தொண்டை வலியால் அவஸ்தையா? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்
Thu Nov 06, 2014 5:08 pm
தொண்டை வலி வந்தாலே பெரும் அவஸ்தை தான், அதுமட்டுமா உடலிலும் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்திவிடும்.
இந்த தொண்டை வலி வந்தால் நம்மால் பேசவும் முடியாது, எச்சிலை விழுங்கவும் முடியாது. ஆனால் இந்த கரகரப்பிலிருந்து விடுபட சில சிறந்த பானங்கள் உள்ளது.
இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால், தொண்டையில் உள்ள கரகரப்பு சில நிமிடங்களில் சரியாகி விடுவதோடு, தொண்டை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
எனவே அத்தகைய பழங்களில் ஒன்றான எலுமிச்சை சாற்றில், வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது தேன் சேர்த்து குடித்தால், தொண்டையில் வைரசால் ஏற்பட்டிருக்கும் புண் குணமாகிவிடும்.
இந்த தொண்டை வலி வந்தால் நம்மால் பேசவும் முடியாது, எச்சிலை விழுங்கவும் முடியாது. ஆனால் இந்த கரகரப்பிலிருந்து விடுபட சில சிறந்த பானங்கள் உள்ளது.
மசாலா டீ
மசாலா டீ என்பது மிளகு, சீரகம், கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, பின் குடிக்க வேண்டும்.இஞ்சி
தொண்டையில் உள்ள புண்ணிற்கு இஞ்சி மிகவும் சிறந்த ஒரு மருத்துவப் பொருளாகும்.இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால், தொண்டையில் உள்ள கரகரப்பு சில நிமிடங்களில் சரியாகி விடுவதோடு, தொண்டை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
தயிர்
தயிர் உடலுக்கு அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் பொருள். அவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடாமல், அறை வெப்பத்தில் வைத்து சாப்பிட்டால், தொண்டையில் ஏற்படும் வலி சரியாகிவிடும்.எலுமிச்சை சாறு, தேன்
சிட்ரஸ் பழங்களில் ஆன்டிவைரஸ் பொருள் அதிகமாக உள்ளது.எனவே அத்தகைய பழங்களில் ஒன்றான எலுமிச்சை சாற்றில், வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது தேன் சேர்த்து குடித்தால், தொண்டையில் வைரசால் ஏற்பட்டிருக்கும் புண் குணமாகிவிடும்.
நன்றி: லங்காசிறி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum