அதிகாரத்தைப் பயன்படுத்தி மதம் மாற்றம் செய்யும் இந்துத்துவா சக்திகள்
Fri Dec 12, 2014 7:30 pm
அதிகாரத்தைப் பயன்படுத்தி மதம் மாற்றம் செய்யும் இந்துத்துவா சக்திகள்
மதச்சார்பின்மை சந்தி சிரிக்கிறது
எக்னாமிக் டைம்ஸ் படப்பிடிப்பு
பாஜக தலைமையில் ஆட்சி அமைந்ததில் இருந்தே மோடி அரசு இந்துத்துவ சக்திகளின் பிடியில் சிக்கியுள்ளது. சங்கப்பரிவார் மற்றும் பாஜக தலைவர்களின் பேச்சு நாளுக்கு நாள் விவாதத்திற்குரிய பேச் சாகவே மாறிவருகிறது. அரசியல் சாசனப்படி உறுதிமொழியேற்று பொறுப்பேற்றுக்கொண்ட மத்திய அமைச்சர்களே தங்களது நிலை மறந்து சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தங்களது பிரிவினைவாத பேச்சுக்களால் மேலும் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது பஜ்ரங்க் தள் அமைப்பு உத்திரப் பிரதேச நகரமான ஆக்ரா வில் அதிக எண்ணிக்கை யில் முஸ்லீம்களை இந்து மத்திற்கு கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு முத் தாய்ப்பாக மத்தியில் ஆளும் பாஜகவை இயக்கி வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அலிகார் நக ரத்தில் (உத்திரப்பிரதே சம்) கிறிஸ்து பிறந்த தினத்தன்று ஆயிரம் கிறிஸ்தவர்கள் மற்றும் அதற்கும் அதிகமான எண்ணிக்கையில் முஸ் லீம்களை மதமாற்றம் செய்ய வைக்கப் போவ தாக மாநிலமெங்கும் பிரச் சாரம் செய்து வருகிறது.

வி.எச்.பி. என்ன கூறுகிறது?
வி.எச்.பி என்ற மற் றொரு சங்பரிவார்க் கூட் டம் மதமாற்றம் பற்றிக் கூறும் போது பலகோடி வேற்றுமதக்காரர்கள் இருக்கும் போது சில ஆயிரம் பேர் தங்களது தாய்மத்திற்கு திரும்ப முன்வந்துள்ளனர். இது வரவேற்கத்தக்க ஒன் றாகும், வெளியில் இருந்து வந்த வேற்று மதக்காரர் கள் இங்கும் வந்து தங் களது மதத்தைப் பரப்பி மக்களை மாற்றியுள்ளனர். நாங்கள் முன்பு எங்கள் மதத்தில் இருந்து பிரிந் தவர்களைத்தான் மீண்டும் ஒன்றிணைத்து வருகி றோம். அவர்கள் தங்களின் தாய்மதத்திற்கு திரும்பிய தால் இந்தியாவின் முதல் தர குடிமகன்களாகி விட்டனர் என்று கூறிக் கொண்டு வருகிறார்கள். இந்தியா முழுவதை யுமே காவிமயகாக்கிக் கொண்டு வரும் இந்துத் துவ அமைப்புகளின் ஆட் டம் இத்துடன் அடங் கவில்லை. மகராஷ்டிர மாநில வி.எச்.பி திடீரென அறிககை ஒன்றை வெளி யிட்டுள்ளது, அதாவது இனி மசூதிகளில் தொழு கைக்கான பாங்கை ஒலி பெருக்கி மூலம் ஓதுவதை தவிர்க்கவேண்டுமாம்.
அண்ணல் அம்பேத்கர் கூறியது என்ன?
மதமாற்றம் குறித்து பாபாசாகேப் அம்பேத்கர் கூறியதாவது, மதமாற்றம் ஒரு தனிமனித சுதந்திரம் ஆகும், அது அடிமைத் தளையில் இருந்து விடு பட்டு, சுதந்திர உணர்வை வளர்ப்பதற்கும், அதே நேரத்தில் சமூகத்தில் சமமாக வாழ்வதற்கும் கிடைத்த நல்வாய்ப்பாகும் என்றார். காரணம் இந்து மதத்தில் பெருகி இருக்கும் வருணபேதம் மற்றும் தீண்டாமை காரணமாக இந்துமதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறிச் செல்வதை அவர் ஒருவித சமூக விடுதலையாகவே பார்த்தார். இதே இந்து அமைப் புகள் மதமாற்றம் குறித்து கடுமையாக ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்துவந்தன, மேலும் மதமாற்றம் குறித்து அவை கூறும் போது ஆசைகாட்டி, பணம் கொடுத்து, இலவ சங்களை அள்ளித்தந்து மதம் மாறவைக்கிறார்கள் என்று இன்றளவும் கூறிக் கொண்டுவருகிறது, ஆனால், அதே இந்துத் துவ அமைப்புகள் இன்று அவர்களுக்கு ஆதரவான அரசு முழு பெரும்பான் மையுடன் ஆட்சியில் அமர்ந்ததும், அரசின் உதவிகளை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு மதம் மாறினால் உங்களுக்குச் சலுகை என்ற தோர ணையில் மிரட்டி கட் டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய வைக்கின்றனர். மதச்சார்பின்மைக்கு ஆபத்து!
இந்துத்துவ அமைப் புகளின் இத்தகைய மடத்தனமான செயல்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்துகளை மதிக்காத தன்மை மற்றும் பல்வேறு இன, மத, மொழி, மற்றும் சமூக அமைப்புகளைக் கொண்ட மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, நாட் டின் அமைதியை கெடுத்து விடும். இந்துத்துவ அமைப் புகளின் இத்தகைய செயல் நாட்டின் மதச்சார்பின் மையை கொள்கையை கெடுத்துவிடும்.
Read more: http://viduthalai.in/page-2/92761.html#ixzz3Lgb73dfq
- இந்துத்துவா பிஜேபி ஆட்சியில் நான்கு மாதங்களில் 330 வகுப்புவாத வன்முறைகள்
- மதம் மாற மறுத்த யாஸிதிகள் சுட்டுக் கொலை
- உங்கள் வாழ்வில் வலுவான வார்த்தைகளை பயன்படுத்தி மகிழுங்கள்
- தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பதில் கேட்பது எப்படி?
- கணினி Mouse-இன் மத்திய பொத்தானை பயன்படுத்தி Double Click செய்வதற்கு
Permissions in this forum:
You cannot reply to topics in this forum