கர்த்தருக்கு செய்யும் உபகாரம்
Thu Nov 13, 2014 8:55 am
அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். - (மத்தேயு 25:40).
ரூத்திற்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அதில் ஒரு ஸ்டாம்ப்போ, எந்த அடையாளமும் இல்லை. அவர்களுடைய முகவரி மட்டும்தான் இருந்தது. ஆச்சரியத்துடன் அவர்கள் அதை திறந்து பார்த்தபோது அதில்,
.
அன்புள்ள ரூத்,
.
நான் நீ இருக்கும் ஊருக்கு பக்கம் வருகிறபடியால், உன்னை வந்துப் பார்க்கலாம் என்று இருக்கிறேன். இன்று இரவு வருவேன்.
.
எப்போதும் உன்னை நேசிக்கும்,
இயேசுகிறிஸ்து
.
என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்தவுடன் ரூத்திற்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை, 'ஏன் என்னைப் பார்க்க வருகிறார் இயேசு? நான் ஒன்றும் மற்றவர்களை விட ஸ்பெஷல் இல்லையே, என்னன்னு தெரியலையே, அவருக்கு என்ன நான் கொடுப்பேன், என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லையே' என்று தனக்குள்ளே பேசிக் கொண்டார்கள்.
.
கையில் இருந்த பணத்தை எண்ணிப்பார்த்தார்கள். ஐந்து டாலர்கள் தேறினது. அதை எடுத்துக் கொண்டு, பக்கத்தில் இருக்கும் கடைக்கு ஓடினார்கள். பால் ஒரு பாட்டில், ரொட்டி ஒரு பாக்கெட்டும், இறைச்சி கொஞ்சமும் வாங்கி வீட்டிற்கு வேகமாக வந்துக் கொண்டிருந்தபோது, வழியில் வயதான இருவர் அவர்களிடம் 'அம்மா, சாப்பிட ஏதாவது கிடைக்குமா?' ஏன்று கேட்டார்கள். அவர்களை பார்த்தபோது, அழுக்காக, குளிருக்கு போதுமான உடைக்கூட இல்லாமல் நடுங்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்.
.
ரூத் அதற்கு, 'ஐயா, நானும் ஒரு ஏழைப் பெண்தான், என்னிடம் இருந்த பணத்தில் ஒரு முக்கியமான விருந்தினர் என் வீட்டிற்கு வரப்போகிறார் அவருக்கு உணவு கொடுப்பதற்காக வாங்கிக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று அவசர அவசரமாக சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்களின் அவசரத்தை பார்த்த அந்த மனிதர், 'பரவாயில்லை, நன்றி, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்று சொல்லி நகர்ந்தார்கள்.
.
அவர்கள் கொஞ்சதூரம் போவதற்குள் ரூத், அவர்களை அழைத்து, 'ஐயா நீங்கள் இந்த உணவை வைத்து சாப்பிடுங்கள், நான் என்னுடைய விருந்தினருக்கு வேறு பார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்லி, வாங்கி வந்திருந்ததை அவர்களின் கைகளில் கொடுத்தார்கள். கூட இருந்த வயதான பெண்மணி நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, தன் மேல் அணிந்திருந்த ஸ்வெட்டரை கொடுத்து, 'எனக்கு வேறொன்று வீட்டில் இருக்கிறது நீங்கள் இதைப் போட்டுக் கொள்ளுங்கள்' என்று கொடுத்து விட்டு, வீடு வந்து சேர்ந்தார்கள்.
.
'ஐயோ, இப்போது இயேசுகிறிஸ்து வருவாரே, அவருக்கு நான் என்னக் கொடுப்பேன்' என்று வருந்தியவாறே அவர்கள் வீட்டுக்கு முன் வந்தபோது, அவர்களுக்கு இன்னொரு கடிதம் வந்திருந்ததை கண்டார்கள். ஒரு நாளில் இரண்டு முறை கடிதம் வராதே என்று சொல்லிக் கொண்டே அதை பிரித்தபோது,
.
அன்பு ரூத்,
.
உன்னை கண்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது. நீ கொடுத்த உணவு மிகவும் நன்றாக இருந்தது. மட்டுமல்ல, உன்னுடைய ஸ்வெட்டரும் அருமை!
.
எப்போதும் உன்னை நேசிக்கும்
இயேசுகிறிஸ்து
.
என்று எழுதப்பட்டிருந்தது.
.
பிரியமானவர்களே, 'மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்' என்று இயேசுகிறிஸ்து சொன்னதாக மத்தேயுவில் வாசிக்கிறோம். ஏழையாயிருக்கிற ஒருவருக்கு நாம் செய்யும் உதவி கர்த்தருக்கே செய்ததற்கு சமம். ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார் என்று வேதம் கூறுகிறது.
.
இந்த வருட கடைசி மாதங்களில் வந்திருக்கிற நமக்கு தேவன் இந்த வருட முழுவதும் கொடுத்த ஆசீர்வாதங்கள் மிகவும் அதிகம். நாம் நினைப்பதற்கும், வேண்டுவதற்கும் மிகவும் அதிகமாக நம்மை ஆசீர்வதித்திருக்கிறாரல்லவா? அவற்றை நாம் நமக்கு தெரிந்தவர்களுடன், நண்பர்களுடன், உறவினர்களுடன் பங்கிட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொள்கிறோம்.
.
ஆனால், அவைகளோடுக்கூட, நாம் இந்த சமயங்களில் ஏழ்மையானவர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். 'அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: ...பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங் கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்' (மத்தேயு 25:34-39).
.
இயேசுகிறிஸ்து பசியாயிருந்தபோது, தாகமாயிருந்தபோது, அந்நியனாக இருந்தபோது, வஸ்திரமில்லாதவராக இருந்தபோது, வியாதியிலிருந்தபோது, காவலிலிருந்தபோது அவருக்கு உதவி செய்தவர்களைப் பார்த்துதான் சொல்கிறார், 'மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்பார். உண்மையில் அவர் பசியாக இல்லை, தாகமாக இல்லை, காவலில் இல்லை, வியாதியாக இல்லை. ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு நாம் செய்த உதவி கர்த்தருக்கே செய்ததைப் போன்றதாகும்.
.
நமக்கு கொடுக்கப்பட்ட மீதியான நேரங்களில், கூட இரண்டு மூன்று பேரை கூட்டிக் கொண்டு, ஆஸ்பத்திரியில் வியாதியிருப்பவர்களை சந்தித்து ஆறுதல் சொல்வோமா? எனக்கு தெரிந்த வயதான ஒருவர், ஒவ்வொரு நாளும் காலையில் தனக்கு அறிமுகமில்லாத வியாதியஸ்தர்களை கண்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, தன்னால் இயன்றதை கொடுத்து விட்டு செல்வார். அவர் மரித்தபோது அங்கிருந்தவர்கள் எல்லாரும் கலங்கினர். வயதானவரே செய்யும்போது, நாம் வாரத்தில் ஒருநாள் சிலமணி நேரம் ஒதுக்கி வியாதியஸ்தர்களை சென்று ஆறுதல் கூறுவது எத்தனை முக்கியம்? சிறைச்சாலையில் இருப்பவர்களை கண்டு ஆறுதல் கூறலாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் தேவையற்ற சிறிதாய் போன உடைகளை வாங்கி, உடையில்லாதவர்களுக்கு கொடுக்கலாம்.
.
தேவன் விரும்புகிற இந்த காரியங்களை நம்மால் இயன்றதை நாம் செய்வோமா? அப்படி செய்யும்போது, 'அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்' என்று நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா!
.
பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே
.
நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே
.
தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
.
நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
அவரைக் காண்பிப்போம்
மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம்
.
ஜெபம்எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, ஏழைகளின் பெலனே, ஒடுக்கப்பட்டவர்களை தாங்குபவரே, திக்கற்றவர்களின் தகப்பனே உம்மை துதிக்கிறோம். நாங்களும் ஏழைகளுக்கு இரங்கவும், அவர்களின் தேவையில் அவர்களை தாங்கவும், வியாதியஸ்தர்களை விசாரிக்கவும், தேவையிலிருப்போருக்கு உதவவும் உணர்த்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
Thanks: Facebook

Permissions in this forum:
You cannot reply to topics in this forum