வெண்புள்ளி என்பது ஒரு நிறக்குறைபாடுதானே ஒழிய அது நோயல்ல
Sat Nov 29, 2014 6:56 am
வெண்புள்ளி குறைபாட்டுக்கு மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சிப்பிரிவு கண்டு பிடித்துள்ள மருந்து நல்ல பலன்களை அளிக்கிறது என்பதையும் முந்தைய பதிவுகளில் தெரிவித்திருக்கிறேன்.
வெண்புள்ளி எனும் குறைபாட்டினை வெண்குஷ்டம் என அழைக்கும் அவலத்தை களையும் பொருட்டு கடந்த ஆட்சியில் இதனை வெண்புள்ளி என்றே அழைக்க வேண்டும் என அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது.
இருப்பினும் இக்குறைபாடு உடையோர் பல விதமான இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.கடந்த ஆண்டு கூட கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவன் சேர்க்கப்பட்டு சில நாட்கள் வகுப்புக்கு சென்ற நிலையில் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டான்,சமூக ஆர்வலர்களின் பலத்த எதிர்ப்பினால் நிர்வாகம் பணிந்து மீண்டும் அந்த மாணவனை கல்லூரியில் அனுமதித்தது.
இளம் சிறார்கள் கூட இந்த குறைபாட்டினால் பல கல்வி நிலையங்களினால் புறக்கணிக்கப்படும் நிலை இருந்து வருகின்ற நிலையில்,தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திருமதி.சபிதா ஐஏஎஸ் அவர்கள் ஒரு சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளார்.இனி எந்த ஒரு கல்வி நிறுவனமும் வெண்புள்ளி குறைபாட்டினை காரணம் காட்டி எந்த ஒரு மாணவனையும் தங்கள் கல்வி நிறுவனத்தில் சேர்க்காமல் அவமதிக்கக்கூடாது என்பதே இந்த சுற்றறிக்கையின் சாராம்சமாகும்.அந்த சுற்றறிக்கை
கல்வி நிறுவனங்கள் வெண்புள்ளிகள் உள்ள குழந்தைகளை பாரபட்சமாக நடத்தக் கூடாது. அனுமதி மறுக்கக் கூடாது. தமிழக அரசு உத்தரவு
LETTER No . 4923/ E 1/ 2013 -1, dated 14.03.2013
இனி எந்த கல்வி நிறுவனமாவது வெண்புள்ளி பாதித்தோரை ஒதுக்க நினைத்தால் அவர்களை சட்டரீதியாக சந்திக்க இந்த சுற்றறிக்கை பாதுகாப்பாக நின்று சட்டப் பாதுகாப்பளிக்கும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum