கடைகளில் டீ குடிப்பவரா? எச்சரிக்கை ...!!!
Sat Nov 29, 2014 6:54 am
கடைகளில் டீ குடிப்பவரா? எச்சரிக்கை ...!!!
நம்மவர்களில் பல பேர்கள் டீக்கடைக்கு போன உடனே கேக்குறது, “நல்ல ஸ்ட்ராங்க் டீ ஒண்ணு கொடுங்க”
ன்னுதான். அந்த ஸ்ட்ராங் டீ பிரியர்கள் மனசும் ஸ்ட்ராங்கா இருந்தா இந்தப் பதிவை படிக்கலாம்.
படத்தில் இருக்கின்ற இரண்டு டீ டம்பளரில், நமக்கு வலதுபுறம் இருப்பது நல்ல டீ. இடது புறம் இருப்பது கலப்படமான ஹேர் டை கல்ந்த டீ. இதனை எப்படிக்கண்டுபிடிக்கலாம்...?
மிகவும் எளிது. பரிசோதனை செய்ய நினைக்கின்ற தேயிலையை ஒரு ஸ்பூனில் எடுத்துக்கொண்டு. ஒரு கண்ணாடி டம்ளரில், சாதாரண தண்ணீரை ஊற்றிவிட்டு, அதில் அந்த தேயிலையைத் தூவவேண்டும். நல்ல தேயிலையாயிருந்தால், தேயிலையின் சாறு மட்டும் இறங்கி தண்ணீரின் நிறம் சிறிது மட்டுமே மாறும்.
கலர் சேர்த்த கலப்பட தேயிலையாயிருந்தால், தேயிலை தண்ணீரில் மூழ்கத்துவங்கும்போதே, கலர்கள் அந்த நீரில் வர்ண ஜாலமடிக்கும். கொஞ்ச நேரத்தில், அந்த டம்ளர் தண்ணீர் முழுவதுமே, இடது பக்க டம்ளரில் உள்ளதுபோல் கலராகிவிடும்.
எப்படி தயாரிக்கிறார்கள் இந்த கலப்படத்தேயிலையை?
கடைகளில் டீ போடப்பயன்படுத்தியபின் தூர எறியப்படும் சக்கை டீ தூள் தான் கலப்படத்தேயிலைக்காரர்களை சக்கைப்போடு போடவைக்கின்றது.
ஆம், அந்த சக்கைத்தேயிலையை சேகரித்து, அவற்றில் ஹேர்டைக்குண்டான ரசாயன நிறமிகளைக்கலந்து, நல்லா ஸ்ட்ராங்கான டீ கிடைக்கும்னு பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து அந்தக் கலப்படத்தேயிலையை சந்தைப்படுத்துகிறார்கள்.
பொதுமக்களாகியா நாம் விழிப்புணர்வை அடையத்தவறினால் அல்ஸர் என்ற வயிற்றுப் புண், சொறி,சிரங்கு போன்ற தோல் உபாதைகளுக்கு ஆளாகி அல்லல் பட நேரும். எச்சரிக்கையுடன் சாதாரண கடைகளில் பெரும்பாலும் டீ அருந்துவதனை தவிருங்கள். மேலும் தாங்கள் வாங்கி உபயோகிக்கும் தேயிலையினை பரிசோதித்து தரமான தேயிலை நிறுவனம் விற்பனை செய்யும் கலப்படமில்லாத தேயிலையிற்கு மாறுங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum