திருந்துங்கடா ...
Mon Dec 15, 2014 11:06 am
திவ்யா ராஜன் :
முட்டாள் தமிழனே!
உலகமே கொண்டாடும் திருநாளாம்...
எத்தனை வாழ்த்துக்கள் ,எத்தனை கொண்டாட்டங்கள்
அடடா கலைகட்டுகிறது நம் அவலங்கள் பல தலைவர்கள்
பரிமாறுகிறார்கள் வாழ்த்துக்களை இணையத்தின் வழியாகவும்
அறிக்கை வழியாகவும்
நம் தொலைகாட்சி நிறுவனங்களும் வானொலி நிறுவனங்களும்
ஒரு நாளையே காவு கொடுத்து கொண்டாடுகிறார்கள் பிறந்த நாளை ஒரு நடிகனின் பிறந்த நாளையே பெரும் விழாவாய் கொண்டாடும் மூடர் கூட்டமே
எங்கே போனீர்கள் அகிலமே தமிழனை அண்ணார்ந்து பார்க்க
கவிதையால் போராடிய காவியதலைவனை கண்டுகொள்ள கூட ஒரு நாதியில்லை என் தாய்மண்ணில் நடிகனை தலைவனாய் கொண்டாடும்
மானுடமே...
தலைவன் என்றால் என்ன?
கோடி கோடியாய் சம்பாதிப்பவனும் வித விதமாய் விக்கை மாற்றி
அரைநிர்வாண பெண்களுடன் ஆட்டம் போடுவதும் தலைவனின் தகுதி என்று தவறாய் பதியபட்டுள்ளதோ உங்கள் அகராதியில் இப்படி அடிக்கடி கொண்டாட்டம் போட்டு போட்டு உறக்க சொல்கிறோம் உலகிற்கு தமிழனை விட தலைசிறந்த முட்டாள் தரணியில் இல்லை என்று தமிழ் போராளிகளை விடுங்கள் குறைந்த பட்சம் பெற்றவர்களின் பிறந்த நாளை கூட அறியாத அதிமேதவிகள் கொண்டாடுகிறோம் நடிகர்களின் பிறந்த நாளை விழா என்று எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்று திருந்துவோம்...
நன்றி: கேள்வி கேட்போர் சங்கம் - முகநூல்
Re: திருந்துங்கடா ...
Mon Dec 15, 2014 11:10 am
ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு
சுப்ரமணியபாரதி வாழ்ந்தபோதும் யாரும் கண்டுக்கிடலை. அவரைப்பற்றித் தெரிந்த பிறகும் பாரதியின் பிறந்தநாளான டிசம்பர் -11 ஐ பெரும்பாலான ஊடகங்கள் குறிப்பாக தொ(ல்)லைக்காட்சிகள் கண்டுக்கிடலை. டிசம்பர் -12 ரஜினிகாந்த் எனும் திரை பிம்பத்திற்கு பிறந்தநாளாம் ,இதைக் கொண்டாட ஒரு மாதமாக தவமிருக்கிறார்கள். புத்தகங்கள் பற்றியோ,எழுத்தாளர்கள் பற்றியோ, மற்ற கலைஞர்கள் பற்றியோ, கிராமங்கள் பற்றியோ,நகரங்கள் பற்றியோ ,சமூகத்தின் அங்கங்கள் பற்றியோ சிறு நிகழ்ச்சி கூட தயாரிக்க முன்வராதவர்கள் இந்த தொ(ல்)க்காட்சிக்காரர்கள்.
சினிமாவையும் சினிமாக்காரர்களையும் தவிர்த்து தமிழ்நாட்டில் எதுவும் இல்லையா தொ(ல்)லைக்காட்சிகளே ?
உலகவணிகமயமாக்கலின் முக்கிய கருவி இந்தத் தொ(ல்)லைக்காட்சிகள் தான். இந்தத் தொ(ல்)லைக்காட்சிகள் யாரையும் சுயமாக சிந்திக்க அனுமதிப்பதே இல்லை. எதை ஒளிபரப்பறாங்களோ அதைப் பார்க்க வைக்கனும், எதை விளம்பரப்படுத்துறாங்களோ அதை வாங்கத் தூண்டனும் இதைத் தான் எல்லாத் தொ.கா.களும் செய்கின்றன. நமது வீடுகளில் நமக்குப் பயன்படாத நிறைய பொருட்கள் அடைந்து கிடப்பதற்கும், நமது மூளையில் எதற்கும் பயன்தராத தகவல்கள் குவிந்துகிடப்பதற்கும் தொ.கா.கள் தான் முக்கிய காரணம்.
தி இந்து நாளிதழின் நடுப்பக்கத்தில் ரஜினி இடம்பெற்றால் அது, இதுவரை நடுப்பக்கத்தில் இடம்பற்றவர்களுக்கும், தி இந்துவிற்கும் மாபெரும் அவமானம்.
இந்த பிம்பத்தைக் கொண்டாடப்போகும் ஊடகங்களிடமிருந்து டிசம்பர் -12ஐக் காப்பாற்றுங்க.
தமிழன் சுயமரியாதை உள்ளவனா ? இல்லையா ? நாளை தெரிந்துவிடும்.
ரஜினி ஒரு நடிகன். அவ்வளவுதான்.அதைத் தாண்டிக் கொண்டாட தமிழ்நாட்டிற்கும் தமிழ்சினிமாவிற்கும் அவர் எதுவும் செய்யவில்லை. தனது திரைப்படங்கள் வாயிலாக புகைப்பிடிப்பதை ஊக்கப்படுத்தியவர். இன்று வரை தனது ரசிகர்களை ஏமாற்றி தவறாக பயன்படுத்துபவர் தான் இந்த ரஜினி. ரஜினி படம் வந்தா திரையரங்கிற்கு போங்க, படம் பாருங்க.ரஜினியை அங்கேயே விட்டுட்டு வாங்க. ரஜினி ஒரு எண்டர்டெய்னர் (entertainer) அதனால் அவரைக் கொண்டாடுறோம் என்று சொல்லமுடியாது. ஏனென்றால், நமது எல்லோரது வாழ்விலும் நீக்கமற நிறைந்திருக்கும் வசனங்களைப் பேசி நடித்து ,நடிக்காதப் போதும் கூட நம்மைச் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் வடிவேலு தான்யா உண்மையான எண்டர்டெய்னர். உண்மையான கலைஞன். வடிவேலுவை விடவா ரஜினி பெரிய எண்டர்டெய்னர் ? இல்லையே.
நன்றி: ஈகரை

Mon Dec 15, 2014 11:13 am
திடிரெண்று, இன்று மதியம் ஒரு ஸ்டேடஸ் படித்த போது தான் உச்சி மண்டையில் உர்ர்ர்ர்ர்ரென்று உரைத்தது..
நித்யானந்தா – ஜெயந்திரர் இவர்கள் இருவுரையும் ஒப்பிட்டு பார்த்தால், அதிகமாக கழுவி ஊத்தப்பட்ட்து நித்தி தான். ஆனால். அதே அளவிற்கு காஞ்சி மட அதிபதியை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏன் இந்த பாரபட்சம்..
நித்தி செக்ஸ் வழக்கில் மாட்டி கொண்டவர், மற்றொறு ஆள் கொலை வழக்கில் மாட்டி கொண்டவர், உலகம் தழைக்க வேண்டுமென்றால் செக்ஸ் இண்றியமையாதது என்பது மறுக்க முடியாத உண்மை, நித்தி செய்த ஒரே தவறு, ப்ரமச்சரியத்தை ஊர் முழுவதும் பேசி விட்டு, திரை மறைவில் செக்ஸ் வைத்து கொண்டது, இதுவே, ஓஷோ மாதிரி, செக்ஸ் தான் கடவுள், மற்ற அனைத்தும் மாயை என்று பேசி விட்டு, ரஞ்சியுடன் கூடி இருந்தால் இன்று நித்தியை ஹீரோவாக பார்த்திருப்போம்.
ஆனால், கடவுளின் வெளிப்பாடு தான் உயிர் என்று போதனை செய்து விட்டு, தனக்கு நெருக்கமான ஒருவனை, கூலிப்படை வைத்து, கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு இன்றும் அதே ராஜ மரியாதையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் ஒருவனை நாம் என்ன செய்தோம்???
ரெண்டு பேரும் உலக ஃப்ராடு தான்,,, ஆனால், சிந்திக்க வேண்டியது..
கொலை செய்வது குற்றமா??? இல்லை செக்ஸ் வைத்து கொள்வது குற்றமா ??
எதற்காக,, என்ன மண்ணாங்கட்டிக்காக, காஞ்சி சங்கராச்சியாரை நித்தி அளவிற்கு கழுவி ஊத்தவில்லை,,, செக்ஸை விட கொலை பெரிய குற்றம் இல்லயோ???. அல்லது இந்திய கலாச்சாரம் என்பதே இதுதானா ????.. ப்ளீஸ் உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்...
நன்றி: இன்று முதல் தகவல்

Mon Dec 15, 2014 11:34 pm
முட்டாள் இளைஞர்களை சுட்டு தள்ளினால்தான் என்ன
-----------------------------
Nixon Feno:
யார் இந்த ரஜினி..
நாட்டிற்காக செக்கிழுத்த செம்மலா..? அல்லது!!
வறுமையிலும் முறுக்கிய மீசையோடு 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என பாடிய பாரதியா..?அல்லது!!
93'ன்று வயதிலும் மூத்திர பையை கையில் சுமந்தாலும், ஓயாமல் பெண்களின் உரிமைக்காக போராடிய கிழவன் ஈ.வே.ராமசாமியா..?
யார் இவர்..
"லிங்கா" படப்பிடிப்பு முழுவதையும் கர்நாடகாவில் நடத்தி.. கன்னடவரை தேடிப்பிடித்து தயாரிப்பாளராக்கி.. வசூலை தமிழனிடம் செய்பவர்..!!
இன்றைய நிலவரப்படி தமிழ் நாட்டில் சராசரியாக ஒரு "லிங்கா" திரைபட நுழைவுச்சீட்டு
ரூ.250 என விற்க்கபடுகிறது. இது ஒரு சராசரி ஏழை இந்தியனின் 5நாள் வருமானம்.
பணம் கொழுத்தவன் பார்க்கட்டும், ஆனால் அவர்கள் யாரும் ரசிகர்கள் என்ற
பெயரில் வெறிபிடித்து அலைவதில்லை..
இப்படி தன் குடும்பத்தை கவனிக்காமல் கூலி வேலை செய்து கிடைக்கும் பணத்தை இந்த கூத்தாடியின் பின் அலைந்து வீணாக்கும் தமிழனே
இந்த கூத்தாடி வரலாறுதான் என்ன ..?
பொது
இடங்களில் புகைபிடிப்பதை ஆண்மை எனவும், சாராயம் குடிப்பது வீரத்தின்
அடையாளம் எனவும் தன் படங்களில் காட்டியதோடு, தன் வாழ்கையிலும் கடைபிடித்து
ஒரு தலைமுறை இளைஞர்களையே குட்டி சுவராக்கி கெடுத்த கூத்தாடிதானே இவர்..
இவரின்
பின்னால் 'வீசிலடிச்சான் குஞ்சுகளாக' வெறி பிடித்து அலைந்த ரசிகர்களுக்காக
இதுவரை ஒரு துரும்பையாவது அசைத்திருப்பாரா.. தனி அறையில் உட்கார்ந்து
பேட்டி என்ற பெயரில் இவர் பேசும் வீர வசனங்களை பார்த்து, படத்தில் ஒரே
அடியில் எதிரிகளை வீழ்த்தி கதாநாயகியை காப்பாற்றும் போல அரசியலுக்கு வந்து
நாட்டையும், நமமையும், காப்பாற்றுவார் என 20 ஆண்டுகளுக்கு முன் தமிழ்மக்கள்
ஏமாந்து காத்திருந்தது உண்மைதான்.. பிறகுதானே தெரிந்தது அரசியல் என்ற
வார்தையை சுயநலமாக தன் படங்களை பெரிய அளவில் வியாபாரம் ஆவதற்க்காக சமயம்
பார்த்து பயன்படுத்தும் ஒரு கோழை இவர் என்று.. அய்யா ஆட்சியில் இருந்தால்
அவர் வீட்டு வாசலுக்கும்.. அம்மா ஆட்சியில் இருந்தால் ஜெயா ஸ்டுடியோ
வாசலுக்கும் ஓடி இருவரையும் சாமர்தியமாக ஏமாற்றும் அட்டகத்தி தானே ரஜினி..
பணம்
கொடுத்து படத்தை பார்த்தோமா.. பின்னால் ஒட்டிய தூசிய தட்டிவிட்டு எழுந்து
போனோமா என்றில்லாமல்.. முப்பது கோடிக்கும் மேலான மக்கள் இரவு உணவிற்க்கு
வழியில்லாமல் பசியோடு தினமும் தூங்கும் இந்த நாட்டில்.. ஒடிவிளையாட வேண்டிய
வயதில், தங்கள் பிஞ்சு கைகளால் கல்லு உடைக்கவும், மண்சுமக்கவும் பசித்த
வயிற்றோடு வேலைக்கு செல்லும் லட்சகணக்கான சிறு குழந்தைகள் உள்ள இந்த
மண்ணில்.. நல்ல உணவை கண்ணால் கூட பார்த்திராத ஏழைகள் பெரும்பாண்மையாக வழும்
ஒரு தேசத்தில்.. கூத்தாடியின் படத்திற்க்கு பால் அபிஷேகமும் கற்பூர
ஆரத்தியும் காட்டும் இந்த முட்டாள் இளைஞர்களை சுட்டு தள்ளினால்தான் என்ன.
நன்றி: ஃபாரின்ஜாப் பேங்க் - முகநூல்

Mon Dec 15, 2014 11:48 pm
லண்டன்
பிரபல அமெரிக்க போர்ப் ஸ் மேகசின் இந்திய அளவில் இந்த ஆண்டு அதிகபட்ச வருமானம் உள்ள நட்சத்திரங்கள் பட்டியல் குறித்து சமீபத்தில் சர்வே ஒன்று எடுத்தது. இந்த சர்வே முடிவு இன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதலிடம் பெற்றார். நம்மூர் விஜய், ரஜினி, அஜீத் ஆகியோர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.
இந்தியாவின் டாப் 100 நட்சத்திரங்கள் பட்டியலில் சல்மான் கான் ரூ.244.5 கோடி வருமானத்துடன் முதல் இடத்தில் உள்ளார்.அமிதாப்பச்சன் (ரூ.196.5 கோடி) 2 வது இடத்திலும், ஷாருகான் ( ரூ.202.4 கோடி) 3 வது இடத்திலும், தொடர்ந்து எம்.எஸ் தோணி (ரூ.141.8 கோடி), அக்சய் குமார், வீராத் கோலி, அமீர்கான், தீபிகா படுகோனே,ஹிருத்திக் ரோசன், சசின் தெண்டுல்கர் ஆகியோர் உள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்( ரூ.50 கோடி) 13-வது இடத்தை பிடித்துள்ளார். லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த சோனாக்ஷி சின்கா ( ரூ.20.1) 17 வது இடத்தில் உள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு 30 இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையதளபதி விஜய் 41வது இடத்தை பிடித்து தமிழக அளவில் முதலிடத்தில் உள்ளார். இவரை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி 45வது இடத்தையும், அஜீத் 51வது இடத்தையும் கைப்பற்றியுள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் 39-வது இடத்தையும், தனுஷ் 78-வது இடத்தையும், பிரபுதேவா 88-வது இடத்திலும் உள்ளனர்
நன்றி: தினத்தந்தி
Re: திருந்துங்கடா ...
Thu Dec 18, 2014 3:37 pm
கத்தி படம் பார்த்துட்டு விஜய் விவசாய நிலங்களை காப்பாத்துவார்ன்னு நம்புறதும்..
லிங்காவை பார்த்துட்டு ரஜினி விவசாய செய்றதுக்கு தண்ணி கொண்டுவருவார்ன்னு நம்புறதும்தான் உலகின் ஆகச்சிறந்த முட்டாள்தனம்...
யார் வேனும்னா அரசியலுக்கு வரலாம்தான்..அனால் படத்தை பார்த்துட்டு உணர்ச்சிவசபட்டு தலைமையேற்க அழைப்பதும் அறிவுடைமை இல்லை...
அதேப்போல நடிகர்கள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லைன்னு எப்பபாரு புலம்பிட்டு இருப்பதும் தேவையில்லாதது..
நம் எல்லோரையும் போல அவர்களும் பணத்துக்காக உழைக்கிறார்கள்.. அவ்வளவே ..
முதலில் யாருக்கு ஓட்டுபோட்டீங்களோ அவங்கள கேள்வி கேளுங்கப்பா...
நம்ம பிரச்சினைக்கு வேற எவனா வேலையில்லாதவன் போராடட்டும்.. நம்ம வீட்ல உட்கார்ந்திருப்போம்ன்னு நினைச்சீங்கனா உங்க வருங்கால சந்ததியினர யாரும் காப்பாத்த முடியாது...
- Vikkranth

Permissions in this forum:
You cannot reply to topics in this forum