கல்வி தகுதியை மாநில & மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக ஆன்லைனில் பதிவது எப்படி?
Sat Mar 02, 2013 9:15 pm
பயனர் பெயர் (username):
பயனர் பெயரானது பதினாறு இலக்கத்தில் இருக்க வேண்டும்
எடுத்துக்காட்டு:
- உங்களின் பதிவு என் : 1996M00216 (ஆண்-M) (பெண்-F)
- உங்களின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு: TND (மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி)
- இந்த இரண்டும் இனைந்தது தான் உங்களின் பயனர் பெயர்.
- TND1996M00000216 (1996M 00216 பதில் எட்டிலக்கமாக 00000216 மாற்றவும்.
கடவுசொல் (password)
உங்கள் கடவுச்சொல்லை இந்த முறையில் உங்கள் பிறந்த தேதியை
(dd / mm / yyyy) இட வேண்டும்.
உள் சென்று பதிவது எப்படி:
1. புதியவர்
- புதிய பயனர் ID பதிவு செய்ய இங்கே சொடுக்கவும் ( Click here for new User ID Registration )
- பின்பு உங்களின் கல்விதகுதி மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு
சேமிக்கவும் பிறகு உங்களின் அடையாள அட்டையை நகல் எடுக்கவும்.மிக எளிதாக
உங்களின் புதிய பதிவை வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.
2.பழையவர்
- உங்களின் கணக்கை லாக்ஆன் செய்தவுடன் உங்களின் பக்கம் திறக்கப்பட்டுவிடும்.
- பின்பு தகுதி சேர்க்கவும் (Add Qualification) இங்கே சொடுக்கவும்
- பின்பு உங்களின் கல்வி தகுதி மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு சேமிக்கவும். பிறகு உங்களின் அடையாள அட்டையை நகல் எடுக்கவும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு
- ARD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர்
- CBD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூர்
- CBR மண்டல துணை இயக்குனர் அலுவலகம் (தொழில்) கோயம்புத்தூர்
- CDC பயிற்சி வழிகாட்டல் மையம் எஸ்சி / எஸ்டி - கோயம்புத்தூர்
- CHD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை
- CHG தலைமை அலுவலகம், சென்னை
- CHP தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை
- CHR மண்டல துணை இயக்குநர் அலுவலகம், சென்னை
- CHS மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (ஊனமுற்றோர்-சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம்) சென்னை
- CHT மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (தொழில் நுட்ப பணியாளர்) .- சென்னை
- CHU மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (திறனற்ற) சென்னை
- CUC பயிற்சி வழிகாட்டல் மையம் எஸ்சி / எஸ்டி - கடலூர்
- CUD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர்
- DGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திண்டுக்கல்
- DRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தர்மபுரி
- ERD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஈரோடு
- KGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கிருஷ்ணகிரி
- KPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், காஞ்சிபுரம்
- KRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கரூர்
- MDD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மதுரை
- MDP தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம் மதுரை
- MDR மண்டல துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அலுவலகம், மதுரை
- NGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கன்னியாகுமாரி
- NKD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நாமக்கல்
- NPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், நாகப்பட்டினம்
- PDD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், புதுக்கோட்டை
- PRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பெரம்பலூர்
- RPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ராமநாதபுரம்
- SGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சிவகங்கை
- SLD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சேலம்
- TCC பயிற்சி வழிகாட்டல் மையம், திருச்சி
- TCD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருச்சி
- TCR மண்டல துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), திருச்சி
- THD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தேனி
- TJD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர்
- TMD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருவண்ணாமலை
- TNC பயிற்சி வழிகாட்டல் மையம், திருநெல்வேலி
- TND மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி
Re: கல்வி தகுதியை மாநில & மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக ஆன்லைனில் பதிவது எப்படி?
Sat Mar 02, 2013 9:17 pm
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படும் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும் ஆன்லைன் வழியாக ஒருங்கிணைக்கப்பட்டு www.tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணைய தளத்தில் புதிய மனுதாரர்கள் கல்வித்தகுதி பதிவு, புதுப்பித்தல்,
கூடுதல் கல்வித்தகுதிகளை ஆன்லைன் வழியாக பதிவு செய்து கொள்ளலாம்.
மாணவர்கள், பட்டதாரிகள் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள இந்த இணைய தளத்தை
பயன்படுத்தி ஆன்லைன் மூலம் தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்தால் கால
விரயம், அலைச்சல், பணச்செலவினை மிச்சப்படுத்தலாம்.
தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக மனுதாரர்கள் புதிய பதிவு,
புதுப்பித்தல், கூடுதல் கல்வித் தகுதிகள் ஆன்லைன் வழியாக பதிவு செய்து, அடை
யாள அட்டை மற்றும் வேலை வாய்ப்பு பதிவு எண் பெற்ற மனுதாரர்கள் மீண்டும்
வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தங்களது கல்வி சான்றினை அனுப்ப தேவையில்லை.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி,
தர்மபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி,
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய 16 மாவட்டங்களைச் சேர்ந்த
மனுதாரர்கள் சென்னை சாந்தோமில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு
அலுவலகத்திற்கு நேரில் வரத்தேவையில்லை.
தாங்கள் சார்ந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலோ, வீட்டில் உள்ள
கம்ப்யூட்டரிலோ, இண்டர்நெட் மையங்களிலோ, புதிய பதிவு, புதுப்பித்தல்,
கூடுதல் கல்வித்தகுதி பதிவு ஆகிய பணியினை மேற்கொள்ளலாம்.
மனுதாரர்களின் அடையாள அட்டை தொலைந்து போக நேரிட்டால் தங்கள் பதிவெண்ணை
பயன்படுத்தி அடையாள அட்டையினை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யும் மனு தாரர்களுக்கு உடனடியாக
அடையாள அட்டை வழங்கப்படும்.
ஆன்லைன் பதிவு செய்வோரும் உடனடியாக அடையாள அட்டை பிரிண்ட்
எடுத்துக்கொள்ளலாம். மனுதாரர் விரும்பினால் பதிவெண்ணை மட்டும் "சேவ்"
செய்துகொண்டு தேவைப்படும்போது பதிவட்டை எடுத்துக் கொள்ளலாம். கூடுதல்
கல்வித்தகுதி பதிவு செய்ய விரும்புவர்கள் தமிழ்நாடு வேலைவாய்ப்பு இணைய
தளத்தில் "அப்டேட் டிரோபைல்" சென்று "சேவ்" செய்து பிரிண்ட் எடுத்துக்
கொள்ளலாம்.
அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டுமே இடமாற்றம், முகவரி மாற்றம் இருந்தால்
மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். பிற மாவட்டங்களுக்கு மாறி சென்றால்
அதற்கு ஆன்லைனில் முகவரி மாற்றம் செய்ய இயலாது. நேரில்தான் வரவேண்டும்.
மாவட்டத்திற்குள் முகவரி மாற்றம் செய்ய வேண்டுமானால் ரேஷன் கார்டு எண்ணை
மட்டும் குறிப்பிட வேண்டும். உலகின் எந்த மூளையில் இருந்தும் பதிவை
புதுப்பித்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். இந்த வசதியை மனுதாரர்கள்
பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நன்றி: இரஜகை
Permissions in this forum:
You cannot reply to topics in this forum