தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Empty புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்!

Tue Dec 02, 2014 11:02 pm
தண்மதி திருவேங்கடம், இயக்குநர், யங்புல்ஸ் எஜுகேஷன், மும்பை.
ஏப்ரல் மாதம் வந்துவிட்டது. புது நிதியாண்டில் நுழையப் போகிறோம். கடந்த ஆண்டில் நாம் செய்த தவறுகள் என்னென்ன? இந்த ஆண்டு நாம் செய்யவேண்டியது என்னென்ன என்று திட்டமிடும் காலம் இது.
கடந்த வருடம் முழுக்க, டாக்ஸை மிச்சப்படுத்தவேண்டுமே என்று அடித்துப்பிடித்து முதலீடு/இன்ஷூரன்ஸ் செய்தவர்கள் ரிலாக்ஸாகும் நேரம் இது. இந்தப் புது வருடத்திலாவது முதலில் இருந்தே நிதானமாகத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்; அதிகப்படியான லாபத்தை அள்ளவேண்டும்; கடைசி நேரப் போராட்டமே வேண்டாம் என்று யோசிக்கிறீர்களா? குட், நல்ல மாற்றத்துக்கான அறிகுறி இது.
புது வருடம் ஆரம்பிக்கும்போது எல்லா கம்பெனிகளும் ஒரு திட்டத்தைப்போடும். அடுத்த ஆண்டு அடையவேண்டிய இலக்கு என்ன, இதற்குச் செய்யவேண்டிய வேலைகள் என்னென்ன, எவ்வளவு செலவாகும் என்று ஊழியர்களிடம் கேட்டு ஒரு திட்டம்போடும். நம் சொந்த வாழ்க்கைக்கும் ஏறக்குறைய இப்படித் திட்டமிடுவதுதான் நல்லது.
பணத்தைக் கையாளுவதில் எல்லோரும் செய்யும் பெரிய தவறு என்ன தெரியுமா? திட்டமிடாமல், யோசிக் காமல் சட்டென்று செலவு செய்வது தான். அப்படியே பட்ஜெட் என்ற ஒரு கணக்குபோட்டு வைத்திருந்தாலும்கூட, பட்ஜெட்டில் கணக்கிடப்படாத‌ ஒன்றுக்காக, 'இது நம் பட்ஜெட்டில் இல்லையே’ என்று கொஞ்சம்கூட யோசிக்காமல் செலவு செய்துவிடுவது.
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav20d
[size]
யோசித்துப்பாருங்கள்! வீடு கட்டவேண்டும் என்கிற நீண்டநாள் கனவு உங்களுக்குக் கைகூடி வருகிறது. உங்கள் கனவு வீடு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கொத்தனாரிடம் விளக்கமாக எடுத்துச் சொல்லி, எப்படி கட்டுவீர்கள் என்று ஒரு பிளான் போட்டுக் காட்ட முடியுமா எனக் கேட்கிறீர்கள். 'நீங்க சொன்னதெல்லாம் என் மனசுல இருக்கு. கவலையேபடாதீங்க. கச்சிதமா கட்டிக்குடுத்துடுறேன்'' எனக் கொத்தனார் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அவரிடம் வீடு கட்டும் வேலையைத் தருவீர்களா? நிச்சயம் தரமாட்டீர்கள். அவ்வளவு ஏன், ஒரு கைதேர்ந்த இன்ஜினீயரை வைத்து பிளான் போட்டு, வீடு கட்டும் போதே சில இடங்களில் இடிக்கிறதே! இப்படியிருக்க, வீட்டுக் கணக்கை மட்டும் வெறும் மனக்கணக்காக வைத்துச் செலவு செய்தால், அது சரிவருமா?
நம் வீட்டு நிதி நிர்வாகம்கூட நம் வீடு கட்டுகிறமாதிரிதான். சரியாகத் திட்டம்போட்டுப் படிப்படியாகக் கட்டினால்தான் ஒவ்வொரு கட்டமும் சிறப்பாக அமையும். ஆனால், நடப்பது என்ன? 'எல்லாம் என் மைண்டுல இருக்குது. எனக்குத் தெரியாததா என்னென்ன செலவு இருக்குன்னு, இதை எழுதிவேறப் பார்க்கணுமா? டைம் வேஸ்ட்’ என்று ஒதுக்கிவிடுகிறோம்.
[/size]
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav20b
[size]
திட்டம்போட்டு செலவு செய்யாமல், ஒவ்வொருநாளும் வரும் செலவுகளை அப்போதைக்கப்போது சமாளித்துக்கொண்டே போனால், ரிட்டையர்டாகி வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, சரியாக பிளான் போடாமல் கட்டப்பட்ட வீடுபோல, அரைகுறையாக, பணம் கிடைக்கும்போதெல்லாம் கட்டப்பட்ட வீடுபோல நம் வாழ்க்கை அலங்கோலமாக இருக்கும்.
ஆனால், உங்கள் குடும்ப பட்ஜெட்டை கொஞ்சம் பிளான் செய்துகொள்வதன்மூலம் உங்கள் வாழ்க்கையை மிக அழகானதாக்கிக் கொள்ளலாம். எப்படி என்கிறீர்களா? இதோ உங்கள் புது நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் டிப்ஸ்:
பட்ஜெட் போடுவது கஷ்டப்பட அல்ல!
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav20a'பட்ஜெட் போடுவது ஈஸி இல்லை. அது குழப்பும் விஷயம். நேரம் பிடிக்கும். மூளையைக் கசக்கவேண்டும். அதைச் செய்வது வேஸ்ட். செலவு அதுபாட்டுக்கு வந்துகொண்டுதான் இருக்கும். சமாளிக்கவேண்டியதுதான்’ என்றே பலரும் நினைக்கிறார்கள்.
முதலில் நீங்கள் புரிந்துக்கொள்ளவேண்டியது, பட்ஜெட் என்பது உங்களைக் கட்டுப்படுத்துவதற்கோ, கஷ்டப்படுத்துவதற்கோ அல்ல! உங்களுக்குச் சுதந்திரம் தருவதற்குதான்! பட்ஜெட் என்பது உங்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்க அல்ல, இன்னும் சிம்பிளாக்கத்தான்! வரவு, செலவு சட்டென்று புரிந்துவிட்டால் பயப்படாமல் ஃப்ரீயாகச் செயல்படலாம். தைரியமாக ஒவ்வொரு அடியாகவைக்கலாம் உங்கள் இலக்குகளை நோக்கி!
செலவு பற்றித் தெளிவு வேண்டும்!
இதற்கு குறைந்தது ஒருமாதமேனும் செலவுக் கணக்கு எழுதிப்பார்த்தால்தான் செலவுகள் பற்றிய விவரங்களைத் துல்லியமாகப் படிக்க முடியும். உதாரணத்துக்கு, கணவர் அரிசி, பருப்பு வாங்கி வருகிறார் எனில் ஒருமாதத்துக்கு எத்தனை கிலோ அரிசி, பருப்பு செலவாகிறது என்று மனைவிக்குச் சொல்லமுடியாமல் போகலாம். காஸ் சிலிண்டர் எத்தனை நாளைக்கு வருகிறது என்று மனைவிக்குத் தெரியும். கணவருக்குக் குத்துமதிப்பாகத் தெரியலாம். அதனால் எந்தச் செலவையும் எழுதிப்பார்த்தால்தான் நமக்கு பல உண்மைகள் வெட்டவெளிச்சமாகும். கட்டாயம் சில மாதங்களுக்கு எழுதிப்பார்த்துவிட்டு பட்ஜெட் போட்டால், அட்டகாசமாக பட்ஜெட் தயாரித்துவிடலாம்.
இலக்குகள் பற்றித் தெரிய வேண்டும்!
செலவுகள் பற்றித் தெரிந்திருப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் நாம் அடையவேண்டிய இலக்குகளையும் தெரிந்துவைத்திருப்பது. வீடு கட்டுவது/வாங்குவது, குழந்தை களின் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரி கட்டணம், திருமணம் என்று நீண்டகால இலக்குகள், துணிமணி, பண்டிகைச் செலவு போன்ற குறைந்த கால இலக்குகள் அவற்றுக்கான உத்தேச செலவுகள் ஆகியவற்றை எழுதிவையுங்கள்.
[/size]
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav20e
[size]
ஒருவர் போடுவது பட்ஜெட் அல்ல!
கணவர் மட்டும் போடும் பட்ஜெட் அல்லது மனைவி மட்டும் போடும் திட்டம் என்றுமே வெற்றி பெற்றதில்லை. இருவரும் இணைந்து கலந்துபேசி போடும் திட்டமே வெற்றி பெறும். வளர்ந்த பிள்ளைகள் இருந்தால் அவர்களையும் சேர்த்துகொண்டு பட்ஜெட் போடுங்கள். தேவை, மாத கடைசியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஹாயாக ஒரு மணி நேரம்தான். முதல்முறைதான் கொஞ்சம் நேரம் பிடிக்கும். போகப்போக வெறும் அரை மணியிலேயே அமர்க்களமாக பட்ஜெட் போட்டுவிடலாம்.
என்னதான் சொல்லுங்கள், பட்ஜெட் போடுவது கஷ்டமான வேலைதான் என்று நினைக்கிறீர்களா? அந்த வேலையை ஈஸியாகச் செய்துமுடிக்க மூன்று வழிகளைச் சொல்கிறேன், ஃபாலோ செய்துபாருங்கள்!
1. பட்ஜெட் போடுவதே 'முதல் வேலை’!
பட்ஜெட் போட்டுப்பார்த்து அதன்படி செலவு செய்வேன் என்று முதலில் முடிவெடுங்கள்! வரவு என்ன, செலவு என்ன என்று ஒரு கணக்கு எழுத்தில் இருந்தால், பல விஷயங்கள் சட்டென்று தெரியவரும். இதற்காக சில மணி நேரம் செலவிடுவது ஒன்றும் பெரிய இழப்பு இல்லை. 'நம் அப்பா, தாத்தா காலத்தில் எல்லாம் பட்ஜெட் போட்டார்களா என்ன? அவங்களெல்லாம் கெட்டா போயிட்டாங்க? நல்லா வாழலையா?' என்று கேட்கிறீர்களா? அந்தக் காலத்தில் பணவீக்கம் இவ்வளவு இல்லை. விவசாயம் தழைத்த காலம் அது. நெல்மூட்டைகள் அடுக்கப்பட்ட வீடுகள்தான் அந்தக் காலத்தில் அதிகம்.
ஆனால், இந்தக் காலத்தில்? ரூ.500 எடுத்துக்கொண்டு கடைக்குப்போனால் பை நிறைய வாங்க முடியாது; கைநிறையத்தான் வாங்க முடியும். காலத்துக்கேற்ப மாறிக்கொள்வதே புத்திசாலித்தனம்.
[/size]
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav20c
[size]
இப்போதுள்ள சூழ்நிலையைப் புரிந்துகொண்டு பட்ஜெட் போட்டு வாழாவிட்டால் ரேஸில் பின்தங்கிவிடுவோம். அதுகூடப் பரவாயில்லை. எல்லாரும் நன்றாக வாழ்வதைப் பார்த்து மனதுக்குள் ஏங்குவோம். ஆகவே, பட்ஜெட் போட யோசிக்காதீர்கள். ஆக்ஷனில் இறங்கி, அதை முதல்வேலையாக்கிக் கொள்ளுங்கள்!
2. செலவு கணக்கை உடனடியாக எழுதுங்கள்!
நோட்புத்தகமோ, கம்ப்யூட்டரோ செல்போனோ ஏதாவது ஒன்றில் உங்கள் செலவுகளை எழுதிவைக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். கைக்காசு எங்கே போகிறது என்று தெளிவாகத் தெரிந்தால்தான் பட்ஜெட் போடுவது வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்!
3. ஆட்டோ டெபிட் அவசியம்!
நீங்கள் ரெகுலராகக் கட்டவேண்டிய தொகைகளான வீட்டுக் கடன், வண்டிக் கடன் கிரெடிட் கார்டு கட்டணங்கள், ஊருக்கு அனுப்பவேண்டிய பணம், போன் பில் ஆகியவற்றைக்கூட ஆட்டோமேட்டிக்காகக் கட்டுமாறு உங்கள் வங்கிக்கு ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன் தந்துவிடலாம். இதனால் உரிய நேரத்தில் நீங்கள் செலுத்தவேண்டிய பணம்போய்ச் சேர்ந்துவிடும். இதனால் மனஉளைச்சல் மிச்சம், லேட் பேமன்ட் பெனால்டி மிச்சம் எனப் பல நன்மை கிடைக்கும்!
இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் சிந்தித்து, பட்ஜெட் போட்டுப்பாருங்கள். இந்த நிதியாண்டின் இறுதியில் கணிசமான பணத்தை மிச்சம்பிடித்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்!
படம்: ப.சரவணக்குமார்
நன்றி: நாணயம் விகடன்[/size]
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Empty Re: புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்!

Tue Dec 02, 2014 11:05 pm
கல்வி கட்டணம் திட்டமிட்டால் திண்டாட்டம் இல்லை
கல்விக் கட்டணம் என்பது இன்று குடும்ப வருமானத்தில் கணிசமான பகுதியை விழுங்கும்  விஷயமாக மாறிவருகிறது. தவிர, முன்பெல்லாம் பள்ளி நிர்வாகங்களே மே மாதத்தில்தான் அடுத்த ஆண்டுக்கான கட்டணத்தை வசூலிக்கும். ஆனால், தற்போது ஏப்ரல் மாதத்திலேயே அடுத்த ஆண்டுக்கான கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியிருக்கின்றன. பெற்றோர்களும் கடன் வாங்கியாவது தங்கள் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டுகின்றனர். பிற்பாடு வட்டியோடு கடனைக் கட்ட முடியாமல் திண்டாடுகின்றனர். ஆனால், அடுத்த ஆண்டு உங்கள் குழந்தைக்குக் கட்டவேண்டிய கல்விக் கட்டணத்துக்கான பணத்தை இப்போதிருந்தே சேமிக்கத் தொடங்கினால், கலவரப்படாமல் கச்சிதமாகக் கல்விக் கட்டணத்தைக் கட்டி முடிக்கலாம் என்கிறார் வெல்த் ட்ரைட்ஸ் ஃபைனான்ஷியல் பிளானர்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், பதிவுபெற்ற நிதி ஆலோசகருமான அபுபக்கர் சித்திக்.
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav26a

''இன்றைக்கு பிரீகேஜி படிக்கும் குழந்தைக்கான பள்ளி கட்டணமே 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் ஆகிவிடுகிறது. வகுப்பு மாற மாற இந்தக் கட்டணம் உயருமே தவிர குறைந்தபாடில்லை. ஒரே ஒரு குழந்தை இருப்பவர் தனது ஆண்டு வருமானத்தில் 10 சதவிகிதத்தை செலவழிக்க வேண்டியிருக்கிறது.
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav26b
[size]
தவிர்க்க முடியாத இந்தச் செலவுக்கான பணத்தை சிரமப்படாமல் சேமிக்க, சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் உண்டு. இந்தச் சேமிப்பைத் தொடங்கும் போது வெறும் கல்விக் கட்டணத்துக்கான பணத்தை மட்டும்  சேமிக்காமல் அதனோடு தொடர்புடைய மற்ற கட்டணங்களுக்கான பணத்தையும் சேமிப்பது நல்லது. உதாரணமாக, ஓர் ஆண்டுக்கு ஒரு குழந்தைக்கான கல்விக் கட்டணம் ரூ.45,000 ஆகவும், வாகனக் கட்டணம், தேர்வுக் கட்டணம், பாடபுத்தகக் கட்டணம் எனப் பல்வேறு கட்டணங்கள் ரூ.15,000 ஆகவும் உள்ளது எனில், உங்கள் சேமிப்பை ரூ.60,000 என்று தீர்மானித்து, மாதம் ரூ.4,500 முதல் 5,000 வரை சேமிக்கலாம்.
எந்தமாதிரியான திட்டங்கள்?
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav26d%281%29இந்தச் சேமிப்புக்காக நீங்கள் திட்டமிடும்போது சீட்டு நிறுவனங்கள், அதிக ரிஸ்க் உள்ள முதலீடுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. குழந்தைகளின் கல்விக் கட்டணங்களுக்கு சிறந்த முதலீடாக இருப்பது ரெக்கரிங் டெபாசிட் மற்றும் மியூச்சுவல் ஃபண்டின் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் மற்றும் லிக்விட் ஃபண்டுகளே.
ரெக்கரிங் டெபாசிட்களைப் பொறுத்தவரை, வங்கிகள், தபால் நிலையங்களில் முதலீடு செய்வது சிறந்தது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு  எஸ்ஐபி முறையில் டெப்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானது. மேலும், குறுகிய கால மியூச்சுவல் ஃபண்டுகளான லிக்விட் ஃபண்ட் மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் முதலீடு செய்வது மிகவும் சிறந்தது. இதற்கு வரிச் சலுகையும் உண்டு. இவற்றை நீங்கள் வங்கிக்குச் சென்றோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு சென்றோ கட்டவேண்டிய அவசியமில்லை. இ.சி.எஸ் மூலம் எளிதாகக் கட்டலாம் அல்லது உங்கள் செல்போனிலிருந்தே கட்டவேண்டிய தொகையை எஸ்.எம்.எஸ் வழியாகக்கூடச் செலுத்தலாம்.
இந்தத் திட்டங்களில் நீங்கள் ஒரேநாளில்கூட உங்கள் முதலீட்டுத் தொகையைத் திரும்பப் பெற முடியும். மேலும், இதில் முதலீடு செய்யும்போது உங்கள் தேவை என்னவோ, அதைவிட 10 - 15% அதிகம்  சேமிப்பது அவசியம். ஏனெனில், இன்று இருக்கும் கல்விக் கட்டணமே அடுத்த ஆண்டும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு தவணைகளில் கட்ட நேரிடும்போது இந்தமாதிரியான திட்டங்களில் முதலீடு செய்வதே நல்லது. ஏனெனில், இதில்தான் வேண்டியபோது உங்கள் முதலீட்டை திரும்ப எடுத்துக்கொள்ள முடியும்.
[/size]
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav26c

புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav26e
[size]
ஒவ்வொரு மாதமும் பணம் சேர்க்க முடியாதவர்கள், போனஸ் அல்லது வியாபாரத்தில் லாபம் என மொத்தமாக ஒருதொகை வரும்போது, அதை குழந்தைகளின் கல்விச் செலவுக்காக எடுத்துவைத்துவிடுவது நல்லது'' என்றார் அபுபக்கர்.
கல்விக் கட்டணத்தை இனியாவது திட்டமிட்டு, திண்டாட்டத்தைத் தவிருங்கள்!
[/size]
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav26g

புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav26f

நன்றி: நாணயம் விகடன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Empty Re: புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்!

Tue Dec 02, 2014 11:07 pm
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! P06
ஒரு வீட்டில்  குழந்தை பிறந்தவுடன் அந்த வீட்டின் மொத்த சூழலும் மாறி விடுகிறது.  அதுவரையில் எப்படியெப்படியோ செலவாகிவந்த பணமும் நேரமும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்து, குறிப்பிட்ட ஓர் இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்குகிறது.
பிறந்த குழந்தையை சரியாகப் பராமரித்து, கல்வி புகட்டி, சகல திறமை களையும் பெற்று மிகச் சிறந்த மனிதனாக வளர்த்தெடுப்பது ஒரு பெற்றோரின் கடமை. கல்வி, வேலைவாய்ப்பு, தனித்திறமை, சிறந்த பழக்கவழக்கங்களை அவர்களுக்கு சரியான நேரத்தில் தரவேண்டும். இதற்கு ஒரு பெற்றோரிடம் சரியான நிதித் திட்டமிடல் வேண்டும்.
நம் வீடுகளில் குழந்தை பிறந்ததும் அதனைக் கொண்டாடும் மகிழ்ச்சியில்  ஆடைகள், ஆபரணங்களை வாங்கிக் குவிக்கிறோம். இந்த முக்கியத்துவத்தை  குழந்தையின் எதிர்கால நிதி சார்ந்த விஷயங்களுக்கு தருகிறோமா என்றால் இல்லை. குழந்தை வளர்ந்து கல்லூரிக்குச் செல்லும் காலத்தில்தான் படிப்புக்கு பணம் வேண்டுமே என்று பதை பதைக்கிறோம். கல்விக் கடன் வாங்கி, குழந்தையையும் கடன்காரன் ஆக்கு கிறோம். கல்யாணம் என்று வரும்போது மேலும் கடன் வாங்கி, வாரிசுகளுக்கு சொத்தினை விட்டு செல்வதற்கு பதில் கடனை விட்டுவிட்டுப் போகிறோம்.புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! P06a
மிகச் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத் தேவை களுக்கு நிதி ஒதுக்கினா லும்  மருத்துவம், கல்வி, எதிர்கால சேமிப்பு என பொத்தாம் பொதுவாகவே திட்டமிடுகிறார்கள். இன்றைய நம் குழந்தைகளை முழுமனிதனாக வளர்த்தெடுக்க புதிய அணுகுமுறையுடன் கூடிய நிதித் திட்டமிடல் வேண்டும். இதுபற்றி நிதி ஆலோசகர் பி.பத்மநாபனிடம் கேட்டோம்.    
''இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை வளர்க்க நாம் வழக்கமான நிதி ஆலோசனை தந்துவிட முடியாது. எது உடனடி தேவை, எது நீண்டகால தேவை என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உடனடி தேவையில்கூட தனித்தனி செலவுகள் இருக்கிறது. தவிர, பள்ளியில் சேர்ப்பது, தனித்திறமைகளை வளர்ப்பது, உயர்கல்வி, திருமணம் என அந்தந்த காலகட்டங்களில் செய்ய வேண்டிய நிதித் திட்டமிடலும் நிறைய உள்ளது'' என்றார். பின்னர் அவரே தொடர்ந்தார்.
''முந்தைய தலைமுறையினர் பள்ளி முதல் கல்லூரி வரை படிப்பதற்காக செலவு செய்த பணத்தை இன்றைக்கு ப்ரீகேஜியில் மட்டுமே செலவிட நேரிடுகிறது. தவிர, முன்பு எல்லோருக்கும் தெரிந்த படிப்பு டாக்டர் மற்றும் இன்ஜினீயர்தான். ஆனால், இன்று பல படிப்புகள் வந்துவிட்டன.
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! P06b
உயர்கல்வி மற்றும் திருமணத்துக்கு நீண்ட காலம் இருக்கிறது, அதனால் நாம் மாதாமாதம் சேமிக்கும் சிறிய தொகைகூட கூட்டு வட்டியில் நல்ல பலன் தரும். பெரும்பாலான பெற்றோர்கள் வெளிநாட்டில் படிக்க வைக்க விரும்புகிறார்கள். அப்படி ஆசைப்பட்டால், இப்போதைக்கு ஆகிற செலவு மாதிரி மூன்று மடங்கு சேமிக்க வேண்டும். சம்பளம் உயரும் போதெல்லாம் உங்கள் சேமிப்பும் உயர வேண்டும். இப்படி சேமிப்பதற்கு நிச்சயம் ஓர் ஒழுங்கு வேண்டும். நிதித் திட்டமிடல் இருந்தால் இந்த ஒழுங்கு நிச்சயம் இருக்கும்.  இன்றைக்கு உங்கள் குழந்தை இன்ஜினீயரிங் படிக்க ரூ.13 லட்சம் ஆகுமெனில், 18 வருடம் கழித்து படிக்க ரூ.55 லட்சம் ஆகும்.  அதேமாதிரி, உங்கள் குழந்தைக்கு இன்று திருமணம் செய்ய  ரூ.20 லட்சம் ஆகுமெனில், 23 வருடம் கழித்து திருமணம் செய்துவைக்க ரூ.1.20 கோடி தேவையாக இருக்கும்.  
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! P06c
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் எனில், உங்கள் வீட்டில் குழந்தை பிறக்கப்போகிறது என்கிற தகவல் தெரிந்தவுடனே, அதன் சிறப்பான எதிர்காலத்துக்கு நீங்கள் அவசியம் நிதித் திட்டமிடல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சொல்லத்தான்'' என்றவர், குழந்தை பிறந்ததும் உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன, அடுத்தடுத்த கட்டங்களில் செய்ய வேண்டியது என்ன, தனித்திறமைகளை வளர்த் தெடுப்பது எப்படி, உயர்கல்வி, திருமணம் போன்றவற்றுக்கு செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்.    
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! P08a
மருத்துவக் காப்பீடுகளில் உடனடியாக குழந்தையின் பெயரை சேர்க்க வேண்டும். பல மருத்துவ காப்பீட்டு பாலிசிகளில் குழந்தை பிறந்தவுடன் அதில் சேர்க்கக் கூடிய வசதிகள் இருக்கின்றன. குழந்தைக்கு பிறப்பு குறைபாடுகள் இருந்தால், அதற்கான செலவுகளை ஈடு செய்யும் பாலிசி அல்லது குழந்தைக்கான தடுப்பூசி சார்ந்த மருத்துவ செலவுகளை க்ளைம் செய்துகொள்ளும் பாலிசி என உங்கள் வசதிக்கேற்ப ஏதாவது ஒரு பாலிசியை அவசியம் எடுக்க வேண்டும்.புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! P06d
குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியாக இருந்தால் நிறுவனத்தின் மூலம் பாலிசியில் குழந்தையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாம் ஏற்கெனவே எடுத்துள்ள ஃபேமிலி ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் கூடுதல் பிரீமியம் செலுத்தும்பட்சத்தில் குழந்தையையும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஒரு வேலைக்கு ஓராயிரம் பேர்!
எஸ்பிஐ வங்கியில் உள்ள 1,837 புரபேஷனரி அதிகாரிகளுக்கான காலி பணியிடங்களுக்கு 18.83 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஒரு காலியிடத்துக்கு சுமார் 1,025 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
மேலும், 5,092 கிளெரிக்கல் காலியிடங்களுக்கு சுமார் 23 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதாவது, ஒரு வேலைக்கு 452 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்தப் பணிக்கு அறிவியல், பொருளாதாரம் மற்றும் கலைத்துறை படிப்புகளை படித்தவர்களும், இன்ஜினீயரிங், சட்டம், ஆடிட்டிங் படித்தவர்களும் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பையில் இந்த ஆபீஸர் பதவிக்கு  70 ஆயிரம்  ரூபாயும் கிளெரிக்கல் பதவிக்கு 17,500 ரூபாயும் ஆரம்பத்தில் சம்பளம் கிடைக்குமாம்!
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! P08b
குழந்தை பிறந்தபிறகு, நமது அனைத்து நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் கணவர் அல்லது மனைவி நாமினியாக இருந்தாலும் குழந்தைகளை நாமினியாக நியமித்துக் கொள்வது நல்லது. வங்கிக் கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட், ஃபிக்ஸட் டெபாசிட்டுகள், காப்பீடு போன்றவற்றில் நமக்கான நாமினியாக நியமித்துக் கொள்வது நல்லது. குடும்பத் தலைவரின் பெயரில் எங்கெல்லாம் சொத்துகள் வாங்கப்பட்டு இருந்தாலும், முதலீடுகள் செய்யப்பட்டிருந்தாலும் அல்லது இன்ஷூரன்ஸ் பாலிசிகள் எடுக்கப் பட்டிருந்தாலும் குழந்தையின் பெயரை கட்டாயமாக நாமினியாகச் சேர்க்க வேண்டும். இதனால் பிற்பாடு வரக்கூடிய பல சட்ட சிக்கல்களை எளிதாக 
தவிர்த்துவிட முடியும்.  
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! P08c
திருமணத்துக்குமுன் எடுக்கப்பட் டுள்ள ஆயுள் காப்பீடு பாலிசியில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும். உங்களை நம்பி புத்தம் புதிய ஜீவன் வந்திருக்கிறது என்கிறபோது அதன் எதிர்காலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே உள்ள பாலிசி யின் பலன் மனைவிக்கு கிடைக்கும் என்றாலும், குழந்தை என்கிற கூடுதல் பொறுப்பை உணர்ந்து பாலிசி முதிர்வு தொகையையும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே எடுத்துள்ள ஆயுள் காப்பீடு பாலிசியோடு ரூ.50 லட்சம் கூடுதலாக எடுத்துக் கொள்வது நல்லது. இந்த சீரமைப்பைத் தான் முதல் வேலையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Empty Re: புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்!

Tue Dec 02, 2014 11:08 pm
ஃபைனான்ஷியல் தவறுகள்... நீங்களும் செய்யாதீர்கள்!
ஆர்.ராதாகிருஷ்ணன், தலைமை நிதி ஆலோசகர், ஃபின்பிளான் சொல்யூஷன்ஸ்.
தொகுப்பு: செ.கார்த்திகேயன்
 
 நம் சொத்து நம்மிடமே!
எனது வாடிக்கையாளர் ஒருவரின் உயிலில் உள்ள சந்தேகங்களுக்குப் பதில் தேடி என்  வக்கீல் நண்பர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். என் வக்கீல் நண்பர் தன் அறையில்  வயது முதிர்ந்த ஒரு தம்பதியிடம் பேசிக் கொண்டிருந்தார். நீண்டநேரம் கழித்து, அந்தப் பெண்மணி அழுதபடி வெளியே வந்தார். உள்ளே போன நான், ஏன் அந்த அம்மா அழுகிறார் என்று நண்பரிடம் கேட்டேன்.  என் நண்பர் சொல்ல ஆரம்பித்தார்.
சொத்தை விற்று சொத்து வாங்கினார்கள்!
‘‘அந்தப் பெரியவர் அரசு வேலையி லிருந்து ஓய்வு பெற்றவர். தன் சேமிப்பில் நிலம் வாங்கி ஒரு சிறிய வீடு கட்டினார். தன் ஒரே மகனை பொறியியல் படிப்பு படிக்க வைத்தார். மகனும் நன்கு படித்து ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து கைநிறையச் சம்பளம் வாங்கினார்.  மகனுக்கு திருமணமும் செய்துவைத்தார்கள். மருமகளுக்கும் அதே துறையில் வேலை என்பதால் நிறையவே சம்பாதித்தார்கள்.
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav39a
[size]

வசதி அதிகரிக்க அதிகரிக்க பழைய வீடு போதவில்லை என்பதால், மூன்று படுக்கை அறை கொண்ட பெரிய ஃப்ளாட்டாக வாங்கலாம் என்று கூடி தீர்மானித்தார்கள். அலுவலகம், மார்க்கெட் போன்ற வசதிகள் அருகில் இருக்கும்படியே ஃப்ளாட் வாங்க நினைக்க, மகன், மருமகளுக்குக் கிடைக்கும் கடன் தொகையைவிட அந்த ஃப்ளாட் விலை அதிகம் இருக்க, இறுதியாக தன் வீட்டை விற்று அந்த ஃப்ளாட்டை வாங்கினார் அந்த பெரியவர்.

மகனுக்கு நடந்த அசம்பாவிதம்!
ஃப்ளாட் வாங்கிய சமயம் மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க, வேலைக்காகச் சென்ற மகன் இரண்டு மாதங்களுக்குப்பின் சடலமாகவே திரும்பினார். அங்கு நடந்த கார் விபத்தில் மகனின் உயிர் பறிபோனது. 
தங்களின் மருமகளுக்கு இளம் வயது என்பதால், அவளுக்கு மறுமணமும் தாங்களே செய்துவைத்திருக்கிறார்கள். இதன்பிறகு மருமகளும், புதிய கணவரும் ஃப்ளாட்டில் குடியிருக்கத் தொடங்கினர். முதியவர்களுக்கு அந்த ஃப்ளாட்டில் முழு உரிமையோடு இருக்க முடியவில்லை. தனியாகச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவானது. பென்ஷன் பணம் தவிர, வேறு எந்த வருமானமும் இல்லாத நிலையில், வாடகை, மருத்துவச் செலவு, குடும்பச் செலவு என சமாளிக்க முடியாமல் இப்போது தவிக்கிறார்கள்’’ என்று வக்கீல் நண்பர் சொன்னபோது, அந்தப் பெரியவரை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தேன்.  இவர்களைப் போன்ற பெற்றோர்கள்தான் இன்று ஏராளம். நாம் பெற்ற பிள்ளைகளுக்கு நாம்தானே செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே தங்களது மொத்த வாழ்க்கையையும் அவர்களுக்காக அர்ப்பணித்துவிடுகிறார்கள்.
பிள்ளைகளும் நல்லவர்களாகவே இருக்கலாம். ஆனால் காலம், சூழ்நிலை, நடக்கும் சம்பவங்கள் நமது எதிர்பார்ப்புகளுக்கு மாறான விளைவுகளைத் தோற்றுவிக்கலாம் என்பதையும் நாம் மறக்கக்கூடாது. 
அதனால், நம் முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் நம் காலம் வரையில் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அதன்பிறகே அவை அனைத்தும் பெற்ற பிள்ளைகளுக்குப் போய்ச் சேருவதாக இருக்க வேண்டும். இந்த எண்ணம் முதலில் குடும்பத்தில் சிறிது வருத்தத்தைத் தந்தாலும், நீண்ட கால நோக்கில் அதுவே எல்லாருக்கும் சரியானதாக இருக்கும்.

[/size]
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav39b
[size]
பாடம் தந்த அனுபவம்!
தன் கணவருக்கு கடைசியில் கிடைத்த ரிட்டையர்மென்ட் பணத்தை மகனுக்கும் மகளுக்கும் தரச் சொல்லி அடம்பிடித்த சுசிலா, கடைசி நேரத்தில் தன் தவறை எப்படி திருத்திக்கொண்டார் என்பதைச் சொன்னார். ஒரு திருமணத்தில் தற்செயலாகச் சந்தித்தபோது அவர் அதைச் சொன்னார்.
‘‘என் வீட்டுக்காரர் செலவு விஷயத்தில் கெட்டி. அநாவசியமாக எப்போதும் செலவு செய்யமாட்டார். என்றாலும் குழந்தைகள் படிப்பு விஷயத்திலும் திருமணம் செய்துவைத்ததிலும் எந்தக் குறையும் வைக்கவில்லை.

குடும்பக் கடமைகள் ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பதற்கும் அவர் ரிட்டையர்டாவதற்கும் சரியாக இருந்தது. கடந்த ஆண்டு என் கணவரோடு வேலை பார்த்த சாமிநாதன் ரிட்டர்யர்டானபோது 20 லட்சம் ரூபாய் கிடைத்தது. என் கணவருக்கு ஏறக்குறைய இந்த அளவு பணம் கிடைக்கும் என்று கணக்குப்போட்டு வைத்திருந்தேன்.
போன மாதம் என் மகள் கார் வாங்க மூன்று லட்சம் வேண்டும் என்று கேட்டாள். என் மகன் புது ஃப்ளாட் வாங்க ஐந்து லட்சம் ரூபாய் தேவை என்றான். அப்பாவின் செட்டில்மென்ட் பணத்திலிருந்து வாங்கிக்கொடேன். நீ சொன்னா அப்பா கேப்பாரு' என்று இருவரும் என்னை நச்சரித்தார்கள். நானும் என் கணவரிடம் ஒன்றுக்கு இரண்டுமுறை சொன்னேன். பார்க்கலாம் என்று சொன்னவர்,  அதுபற்றி யோசித்துக்கொண்டிருந்தபோதுதான், சாமிநாதன் எங்கள் வீட்டுக்கு வந்தார்.
[/size]
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav39e
[size]

சாமிநாதனின் தவறான முடிவு!

வழக்கம்போல உற்சாகமாக இருக்கும் சாமிநாதன் அன்றைக்கு சோர்வாக இருந்தார். ‘‘எப்படி இருக்கீங்க, சார்?” என்று கேட்டேன். ‘‘ஏதோ இருக்கேன்” என்று சுவாரஸ்யம் இல்லாமல் பேசினார். சரி, நண்பர்கள் மனம்விட்டுப் பேசட்டும் என்று நான் காபி கொடுத்துவிட்டு, என் வேலையைப் பார்க்கப் போய்விட்டேன்.

சிறிது நேரம் பேசிவிட்டு சாமிநாதன் போனபின், அவருக்கு என்ன பிரச்னை என்று என் கணவரிடம் கேட்டேன். தன் ரிட்டையர்மென்ட் பணத்தை மகளுக்கும், மகனுக்கும் பிரித்துத் தந்து விட்டாராம் சாமிநாதன். இதன்பிறகு மகன், மருமகளுடன் மனஸ்தாபம் ஏற்பட, அவர்கள் தனிக்குடித்தனம் போய்விட்டார்கள். வீட்டின் மாடியில் ஒரு சிறிய போர்ஷனில் சாமிநாதன் தன்  மனைவியுடன் இருக்க, கீழே வீட்டை வாடகைக்குவிட்டாலும், அந்த வருமானம் மனைவியின் மருந்துச் செலவுக்கே சரியாகப்போனது.  இப்போது வேறு வழியில்லாமல், ஓய்வு பெற்றபிறகும் வேலைக்குச் செல்கிறாராம்’’ என்று வருத்தத்தோடு சொன்னார் என் கணவர்.

எனக்குக் கிடைத்த தெளிவு!
இதைக் கேட்டபோது சட்டென ஒரு உண்மை புரிந்தது. வாழ்க்கையில் நமக்கும் இந்த நிலை ஏற்படலாம்  அல்லவா? அதனால்தான் என் கணவருக்குக் கிடைக்கும் ரிட்டையர்மென்ட் பணத்தை முதலில் நம் தேவைகளுக்கு வைத்துக்கொள்வோம்.  பிற்பாடு நம் குழந்தைகளுக்கு தரலாம் என முடிவெடுத்தேன். நமக்குப்பின், நம் பணம் நம் பிள்ளைகளுக்கே.  ஆனால், வாழும்காலம் வரையில் நம் கையில் பணம் இருந்தால், நாம் யாரையும் எதிர்பார்க்காமல் சுயமரியாதையுடன் வாழலாம் என்று உணர்ந்தேன். சரியான முடிவு எடுக்க உதவிய சாமிநாதனுக்கு மனத்தில் நன்றி சொன்னேன்” என்றார்.
இவர்களைப்போல இன்னும் ஆயிரமாயிரம் பேர் இருக்கிறார்கள். கடைசி காலத்தில் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் நீங்கள் கவலையில்லாமல் இருக்க உங்களுக்கென நிச்சயம் பணம் தேவை. இதற்கு நிதித் திட்டமிடல் கட்டாயம் தேவை. இதுவரை அதுபற்றி சிந்திக்காதவர்கள் இனியாவது சிந்திக்க ஆரம்பியுங்களேன்!

[/size]

(சம்பவங்களில் வரும் நபர்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது!)
தொகுப்பு: செ.கார்த்திகேயன்.




 
வருமான வரிச் சலுகைக்காக ஆயுள் காப்பீடு எடுக்கலாமா என்கிற கேள்வியைக் கேட்டுதான் என்னை முதலில் சந்தித்தார் ரமேஷ். அப்போது அவர் மூன்று லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு மட்டுமே வைத்திருந்தார். ‘உங்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.1 கோடிக்கு ஆயுள் காப்பீடு தேவை’ என்று சொன்னதும், அவ்வளவு ஏன் தேவை என்று கேட்டார். அதற்கான காரணத்தை விளக்கிச் சொன்னேன்.
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav39d

‘டேர்ம் பாலிசி எடுத்தால், கட்டிய பணம் திரும்ப கிடைக்குமா?’ என்று கேட்டார். கிடைக்காது என்றேன். அப்ப அந்த பாலிசி வேஸ்ட் என்றார் ரமேஷ். ‘உங்களிடம் பைக் இருக்கா?’’ என்று கேட்டேன். ‘‘ஓ இருக்கே’’ என்றார். ‘அதுக்கு இன்ஷுரன்ஸ் எடுத்திருக்கீங்களா?’ என்று கேட்டேன். ‘‘ஒவ்வொரு வருஷமும் கட்டிட்டு வர்றேன்’’ என்றார். ‘‘எதுக்கு கட்டுறீங்க. வண்டி தொலைஞ்சாலோ அல்லது விபத்துல சிக்கி பாதிப்பு ஏற்பட்டாலோ இழப்பீடு கிடைக்கும்னுதானே இன்ஷூரன்ஸ் கட்டுறீங்க. என் வண்டிதான் தொலையவே இல்லையே. நான் எதுக்கு இன்ஷூரன்ஸ் தொடர்ந்து கட்டணும்னு என்றைக்காவது நெனைச்சிருக்கீங்களா? உங்க பைக் மாதிரி உங்க உடம்பையும் நெனைச்சுக்குங்க. அதுக்கு ஏதாவது ஆபத்து வந்தா, இழப்பீடு கிடைக்கணும். அதுவும் மிகக் குறைஞ்ச செலவுல’’ என்று விளக்கிச் சொன்னபின், டேர்ம் பாலிசி எடுக்க சம்மதித்தார்.
[size]
ரமேஷ் டேர்ம் பிளான் எடுத்து ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பிரீமியம் கட்டி வந்தார். சில ஆண்டுகளுக்குப்பின் ரமேஷ் கேன்சர் நோயால் இறந்தபின் க்ளைம் தொகையும் செட்டில் செய்து தந்தேன். இன்று ரமேஷ் இல்லை என்றாலும், அவரது குடும்பத்தினர் பொருளாதார ரீதியில் எந்த கஷ்டமும் இல்லாமல் இருக்கிறார்கள்.[/size]
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Empty Re: புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்!

Tue Dec 02, 2014 11:09 pm
பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி!
ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், இருபத்தொண்ணுல இருந்து திண்டாட்டம்... கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய இந்தப் பாடல் வெளிவந்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அந்தப் பாடலின் கருத்து இன்றைக்கும் நூறு சதவிகிதம் நமக்குப் பொருந்தி வருகிறது.
ஒன்றாம் தேதி வாங்கும் சம்பளத்தைப் பார்த்துப் பார்த்துச் செலவு செய்தாலும் 20 தேதிக்குமேல் திண்டாட்டமாகவே இருக்கிறது நம்மில் பலருக்கு. 'கையில வாங்கினேன். பையில போடல; காசு போன இடம் தெரியலை’ என்று திருச்சி லோகநாதன் பாடிய பாடலை பாட வேண்டிய நிலையில்தான் இருக்கிறது நம் வாழ்க்கை. எனவே, 21-ம் தேதிக்குப்பின் யாரிடம் கடன் கேட்பது என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவோம்.
இந்தப் பிரச்னையிலிருந்து நாம் எப்படித் தப்பிப்பது? என நிதி ஆலோசகர் வி.சங்கரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav60a
''நடுத்தரக் குடும்பத்தின் பெரிய பிரச்னையே மாத கடைசியில் கடன் வாங்காமல் சமாளிப்பது எப்படி என்பதுதான். இந்தப் பிரச்னையை எல்லாராலும் எளிதில் சமாளிக்க முடியும். ஆனால், உங்கள் பழக்கவழக்கத்தைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். என்னென்ன செய்யவேண்டும் என்பதை பாயின்ட் பை பாயின்டாகச் சொல்கிறேன்.
1. சம்பளம் வாங்கியவுடன் பட்ஜெட் போட வேண்டும். பட்ஜெட்டில் எழுதியதை அப்படியே பின்பற்ற வேண்டும். அதாவது, கல்விக் கட்டணம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி செலுத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு 5-ம் தேதியே சம்பளம் வந்துவிடுகிறது என வைத்துக்கொள்வோம்.புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav60bசம்பளம் வந்தவுடன் இதைச் செலுத்திவிட வேண்டும். 15-ம் தேதிதானே, அன்றைக்கு கட்டினால் போதாதா என்று நினைக்கக் கூடாது. இப்படியே தள்ளிப்போட்டுக்கொண்டே போவது பிரச்னைகளை நாமே வரவழைத்துக்கொள்கிற மாதிரி ஆகிவிடும். இதனால் உரிய நேரத்தில் பணத்தைக் கட்டமுடியாத நிலைகூட நமக்கு வரலாம். அதனால் அபராதம் செலுத்தவேண்டிய சிக்கலும் வந்து சேரலாம். இந்தச் சிக்கலுக்கு எல்லாம் நாம் வழிவிடவே கூடாது.
2. சம்பளம் வந்ததும் அத்தியாவசி யமான செலவுகள் என்னென்ன, தவிர்க்கக்கூடிய செலவுகள் என்னென்ன என்பதைப் பட்டியலிட வேண்டும். வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள் வாங்குவது, இ.எம்.ஐ செலுத்துவது, மருத்துவம் போன்றவற்றுக்கான பணத்தை எந்தக் காரணம் கொண்டும் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது.
3. கட்டாயம் செய்யவேண்டிய செலவுகளுக்கான பணத்தை சம்பளம் வந்தவுடன் ஒதுக்கிவைத்துவிட வேண்டும். இதுபோக, மீதமுள்ள பணம் கையில் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மீதமுள்ள பணத்தில் என்னென்ன செலவுகள் செய்யலாம், என்னென்ன செலவுகளை செய்யக்கூடாது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, அடிக்கடி ஹோட்டலுக்குப் போவது, ஷாப்பிங் செய்வது, சுற்றுலா போவது போன்ற செலவுகளைத் தவிர்க்கலாம்.
4. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்தவுடன், ஒரு சிறிய அளவு பணத்தை எடுத்து தனியாக ஒதுக்கி, ரிசர்வ் ஃபண்டாக வைத்துவிட வேண்டும். இதை எளிதில் எடுக்க முடியாதபடி வைத்திருப்பது நல்லது. உதாரணமாக, வேறு ஒரு வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தை வைத்துவிடலாம். இந்தப் பணத்தை மிக மிக அவசர தேவைகள் ஏற்பட்டாலொழிய, 20-ம் தேதிக்கு முன்பு தொடவே கூடாது. இப்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கிய வுடன் குறிப்பிட்ட அளவு பணத்தைப் போட்டுவைப்பது ஆபத்பாந்தவனாக உதவும்.
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav60f
ரிசர்வ் ஃபண்ட்தான் இருக்கிறதே என்று நினைத்து 20 தேதிக்குள் தாம்தூம் என்று செலவழிக்கக் கூடாது. அவசரத்துக்கு மட்டுமே என ஒதுக்கிய அந்தப் பணம் ஒருவேளை பயன்படவில்லை எனில், அதை அந்தக் கணக்கிலேயே அப்படியே வைத்துவிடலாம். இப்படி ஒவ்வொரு மாதமும் சேரும் பணத்தை நீண்ட நாள் சேமிப்பாக மாற்றலாம்.
5. எப்போதுமே குறைந்த அளவில் கடனை வைத்துக்கொள்வது நல்லது. வீட்டுக் கடன் போன்ற சொத்து சேர்க்க உதவும் கடன்கள் தவிர்த்து, பிற கடன்கள் அனைத்துமே தேவை இல்லாத கடன்கள்தான். இதைத் தவிர்த்து, வாகனக் கடன், தனிநபர் கடன், நகைக் கடன் அனைத்துமே அதிகமான வட்டி விகிதத்தில்தான் கிடைக்கிறது. இந்தமாதிரியான கடன்களை வாங்கும்போது அதிகமான வட்டியைச் செலுத்தவேண்டியிருக்கும். இதனாலும் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு மாத கடைசியில் பிரச்னை உண்டாகும்.
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav60c
6. மளிகைப் பொருட்களை தினம் தினம் வாங்குவதால் நமக்கு நஷ்டம்தான். இதற்குப் பதில் மொத்தமாக வாங்கினால் கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். சம்பளம் வந்தவுடன் ஒரு மாதத்துக்குத்  தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிவிடலாம். மொத்த விலைக் கடைகளில் மளிகைப் பொருட்களை வாங்கும்போது ஒரு மாதத்துக்கு 200 - 300 ரூபாய் வரை மிச்சமாகும். தவிர, மாத கடைசியில் கையில் பணம் இல்லையென்றால் பொருட்களை வாங்க முடியாது. இதனால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.
7. கையிலிருக்கும் பணத்தை வைத்துதான் செலவுகளை முடிவுசெய்ய வேண்டும். உதாரணமாக, அடுத்த வாரம் 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும் எனில், உடனே எங்கு ஷாப்பிங் போகலாம், என்ன பொருளை வாங்கலாம் எனத் திட்டமிடக்கூடாது. ஏனெனில், அந்தப் பணம் வராமல் போவதற்கு  வாய்ப்புள்ளது. எனவே, கையில் உள்ளதைவைத்து திட்டமிட்டு சிறப்பாக வாழ்வதே புத்திசாலித்தனம்.
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav60d
8. எல்லாவற்றுக்கும் மேலாக, சிக்கனமான வாழ்க்கைமுறைதான் அடுத்தவரிடம் கையேந்தாத நிலைமையை நமக்குத் தரும். விரும்பியதையெல்லாம் அனுபவித்தால் பணம் செலவழியவே செய்யும். இதனால் மாத கடைசியில் பணப் பற்றாக்குறை வரவே செய்யும். எனவே, சிக்கனத்துக்கான வழிவகைகளை அவசியம் தெரிந்துகொண்டு அதன்படி நடப்பது நல்லது'' என்றார் சங்கர்.
கிடைக்கும் சம்பளத்தைத் திட்டமிட்டு செலவு செய்தால், மாத கடைசியில் பணமுடையா இருக்கே என்று கவலைப்படாமல், நிம்மதி யாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav60e
படங்கள்: தே.தீட்ஷித்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Empty Re: புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்!

Tue Dec 02, 2014 11:10 pm
ஏன் வேண்டும் குடும்ப நிதி ஆலோசகர்?
சேமிப்பு, நிதி திட்டமிடல் குறித்த தெளிவு அதிகரித்து வருவது ஒரு வகையில் சிறப்பானதுதான் என்றாலும், அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் தெளிவு இல்லை என்று சொல்லிவிடலாம். நாமும் சேமித்தோம் என்று பெயரவிற்கு சேமிக்கிறார்கள். காய்ச்சல் வந்தால் மருந்து கடையில் மருந்து வாங்குவதைப் போல தங்களுக்கு தெரிந்த வகையில் நிதி திட்டமிடுதலை மேற்கொள்கிறார்கள். இது தவறான நடைமுறை. குடும்ப மருத்துவர், குடும்ப வழக்கறிஞர் போல குடும்பத்திற்கு என்று நிதி ஆலோசகரையும்  வைத்துக் கொள்ள வேண்டும். என்கிறார் நிதி ஆலோசகர் சீனிவாசன். 
 
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Seenivasanபொதுவாக நிதி ஆலோசகர்கள் தன்னிடம் ஆலோசனை கேட்டு வருகிற ஒருவருக்கு, அவரது வருமானம் மற்றும் செலவுகள் அடிப்படையிலும், வாழ்க்கை தர வசதிகளை முன்வைத்தும் பொதுவான ஒரு திட்டத்தைதான் முன்வைப்பார்கள். அப்படி இல்லாமல் ஆறுமாதத்துக்கு ஒருமுறை உங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப நிதி ஆலோசனையை செழுமைப்படுத்தும் அக்கறை கொண்ட நிதி ஆலோசகர்களை குடும்ப நிதி ஆலோசகர்கள் என்கிறேன். அதாவது ஃபேமிலி டாக்டரை போன்று ஃபேமிலி ஃபைனாஷியல் பிளானர் என்றவர், அப்படியான ஃபனான்ஸியல் பிளானரை எப்படி தேர்வு செய்து கொள்வது என்பதையும் விளக்கினார். 
 
பிளான் பண்ணிய காலத்திற்கு பிறகு நமது வருமானம் அதிகரிக்கலாம், கடன் அதிகரிக்கலாம், அல்லது திட்டமிடாத செலவுகள் அதிகரிக்கலாம். இவற்றை அப்டேட் செய்து அதற்கேற்ப அலோசனைகள் கொடுப்பதுதான் முழுமையான நிதி ஆலோசனை. இந்த வேலையைத்தான் நிதி ஆலோசகர்கள் செய்யவேண்டும். தெரிந்த ஒரு நிதி ஆலோசகரை மட்டும் பார்த்துவிட்டு, உடனே அவரிடம் பிளான் வாங்கி விடக்கூடாது. குறைந்தபட்சம் மூன்று நிதி ஆலோசகர்களையாவது சந்தித்து, அதற்கு பிறகு நம்பிக்கையான நிதி ஆலோசகரை தேர்வு செய்யலாம். 
 
நிதிஆலோசகராக பணியாற்ற கல்வித்தகுதி அவசியம். மேலும் முறையான பதிவு பெற்றவரா, சி.எஃப்.பி அல்லது சி.பி.எஃப்.ஏ போன்ற நிதி ஆலோசனை சார்ந்த கல்வி கற்றிருக்க வேண்டும். நிதி ஆலோசனை செய்கிறேன் என்று வருமான வரி ஆலோசனை சொல்கிறவர்கள், காப்பீடு முகவர்கள், ஆர்டி முகவர்கள் சிலரும் நிதி ஆலோசகர்கள் செயல்படுவார்கள் . இவர்கள் நிதி ஆலோசகர்கள் கிடையாது. நமது எந்த லாப நஷ்டத்துக்கும் இவர்களிடம் தெளிவான பதில் இருக்காது. சில இடங்களில் இன்ஷூரன்ஸ், பிக்ஸட் டெபாசிட் திட்டங்களை விற்கும் ஏஜெண்டுகளே நிதி ஆலோசகராகவும் இருப்பார். இவர் விற்கும் திட்டங்கள்தான் சிறந்த வருமானத்தை தரும் என்று அதையே விற்பதற்கு முயல்வார்கள். இவர்களிடம் நல்ல ஆலோசனை கிடைக்கும் என்று நம்ப வேண்டாம். 
 
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Financial
 
ஆலோசனை சொல்வதில் வல்லவராக இருந்தால் மட்டும் போதாது, அதற்கு சரியான வகையில் கணக்கு வழிமுறைகள் சொல்பவராக இருக்க வேண்டும். எளிமையான  வழிமுறையாக இருக்க வேண்டும். தவிர எனக்கு என்ன தேவை என்று நீங்கள் சொன்ன பிறகும், உங்கள் தேவைகள் தாண்டி அவரது கருத்துக்களை உங்கள் மேல் திணிக்கிறாரா என்பதையும் பாருங்கள். அதாவது நமது தேவைக்கு ஏற்ப ஆலோசனை கொடுப்பவர் தான் சிறந்த நிதி ஆலோசகராக இருக்க முடியும். அவரது விருப்பத்தை நம்மிடம் திணிக்க கூடாது.  இந்த அடிப்படையில் ஒரு நிதி ஆலோசகரை தேர்ந்தெடுத்துக் கொள்வடும், அவரை நமது குடும்ப நிதி ஆலோசகராக அமர்திக் கொள்வதும் எதிர்கலாத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள உதவும்.
 
நீரை.மகேந்திரன்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Empty Re: புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்!

Tue Dec 02, 2014 11:11 pm
ஹோம்  பட்ஜெட்
இரா.ரூபாவதி
ஒரு குடும்பத்தில் நிம்மதி நிலவவேண்டும் எனில், அந்தக் குடும்பத்தின் நிதிநிலை சிறப்பாக இருக்க வேண்டும். பணத் தட்டுப்பாடு உள்ள குடும்பத்தில், சின்னப் பிரச்னைகூட பெரிதாக வெடித்து எல்லோரது சந்தோஷத்தையும் கெடுக்கும். ஒரு குடும்பத்தில் நிதிநிலை சிறப்பாக இல்லாமல்போக நாம்தான் முக்கிய காரணம். சம்பளம் கிடைத்தவுடன் இஷ்டத்துக்கு செலவுசெய்தால், மாதக் கடைசியில் காசில்லாமல் தவிக்கவைத்து, கடன் என்னும் புதைகுழிக்குள் தள்ளிவிடும்.
 புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! P56
இதுமாதிரி இருக்கும் ஒரு குடும்பத்தின் நிதிநிலையை சரிசெய்ய வேண்டுமெனில் அந்தக் குடும்பத்தின் செலவு, வரவுக்குள் இருக்க வேண்டும். வரவுக்குள் செலவு இருக்க வேண்டுமெனில் பட்ஜெட் போட்டு செலவுசெய்வது அவசியம். மாத பட்ஜெட் எப்படி போடவேண்டும், இதில் கவனிக்கவேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்குகிறார் நிதி ஆலோசகர் அனிதா ஆர் பட்.புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! P56a
''வருமானத்தில் பட்ஜெட் போடும் பழக்கம்தான் தேவையில்லாத செலவுகளைக் குறைத்து, எதிர்காலக் குறிக்கோள்களை விரைவாக நிறைவேற்றுவதற்கு உதவும். நிரந்தரமான செலவுகள் என்ன, எவ்வளவு சதவிகிதம் கட்டாயம் சேமிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துக்கொண்டாலே இலக்குகளை எளிதாக அடைந்துவிட முடியும்.
பட்ஜெட் போடுவது எளிதான காரியமில்லை. இந்த வேலையைப் பெண்களால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும். ஏனெனில், எந்த செலவையும் எப்போது செய்ய வேண்டும் என்பது குறித்த புரிதல் இயற்கையாகவே பெண்களுக்கு அதிகமாக இருக்கும். ஆனால், பல பெண்களும் பட்ஜெட்
போடுவதை சிறப்பாகச் செய்வதில்லை. இரண்டு, மூன்று மாதம் ஒப்புக்கு  பட்ஜெட் போட்டுவிட்டு, நிறுத்திவிடுவார்கள். சிலர் சின்ஸியராக  பட்ஜெட்
போடுவார்கள். ஆனால், அதுபடி நடக்கமாட்டார்கள். இப்படி செய்வதால் எந்த பயனும் இல்லை.  பட்ஜெட்டை ஏன், எதற்காக போடுகிறோம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! P56b%281%29
(பெரிதாக்க படத்தின் மேல் கிளிக்குக!...)
குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!
பட்ஜெட் போடும்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நான்தான் பணம் சம்பாதிக் கிறேன். எனவே, நான் போடும் பட்ஜெட்டை அனைவரும் பின்பற்ற வேண்டும் என நினைக்கக் கூடாது. உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் தெரியப் படுத்த வேண்டும். அப்போது தான் பட்ஜெட்டை புரிந்துகொண்டு அதைப் பின்பற்றுவார்கள். பட்ஜெட் போடும்போது குழந்தைகளும் உடனிருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! P56e
பணம் குறித்த விஷயங்கள் குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது என நினைப்பது தவறு. பணம் எப்படி வருகிறது, அதில் என்னென்ன செலவுகள் செய்யவேண்டும் என்பது குழந்தைகளுக்குத் தெரிய வேண்டும். அப்போதுதான் அவர்கள் பணத்தைக் கையாளுவதில் சிக்கல் வராது.  தேவையில்லாத பொருட்களை வாங்கிதரச் சொல்லி அடம் பிடிக்க மாட்டார்கள்.
பணத்தைத் தாண்டி சிந்தியுங்கள்!
பட்ஜெட் போடுவது உங்கள் மகிழ்ச்சிக்கு ஒரு தடையல்ல.  இது உங்கள் பணத்தைத் திறமையாக கையாள உதவும். தங்கள் வங்கிக் கணக்கில் இருப்பு கொஞ்சம் அதிகமானதுமே அடுத்து என்ன வாங்கலாம் என்றுதான் பலரும் யோசிக்கிறார்கள். அதாவது, புதிய கார், புதிதாகத் துணிகள், புதிய வீடு, ஆபரணங்கள் எனத் தங்களின் தேவைகளை அதிகமாக்கிவிடுகிறார்கள்.
மேலும், பக்கத்து வீட்டில் அது இருக்குது, இது இருக்குது, நம் வீட்டில் இல்லை, அதை யெல்லாம் நாமும் வாங்கிவிட வேண்டும் என்று துடிக்கக் கூடாது. எந்தப் பொருளை வாங்குவதற்குமுன்பும் அது தேவைதானா, அந்தப் பொருள் இல்லாமல் நிலைமையைச் சமாளிக்க முடியாதா என்றெல்லாம் யோசிக்க வேண்டும். இதனால்  தேவையில்லாதப் பொருட்களை வாங்குவது குறையும். பொருட்கள் வாங்குவதால் மட்டும் உங்களின் சமூக மதிப்பு கூடிவிடாது. நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பொறுத்துதான் சமூக மதிப்பு உருவாகும். அடுத்த வாரமும் பட்ஜெட் போடுவோம்.
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! P56f
மூன்றில் ஒரு பங்கு சேமிப்பு புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! P56c
''நிதி நெருக்கடி இல்லாமல் குடும்பம் நடத்துவதற்கு உறுதுணையாக இருப்பது இந்த பட்ஜெட்தான். பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்துவதால் சேமிப்பு எப்போதும் இருக்கும். இதனால் எந்தப் பிரச்னையையும் எளிதாகக் கையாள முடிகிறது. மேலும், வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகையைச் சேமிப்புக்கு ஒதுக்கிவிடுவேன். மெடிக்ளைம் பாலிசி இருப்பதாலும் மருத்துவச் செலவுகளிலிருந்து தப்பித்துவிடுகிறோம்.''
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! P56dநிம்மதியாக இருக்கிறேன்!
''பத்து ஆண்டுகளுக்குமுன் எந்தவிதமான பட்ஜெட்டும் போடாமல் வருகிற பணத்தை அப்படியே செலவு செய்வோம். இதனால் சம்பளம் வாங்கிய முதல் வாரத்தில் மட்டும்தான் கையில் பணம் இருக்கும். அதன்பிறகு திண்டாட்டமாகவே இருக்கும். இதனால் அவசரத் தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைதான் வரும். அதன்பிறகுதான் பட்ஜெட் என்பதே போட ஆரம்பித்தோம். இன்றைக்கு எங்கள் வாழ்க்கை நிம்மதியாக இருக்கிறது!''
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ஆ.முத்துக்குமார், ஜெ.வேங்கடராஜ்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Empty Re: புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்!

Tue Dec 02, 2014 11:13 pm
ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப் :சிறு திருத்தம் அவசியம்!
பி.பத்மநாபன், நிறுவனர், ஃபார்ச்சூன் பிளானர்.
 
சிவக்குமார் டேர்ம் இன்ஷூரன்ஸை 75 லட்சத்திலிருந்து  2 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்.
இந்த வாரம் ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப் செய்து கொள்ள நம்மைத் தேடி வந்தவர் சிவக்குமார் (வயது 38), பெங்களூரில் உள்ள பிரபல ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மனைவி அகிலா (வயது 32) தற்போது இல்லத்தரசி; முன்பு இவரும் ஐ.டி துறை சார்ந்த நிறுவனத்தில்தான் பணிபுரிந்தார். இவர்களுக்கு இரண்டு வயதான பூரணி என்கிற பெண் குழந்தை உள்ளது. குழந்தைப் பிறந்ததால் அகிலா தற்போது வேலைக்குச் செல்வதில்லை. சிவக்குமாரைச் சார்ந்து அவரின் தாயாரும் ஒரு தங்கையும் உள்ளனர்.
சிவக்குமாருக்கு  அவரின் சம்பளம் மற்றும் சென்னையில் உள்ள அவருடைய வீட்டின் மூலம் வரும் வாடகை எல்லாம் சேர்த்து மாதம் இரண்டு லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது.
தற்போதைய நிதி நிலைமை!
மாதாந்திரச் செலவு   - ரூ.45,000
வீட்டுக் கடன் தவணை  - ரூ.12,000
வீட்டுக் கடன் கூடுதல் தவணை   - ரூ.25,000

புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav62
முதலீடுகள்:
வங்கி டெபாசிட்  - ரூ.15,00,000
மியூச்சுவல் ஃபண்டு  பங்குகளில் முதலீடு - ரூ.18,00,000

கடன்கள்:
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav62aவீட்டுக் கடன்  - ரூ.10,00,000
அசையாச் சொத்துகள்:
சென்னையில் உள்ள மூன்று வீடு மனைவியின் பெயரில் இருக்கும் வீட்டைச் சேர்த்து மொத்தம் மூன்று வீடு உள்ளது. ஒரு வீடு வசிப்பதற்கு, இன்னொன்றுத் தன்னுடைய குழந்தைக்கு என எடுத்துக் கொண்டால், மற்ற ஒரு வீட்டைத் தகுந்த சமயம் பார்த்து விற்றுவிடலாம்.
 இன்ஷூரன்ஸ், இன்னும் தேவை!
இவர் டேர்ம் இன்ஷூரன்ஸ் 75 லட்சம் ரூபாய்க்குதான் எடுத்துள்ளார். இவருடைய சம்பளத்தை இவரது மொத்தக் குடும்பமும் எதிர்நோக்கியுள்ளது. இவருக்குக் குறைந்தது இரண்டு கோடி ரூபாய் இன்ஷூரன்ஸ் கவரேஜ் வேண்டும். முன்பே ரூ.75 லட்சம் எடுத்துள்ளதால் இன்னும் ரூ.1.25 கோடி அடுத்த 25 வருடத்துக்கு  எடுத்துக்கொள்ளவேண்டும். அதற்கு வருடம் ரூ.20,000 பிரீமியம் கட்டவேண்டி இருக்கும்.
இவர், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பக்கம் தன் கவனத்தைச் செலுத்தாமல் இருக்கிறார். இன்னும் ஐந்து வருடத்தில் வேலையை விட நினைப்பதால், உடல்நலத்தின் மீது அக்கறை எடுத்துக்கொண்டு, உடனே மனைவி, குழந்தைக்கு என 5 லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க வேண்டும். அதற்கு வருடத்துக்கு பிரீமியம் ரூ. 15,000 ஆகும். அம்மாவுக்கு என்று தனியாக 3 லட்சம் ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கவேண்டும்.
 சேமிப்பு மற்றும் முதலீடுகள்!
சிவக்குமாரின் மாத செலவு மற்றும் முதலீடு ரூ.1.94 லட்சம். இதில் மியூச்சுவல் ஃபண்டு ரூ.26,000, தங்கம் ரூ.7,500, எஃப்.டி ரூ.50,000, எமர்ஜென்சி ஃபண்டு ரூ.20,000 அடங்கும்.
இன்று ஒருவருக்குப் பெண் குழந்தைப் பிறந்துவிட்டால், உடனே தங்கம் சேர்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இது சரியல்ல. காரணம், நீண்ட இடைவெளியில் தங்கம் தரும் லாபம் பெரிய அளவில் இருக்காது. எனவே, அதிகப்படியான லாபத்தைத் தராது என்பதே நிபுணர்களின் கருத்து.
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav62b
இவர் தன் பெண்ணின் படிப்புக்குத் தற்போதைய நிலையில், 15 லட்சம் ரூபாய் தேவை என்று சொல்கிறார். அது இன்னும் 16 வருடங்களில் ரூ.51 லட்சமாக மாறும். அதேசமயம், இன்றிலிருந்து அதற்காக 6,500 ரூபாயை மாதம் முதலீடு செய்தால், அந்த இலக்கை எளிதாக அடையலாம். அதேபோல, திருமணத்துக்கு இன்றைய தேதியில் 15 லட்சம் ரூபாய் என எடுத்துக்கொண்டால், 21 வருடத்தில் 8% பணவீக்கத்தில் ரூ.75 லட்சமாகிவிடும். அதற்கு மாதம் 4,500 ரூபாய் சேமித்தாலே போதுமானது. ஏற்கெனவே சிவக்குமார் 26,000 ரூபாயைச் சேமித்து வருகிறார். இதிலிருந்து 11,000 ரூபாயை ஒதுக்கினால் இதற்குப் போதுமானது.
இவர் ஐந்து வருடத்தில் வேலையை மாற்றும்போது இவரது தங்கையின் அத்தியாவசியத் தேவைக்காகப் பெரிய தொகைத் தேவைப்படும் என்கிறார். தற்போது மியூச்சுவல் ஃபண்டு மற்றும் பங்குச் சந்தையில் ரூ.18 லட்சம் வைத்துள்ளார். 15% கூட்டு வட்டியில் இன்னும் 5 வருடத்தில் அந்தப் பணம் ரூ.36 லட்சம் ஆகலாம். இந்த முதலீட்டில் அதிக ரிஸ்க் உள்ளதால்,  தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து, தேவைப்பட்டால் வேறு முதலீடுகளுக்கு மாற்றவேண்டும். ஃபிக்ஸட் டெபாசிட்டில் சேமிக்கும் 50,000 ரூபாயுடன் வருமானத்திலிருந்து 25,000 ரூபாயைச் சேர்த்து 75,000 ரூபாயாக மியூச்சுவல் ஃபண்டில் போட்டால், அது 5 வருட முடிவில் 15% கூட்டு வட்டியில் ரூ.67 லட்சமாகிவிடும். இந்தத் தொகையைப் பயன்படுத்தித் தங்கையின் தேவையைப் பூர்த்திச் செய்துகொள்ளலாம்.
மேலே சொன்ன முதலீடுகளைத் தேவைக்குப் பிறகு அப்படியே தொடர்வது ஓய்வுக்காலத்துக்குப் பயனளிக்கும். எப்போதும் அந்த முதலீட்டை நிறுத்திவிடக் கூடாது. வருமானம் உயரும்போது ஓய்வுக்கால முதலீட்டை அதிகரித்து வருவதில் கவனம் அவசியம்.
 திருத்தம் செய்யவேண்டும்!
இவரது இலக்குகள் எல்லாம்  அடையக்கூடியதே. ஆனால், அதற்குச் சில திருத்தங்கள் செய்யவேண்டும். நான் ஃபிக்ஸட் டெபாசிட்டில் போடும் முதலீட்டை எடுத்து மியூச்சுவல் ஃபண்டில் போடச் சொன்னால், எல்லோரும் அது ரிஸ்க்காச்சே என்கிறார்கள்.  கடந்த 5 வருடத்தில் 10 முதல் 18% வரை எஸ்ஐபி (SIP) திட்டத்தில் வருமானம் கிடைத்துள்ளது. மேலும், வரும் 3 முதல் 5 ஆண்டுகளில் சந்தை நன்றாக வர வாய்ப்புள்ளது. இதில், பெரிய அளவில் ரிஸ்க் இருப்பதாகத் தெரியவில்லை என்பது என் கருத்து.
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav62c
 ஹெல்த் செக்-அப் ரிப்போர்ட்!
டேர்ம் இன்ஷூரன்ஸ் ரூ.75 லட்சத்திலிருந்து 2 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்.
5 லட்சம் ரூபாய் ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியை அலுவலகத்தில் தருகிறார்கள். இதற்குமேலும் தனியாக ஒன்று எடுத்துக்கொள்வது நல்லது. தன் அம்மாவுக்குத் தனியாக ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
20,000 ரூபாய்  எமர்ஜென்சிக்கு எனச் சேமிக்கிறார். தற்போது ஃபிக்ஸட் டெபாசிட்டில் உள்ள 15 லட்சத்தில், 10 லட்சத்தை எமெர்ஜென்சி ஃபண்டு என எடுத்துக்கொள்ளலாம். தனியாகச் சேமிக்கவேண்டிய அவசியமில்லை. மீதம் ரூ.5 லட்சத்தை முதலீட்டுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்காகச் சேமித்துவந்த தொகையை மேலே சொன்னதுபோல, தங்கையின் அவசரத் தேவைக்கும், பின்னர் ஓய்வுக்காலத்துக்கும் சேமிக்கலாம்.
அவருடைய இலக்குக்கான காலம் மிகக் குறைவாக உள்ளதால் வருமானத்தின் பெரும் தொகையை மியூச்சுவல் ஃபண்டில் சேமிக்கலாம். பாதுகாப்பான மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் அதிக வருமானம் தரக்கூடிய ஃபண்டுகளைத் தேர்வு செய்வது அவசியம்.
ஒரு வீட்டை, ஏதாவது ஓர் எதிர்காலத் தேவையுடன் லிங்க் செய்துகொள்ளலாம்.
தங்கத்துக்கு என்று மாதம் 7,000 ரூபாய்ச் சேர்க்கிறார். இதை வேறு முதலீட்டில் போட்டால், தங்கம்  விலை நன்கு குறையும்போது வாங்கிக்கொள்ளலாம்.
தற்போது சேமிப்பதை நீண்டகால இலக்குகளுடன் இணைத்துக் கொண்டால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவரது செலவுகள் எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்பதால், தேவையற்ற முதலீட்டை மேற்கொள்ளத் தேவையில்லை.
வீட்டுக் கடன் தவணையைக் குறைப்பதற்கு ரூ.25,000 கூடுதலாகக் கட்டி வருகிறார்.  வீட்டுக் கடனுக்கான வட்டி மிகக் குறைவு. எனவே, அதை முன்கூட்டியே செலுத்துவது சரியான யோசனை அல்ல.
புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Nav62d
 ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப் ரேட்டிங்!
இவர் நாணயம் விகடனின் நீண்டகால வாசகர் என்பதால் இவர் செய்திருக்கும் முதலீட்டில் தெளிவு தென்படுகிறது. மேலே சொன்னது போல, இவரது முதலீட்டில் இன்னும் சில திருத்தங்களைச் செய்தால் இலக்குகளை எளிதில் அடையலாம்.
இவரது எதிர்பார்ப்புகள் மற்றும் வேலை செய்யக்கூடிய காலம் குறைவாக உள்ளதால் இவர் கொஞ்சம் ரிஸ்க் எடுத்தாகவேண்டும்.  இவர் தவறான எந்த முதலீட்டையும் செய்யவில்லை. இத்தனை காலம் இவர் நாணயம் விகடனைப் படித்ததன் மூலம் கிடைத்த பலன் இது.
கட்டுப்பாடான செலவுகள், சரியான இன்ஷூரன்ஸ் பாலிசி, பரவலான முதலீடு, அடையக்கூடிய இலக்குகள், தற்போதுள்ள முதலீட்டுக் குணங்கள், அதன் செயல்பாடு, தொடர்ந்து முதலீடு செய்யும் பண்பு ஆகியவற்றைவைத்து இவருக்கு 70% மார்க்

நன்றி: நாணயம் விகடன்
Sponsored content

புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்! Empty Re: புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்!

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum