அடேங்கப்பா! எங்கள்மீது உங்களுக்கு எவ்வளவு அக்கறை!
Sat Dec 13, 2014 4:19 pm
வழக்கொழிந்து போன சமஸ்கிருதத்தை ஏன் படிக்க வேண்டும் என்று கேட்டால் பா.ஜ.கவினர் பதில் சொல்லுகிறார்கள். சமஸ்கிருத வேதங்களில் ஆயிரமாயிரம் அறிவியலும், அதிசயங்களும் உள்ளன அவைகளை அறிந்து பயனடைய நீங்கள் அந்த மொழியைப் படிக்க வேண்டும்.
அடேங்கப்பா! எங்கள்மீது உங்களுக்கு எவ்வளவு அக்கறை!
சரி, இதே சமஸ்கிருதம் கோலோச்சியிருந்த காலத்தில் எங்கள் பாட்டன்களும் முப்பாட்டன்களும் அதைப் படிக்க விரும்பினார்களே, அவர்களுக்கு நடந்தது என்ன? சூத்திரன் வேதம் படிக்கக் கூடாது, அவன் தீட்டான காதுகள் தேவபாஷையைக் கேட்கக்கூடாது என்று எங்களைத் தடுத்தது யார்? வேதங்களைப் படிக்க முயன்ற சூத்திரர்களின் செவிகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி எங்களை அடக்கி ஒடுக்கியது யார்?
இன்று அதே சூத்திரப் பிதாக்களின் பேரன், பேத்திகளிடம் சமஸ்கிருதம் வலிந்து திணிக்கப்படுகிறது.
என்னவாயிற்று?
சூத்திரர்கள்கூட படிக்குமளவுக்கு தேவபாஷையின் புனிதம் குறைந்துவிட்டதா? அல்லது நீசபாஷைக்கு சொந்தக்காரரான சூத்திரர்களெல்லாம் தேவபாஷை படிக்குமளவுக்கு பவித்திரமடைந்து விட்டார்களா?
படித்தால் பயனுண்டு என்ற காலத்தில் எங்களுக்கு மறுக்கப்பட்ட மொழியை, திணித்தாலும் பயன்படாது என்ற காலத்தில் நாங்கள் ஏற்க மறுக்கிறோம்.
வழக்கொழிந்து செத்து சுண்ணாம்பான மொழியை இனி எவன் படிப்பான்? அதை உங்கள் வீடுகளிலே சாத்தி வைத்து தேவபாஷையிலேயே ஒப்பாரி வைத்து அழுதுகொள்ளுங்கள். உங்கள் தேவபாஷைக்கு முன்னால் பிறந்ததாயினும் இன்றுவரை இளமை குன்றாமல் இருக்கும் எங்கள் தங்கத் தமிழும், சர்வதேசங்களுக்கு, பொருளாதார உச்சங்களுக்கு எங்களை இட்டுச்செல்லும் ஆங்கிலமுமே எங்களுக்குப் போதும்!
சமஸ்கிருதமா, இனி ஆர்வம் செலுத்த மாட்டோம், அஞ்சலி வேண்டுமானால் செலுத்துகிறோம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum