக்கட்டு இருந்தது. பால் பிரசிங்கியாருக்கு வலது கை சரியாக வேலை செய்யாது. அதாவது முழுவதுமாக மேல்நோக்கி தூக்க முடியாது. இலகுவாக இறங்கி கால்களை கழுவிய பின்பு, ஒரு கையால் மேலே உள்ள கல்லை பற்றிபிடித்து கொண்டு உடம்பை மேல் நோக்கி தூக்கினார். ஆனால் அவரால் மேல் நோக்கி எழும்ப முடியவில்லை. மொத்த பாரமும் அவரை கீழ்நோக்கி இழுக்கவே, பால் பிரசங்கியாருக்கு நன்றாக புரிந்து விட்டது, நிச்சயமாக தன்னால் மேலே ஏறமுடியாது என்று.
கிணற்றில் ஓரமாக நின்று கொண்டு யோசித்தார். இது பலரும் வந்து போகும் இடம் அல்ல. யாராவது வரலாம். வராமலும் இருக்கலாம். எப்போது யார் வருவார்கள்..? .அதுவரைக்கும் காத்திருக்க வேண்டுமா...பல யோசனைகள் சிந்தையில் எழவே, கிணற்றில் ஓரமாக அடிப்பாகம் நோக்கி போகும் படிக்கட்டில் ஓரமாக இருந்து கண்களை முடிக்கொண்டார். மனது நம்பிக்கை இழக்காமலிருக்க வேண்டுதல் செய்தார்.
இந்த கிணற்றுக்குள் சமாதியாகவா கர்த்தர் என்னை ஊழியத்திற்கு அழைத்தார். கண்ணீர் விட்டு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தார். ஒரு ஓரமாய் கண்களை மூடிதியானத்தில் இருந்தவருக்கு யாரோ பிடித்து தள்ளுவது போல உணர்ந்தார்.திடுக்கிட்டு கண்ணை திறந்து பார்த்தார். ஆச்சரியம். கிணற்றின் அடியில் உட்கார்ந்திருந்தவர், கிணற்று கரையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். வானத்தை அண்ணார்ந்து பார்த்து கண்ணீர் விட்டார். “அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவே..ஆனந்தம் ஆனந்தமே..” என்ற பாடல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து பிறந்தது. இந்தபாடல் இன்று வரை அனேக திருச்சபைகளில் பாடப்பட்டு வருகின்றது.
நன்றி : நெல்லை சாலொமோன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum