வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? எஸ்எம்எஸ் மூலம் அறியலாம்!
Fri Oct 17, 2014 4:46 am
சென்னை: வாக்காளர் பட்டியலில் நமது பெயர் உள்ளதா என்பதை எஸ்எம்எஸ் அனுப்பி தெரிந்து கொள்ளும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம் முழுவதும் நேற்று முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதையும் பொதுமக்கள் அந்த முகாம்களுக்கு சென்று பார்க்கலாம். மேலும், கூடுதலாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்திலும் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா, இல்லையா என்பது குறித்து தெரிவிக்கப்படும். இது இலவச தொலைபேசியாகும். அதேபோன்று, செல்போன் மூலம் எஸ்எம்எஸ் செய்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். அதற்கு, EPIC என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். 24 மணி நேரத்திற்குள் தேர்தல் அலுவலகத்தில் இருந்து விவரம் தெரிந்து கொள்ளலாம். பெயர் இல்லை என்றாலும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்" என்று கூறியுள்ளார். நன்றி: விகடன் |
Re: வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? எஸ்எம்எஸ் மூலம் அறியலாம்!
Fri Oct 17, 2014 5:23 am
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது.
பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், முகவரியை மாற்ற விரும்புகிறவர்கள், வயது, பெயர், முகவரியில் உள்ள பிழைகளை திருத்தம் செய்து கொள்ள விரும்புவர்கள் அதற்குரிய படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் நவம்பர் 10–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.
புதிதாக பெயர் சேர்ப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பிரவீண் குமார் கூறியதாவது:–
வாக்காளர் பட்டியலில் பெயர் புதிதாக சேர்ப்பதற்கான விண்ணப்பத்துடன் இருப்பிட முகவரி, வயது ஆகியவற்றிற்கான சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். ரேஷன் அட்டை, வங்கி அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம், டிரைவிங் லைசன்சு, பாஸ்போர்ட், தொலைபேசி, சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவற்றின் சமீபத்திய ரசீது, ஆதார் அட்டை போன்றவற்றை முகவரி சான்றாக சமர்ப்பிக்கலாம்.
வயது சான்றாக பிறப்பு சான்றிதழின் நகல் அல்லது பள்ளி சான்றின் நகல் வழங்கலாம். 25 வயதுக்கு கீழுள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை கட்டாயம் அளிக்க வேண்டும். ஜனவரி 1–ம் தேதி 2015–ம் ஆண்டு 18 வயது நிறைவடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
முதல் முறையாக விண்ணப்பிக்க கூடியவர்கள் தவிர மற்ற மனுதாரர்கள் அனைவரும் அவர்களுடைய முந்தைய முகவரியையும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணையும் படிவத்தில் குறிப்பிட வேண்டும். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்க படிவம் 6–யும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்திருந்தால் படிவம் 001–யும் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட 6ஏ படிவத்தை நேரிலோ அல்லது தபாலிலோ அளிக்கலாம். தமிழ்நாட்டில் கிராம சபை மற்றும் குடியிருப்போர் நல சங்க கூட்டங்கள் வரும் 17, 30 தேதிகளில் நடைபெறுகிறது.
அக்டோபர் 26, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படுகின்றன. வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்ப படிவங்களை மொத்தமாக கொடுக்கக்கூடாது. ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் ஒரு முகவரை நியமிக்கலாம். அவர் தினமும் 10 படிவங்களை மட்டுமே அளிக்கலாம். போலியாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பிரவீண் குமார் கூறினார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum