இதுதான் இந்தியாவின் அரசியல்!
Sat Dec 27, 2014 1:25 pm
.
இந்திய விடுதலைப் போராட்டம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த சமயம், 1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.
சுதந்திரம் கேட்டுப் போராடினாயா" நீதிபதி கேட்கிறார். "இல்லை நான் போராடவில்லை...என்னை விட்டுவிடுங்கள் " என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை.. இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்!
அதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது!
சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை. போராளிகள் ஒருவரைக்கூட அவன் காட்டிக்கொடுக்கவில்லை!
கோபத்தின் உச்சத்தில் அதிகாரி ஒருவன் அந்த இளைஞனின் மீசையை தன் கையிலிருந்த சிகெரெட்டால் சுட்டுக் கருக்குகிறான். அந்த இளைஞனின் நெஞ்சுறுதியை குலைக்க முடியவில்லை.
தண்டனை வாங்கிக் கொண்டு, விடுதலை கனல் நெஞ்சில் எறிய சிறை புகுகிறான் அந்த இளைஞன்!
நாடு விடுதலை அடைகிறது...!
50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தமண்ணில் தேர்தல் நடக்கிறது. அன்று காட்டிக் கொடுத்த அந்த வடநாட்டு இளைஞன் இந்தியாவின் பிரதமர் ஆகிறார். சித்ரவதைகளை அனுபவித்து சிறைவாசம் கண்ட தமிழ்நாட்டு இளைஞன் ஒரு சாதாரண சின்னப் பையனிடம் தேர்தலில் தோற்றுப் போகிறான்!
அந்த வடநாட்டு இளைஞன் வாழ்வின் எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறான்.
இவனோ, துறவி போல மக்கள் நல அரசியலை முன்னெடுத்துப் போராடுகிறான்.
அவன், ஒரு குறிப்பிட்ட வயதோடு அரசியல் போதும் என்று ஓய்வெடுத்துக் கொள்ளப் போகிறான்.
இவனோ, மரணிக்கும் வரையும் ஓய்வு கிடையாது என்று சொல்லி, மண்ணின் வளம் கொள்ளை போவதையும், நதிகளை மீட்கவும் காலம் பார்க்காமல் உழைக்கிறான்!
90 வயது முடியும் போது, ஓய்வில் இருக்கும் அந்த வடநாட்டு இளைஞனுக்கு "பாரத ரத்னா" விருது கிடைக்கிறது!
இந்த தமிழ்நாட்டு இளைஞனுக்கு பிழைக்கத் தெரியாதவன் என்னும் பழிச்சொல் பரிசாகக் கிடைக்கிறது!
இதுதான் இந்தியாவின் அரசியல்! தர்மம் வெல்லும்... உண்மை வெல்லும் என்று சொல்வதெல்லாம் நமது அரசியலுக்குப் பொருந்தாது என்கிற எண்ணமே மேலோங்குகிறது!
1924 டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவர் அந்த வடநாட்டு இளைஞர் அடல் பிஹாரி வாஜ்பாய்
1925 டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவர் இந்தத் தென்னாட்டு இளைஞர்.அய்யா. நல்லக்கண்ணு
அன்று அவர் தேசத் துரோகி,,,, இன்று தேசபக்தர்
அன்று இவர் விடுதலைப் போராட்ட தியாகி,,, இன்று தேசவிரோதி.
நன்றி --- Dhamu Tharan -
பூ.பாண்டிய முத்துக் குமரன் via Jothimani Sennimalai - முகநூல் - கேள்வி கேட்போர் சங்கம்
Re: இதுதான் இந்தியாவின் அரசியல்!
Sun Dec 28, 2014 7:53 am
நம்ம நாட்டுல இருக்குற விவசாயிங்க எல்லாம் முட்டாள் பசங்க...சார்... ஆமா. யாருக்குமே விவசாயம் பண்ண தெரியல...
பின்ன என்ன சார்.... ஒரு பொண்ணு...வெறும் 10 ஏக்கர் நிலத்தை வச்சுக்கிட்டு, 2009-ல் ரூ. 50 கோடி சம்பாதிச்சிருக்கு .... 2014-ல அதே 10 ஏக்கர் நிலத்தை வச்சுக்கிட்டு ரூ. 113 கோடி சம்பாதிச்சிருக்கு ....
இதை நாம் வருமான வரித்துறை இந்த பொண்ணு தாக்கல் செஞ்ச IT ஆவணங்களை அங்கீகரிச்சு விவசாயத்துல வர்ற வருமானத்துக்கு வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லைன்னு ஒத்துக்கிட்டிருக்கு ...
இதோ..இந்த சார்...ஏதோ கேக்குறார்.... சொல்லுங்க சார்.. அந்த திறமைசாலி பொண்ணு யாருன்னு தானே கேக்குறீங்க.... அவங்க வேற யாரும் இல்லை சார்... நம்ம நாட்டிலேயே மிகவும் ஏழைக்குடும்பதில் பிறந்து ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்குற நம்ம முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் இருக்காரே.. அவரோட மகள் தான் இவங்க......அவங்க பேரு....Supriya Sule.... ஆனா என்ன இவங்க எப்படி விவசாயத்துல இவ்ளோ பணம் சம்பாரிச்சாங்க அப்படின்ற ரகசியத்தை மட்டும் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்றாங்க....
நம்ம மத்திய அரசு அவங்களோட திறமையை பாராட்டி நோபல் பரிசுக்கு சிபாரிசு பண்ணினா நல்லா இருக்கும் ...
கேனப்பய_ஊர்ல_கிறுக்குபய_நாட்டாமையாம்!
Mani Karaikal
கேள்வி கேட்போர் சங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum