பெண்களைப் பற்றும் மார்பக புற்று நோய்
Sat Nov 29, 2014 6:37 am
பாட்டி மார் அம்மா மார் கால கட்டங்களில் புற்று நோய் என்றாலே அறியாமை அதிலும் மார்களில் புற்று நோய் என்பது அறியாமையிலும் அறியாமை. வரமாய் வராத ஒன்று அவர்களுக்கு ஆனால் இன்றோ விறு விறுவென்று வக்கிரத்தோடு வருகிறது.
உலகின் பத்து பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்று நோய் என்று சொல்கிறது ஆய்வு. இயற்கையை அழித்துக் கொண்டிருப்பதால் வரும் பாதிப்புகளுக்கு இது சான்று.
இந்த புற்று பற்றும் சாத்தியமானவர்கள் யார் யார்.... ?
*ஜீண் கோளாறுகள் தொடர்ச்சியாக் வரும் ரத்த பந்தங்கள் .
*12 வயதுக்குட்பட்டு பூபெய்தவர்கள்
*55 வயதுக்கு மேற்பட்டு மெனோபாஸ் அடைந்தவர்கள்
*ஈஸ்ட்ரோஜென் அதிகம் சுரக்கும் பெண்கள்
*அடர்த்தியான எலும்பு அமைப்பைக் கொண்ட பெண்கள்
மகப் பேறு அடையாதவர்கள்
*30 வயதைக் கடந்த பின் முதல் கருத் தறித்தவர்கள்
*வேறு உபாதைகள் ரத்த அழுத்தம் ,சர்க்கரை நோய்க்கு நீண்ட காலம் மருந்து எடுத்துக் கொள்பவர்கள்
*மது சிகெரெட் ட்டுக்கு அடிமையானவர்கள்
*கொழுப்பு சத்து உள்ள உணவை அதிகம் உண்பவர்கள்
இன்னும் ஏகப்பட்ட காரணங்கள் இருப்பினும் இதனால் தான் என்று எந்த அறிவியலாலும் மருத்துவத்தாலும் தீவிரமாக சொல்ல முடியவில்லை . சரி ஏதோ ஒரு காரணத்தால் அலட்சியத்தால் வந்து விட்டது..அவ்வளவு தானா வாழ்க்கை? இல்லை கான்சருக்கு பின்னும் இருக்கு ஆனந்தமான வாழ்வு. ஆனா அதைக் கடக்க வேண்டும் துணிவு ,தீவிர சிகிச்சை ,உறவுகளின் பலம் நம்பிக்கை.
மார்பகத்தில் புற்று நோய் வந்ததை எப்படிக் கண்டறியலாம் ஆரம்ப கட்டங்களில் எந்த மாற்றமும் தெரியாது வலியும் இருக்காது. எதாவது ஒரு இடத்தில் தடித்த சதையை உணர்ந்தாலோ அல்லது வடிவத்தில் ஏதேனும் மாற்றம் தெரிந்தாலோ அலட்சியமாக இருக்காதீர்கள்.
உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யுங்கள்
முதுகு வலி கை வலி தோள் பட்டை வலி என்று நீண்ட காலமாக எதாவது தொந்தரவு இருந்தால் சாதாரண சதைப் பிடிப்பு என்று விட்டு விடாதீர்கள். வரும் முன் காப்பதே நலம். ஆக அவ்வப்போதும், குளிக்கும் போதும், படுக்கும் போது இரண்டு மார்பகங்களையும் அழுத்தி தடவி சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
எந்த வித சின்ன மாற்றம் தெரிந்தாலும் உடனே மருத்துவரை அணுகுங்கள். புற்று நோய் வந்து விட்டால் அவ்வளவுதான் உயிரேப் போய்விடும் வாழ்க்கையே முடிந்தது என்று இல்லை. எத்தனையோ பெண்கள் இதை வெற்றி கரமாக வென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..
மருத்துவத்தை விட மனோ பலமும் மனித பலமும் தான்
இந்நோய் தாக்கியாவருக்கு அதி முக்கியம்.பெண் என்பவள் ஒரு குடும்பத்தின் குத்து விளக்கு அஸ்திவாரம். பிள்ளைகளின் அரண். மார்பக புற்று நோய் ஒரு பெண்ணின் வேதனை மட்டும் அல்ல மொத்தக் குடும்பத்திற்கு வரும் சோதனை.
ஆக குடும்பமாக உறவாக அரவணைத்து அவளை ஊக்குவித்து புற்று நோய்க்கு பின்னும் ஒரு அழகிய வாழ்க்கை வரும் என்று நம்பிக்கையூட்டி வழிநடத்த வேண்டும். தனிமனித போராட்டம் அல்ல இது ஒட்டு மொத்த குடும்பத்தின் போராட்டம். ஆனால் உரிய நேரத்தில் உரிய சிகிச்சையளித்து தன்னம்பிக்கையோடு அவளுடன் அனைவரும் போராடினால் வெற்றி நிச்சயம்..
வாழ்க்கை மீண்டும் நம் கையில்.
சென்ற அக்டோபர் மாத மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மாதம். இந்த தினத்தில் இங்கே உள்ள அனைத்து தோழிகளுக்கும் இந்த பதிவை சமர்ப்பணம் செய்து ஆரோக்கிய வாழ்வியல் முறையை அறிவுறுத்தி ஆண்டிற்கு ஒருமுறையேனு மாம்மோகிராம் மற்றும் பொதுவான மருத்துவ பரிசோதனைகளை மேற் கொண்டு எந்த நோயும் வருமுன் காத்து நம்மையும், நம்மை நாடி இருப்பவரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்வோம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum