மாணவர்கள் - விடுமுறை நாள்களில் என்ன பண்ணலாம்?
Wed Oct 01, 2014 6:43 pm
10-ஆம் வகுப்பு மற்றும் 12 -ஆம் வகுப்புத் தேர்வுகள் முடிந்துவிட்டன. மாணவர்களும் பெற்றோர்களும் நிம்மதிப் பெருமூச்சுடன் தேர்வுக்கான முடிவுகளை எதிர்பாத்த வண்ணம் இருக்கின்றனர். இடையில் 6 முதல் 10 வாரம்வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களை எதிர்காலத்தில் தமது கல்வி அறிவு சிறக்கப் பயன்படும் வகையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.
1. ஆங்கில மொழித்திறனை (English language skill) வளர்த்துகொள்ள முயலலாம்
ஆங்கில மொழித்திறன் என்பது இன்று இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவர்கள், ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்கலாம். அல்லது வீட்டில் இருந்தே ஆங்கில மொழிப் பயிற்சி புத்தகங்களை படிக்கலாம். ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்ள மிகச்சிறந்த வழி, ஆங்கில குர்ஆனை, தமிழ் குர்ஆனுடன் ஒப்பிட்டு வாசிப்பது. குர்ஆனை, வசனத்திற்கு வசனம் ஆங்கிலத்திலும் தமிழிலும் படிப்பதின் மூலம் ஆங்கில அறிவும் வளரும்; அல்லாஹ்வுடைய கட்டளைகளையும் அறிந்து கொள்ளமுடியும்.
2. தொடர்புத் திறனை (Communication skill) வளர்ப்பது
வேலைவாய்ப்பு பெற மிகமுக்கியத் தகுதியாகக் கருதப்படுவது ‘தொடர்புத் திறன்’ எனப்படும் Communication skill. என்னதான் மதிப்பெண் வாங்கி இருந்தாலும் Communication skill இல்லாவிட்டால் எந்த நிறுவனத்திலும் வேலைக்கு எடுக்க மாட்டார்கள். இந்தத் தொடர்புத் திறன் Communication skill -யை வளர்த்துக் கொள்ள மிகமுக்கியத் தேவை தைரியம். தைரியமாக நீங்கள் நினைக்கும் கருத்துகளைப் பிறருக்குச் சொல்லப் பழகுங்கள். அதாவது இஸ்லாமிய ரீதியில் சொல்வதாக இருந்தால், நல்ல தாஇகளாக (பிரசாரகர்களாக) மாறப் பழகுங்கள். Communication skill என்பது ஒவ்வொறு முஸ்லிமிடமும் கட்டாயம் இருக்கவேண்டிய பண்பாகும்.
“நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்” (குர்ஆன் 3 : 104)
தினமும் குர்ஆனை எடுத்து, தொழுகைக்குப் பிறகு வீட்டில் உள்ளவர்களுக்குப் படித்துகாட்டுங்கள். முடிந்தவரை பிறருக்கு எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லப் பழகுங்கள். குர்ஆனுடைய கருத்துகளைப் பிறருக்குச் சொல்வதற்கு வெட்கப் படாதீர்கள், தைரியமாகச் சொல்லுங்கள். இப்படித் தொடர்ச்சியாகச் செய்வதன் மூலம் நம்முடைய Communication skill – யை வளர்த்துக் கொள்ள முடியும்.
3. கணினி அறிவை (Computer knowledge ) வளர்த்துக் கொள்ளுங்கள்
தற்போது பள்ளிப்படிப்பு படிக்கவே கணினி அறிவு (Computer knowledge) அவசியமாகின்றது. எனவே கணினியில் குறிப்பாக MS Office (Word, Excel, Power Point etc..) கற்றுக் கொள்ளுங்கள். மேலும் internet-ன் பயன்பாட்டையும் கற்றுக் கொள்ளுங்கள். குறிப்பாக மின்அஞ்சல் (E-mail) துவங்குவது, google Search, விக்கிபீடியா போன்றவற்றை அறிந்து கொள்ளுங்கள். இன்டெர்னெட் பயன்படுத்தும் பிள்ளைகளின் பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். இணையதளத்தில் நல்ல வியஷயங்களுக்கு இணையாக கெட்ட விஷயங்களும் கொட்டிக் கிடக்கின்றன. தீயவை உள்ளன என்பதற்காகத் தற்போதுள்ள காலத்தில் இன்டெர்னெட்டே வேண்டாம் என ஒரேடியாக ஒதுக்கிவிட முடியாது. எனவே பெற்றொர்கள்தாம் தம் பிள்ளைகளை இன்டெர்னெட்டை சரியான முறையில் பயன்படுத்தச் சொல்லிக் கொடுத்துப் பழக்க வேண்டும்.
10 மற்றும் +2 -ஆம் வகுப்புகள் படிக்கப் போகும் மாணவர்களுக்கு
விடுமுறையை வீணாகக் கழித்துவிடாமல் இப்போதே பொதுத் தேர்விற்குப் படிக்க ஆரம்பித்து விடுங்கள். 9-ஆம் வகுப்பு முடித்து, 10-ஆம் வகுப்புக்குச் செல்லவிருக்கும் மாணவர்கள் 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்விற்கும். +1 முடித்து +2 செல்லவிருக்கும் மாணவர்கள் +2 வகுப்புப் பொதுத் தேர்விற்கும் தயாராகுங்கள். +2 வகுப்புப் படிக்கவிருக்கும் மாணவர்கள் தேசிய அளவில் மருத்துவம், பொறியியல் படிக்க நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுங்கள்.
+2 -ஆம் வகுப்புப் படிக்கப் போகும் மாணவர்களுக்கான போட்டித் தேர்வுகள் :
IIT-JEE – இந்தத் தேர்வு IIT, IISc – ல் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தப்படும் தேர்வாகும். +2-ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
AIEEE – NIT மற்றும் மத்தியப் பல்கலைக் கழகங்களில் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தப்படும் தேர்வாகும். +2-ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
AIPMT – மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் MBBS படிக்க நடத்தப்படும் தேர்வு. உயிரியல் அல்லது விலங்கியல், தாவரவியல் மற்றும் இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
HSEE – IIT -யில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு M.A. படிப்பிற்கான தேர்வு. அனைத்துப் பிரிவு மாணவர்களும் எழுதலாம். குறிப்பாக Arts குரூப் படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வின் மூலம் IIT-யில் படிக்கலாம்.
மாணவர்களே!
நேரத்தை வீணாக்காமல் இப்போதே போட்டித் தேர்வுகளுக்கும், பொதுத் தேர்வுகளுக்கும் தயாராகுங்கள். தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையைக் குப்பையில் போடுங்கள். எந்தத் தேர்வையும் சந்தித்துச் சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான். அல்லாஹ்வின்மீது நம்பிக்கைவையுங்கள். அவனிடம் வலியுத்திக் கேளுங்கள். கடினமாக உழைத்துப் படியுங்கள். நிச்சயம் அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைத் தருவான், இன்ஷா அல்லாஹ்.
அனைத்துப் போட்டித் தேர்வுகள் பற்றிய வழிகாட்டலும் கூடுதல் விபரங்களும் அறிந்து கொள்ள sithiqu.mtech@gmail.com என்ற ஈ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி:–ஆக்கம்: S.சித்தீக், M.Tech
நன்றி:–http://www.nidur.info/
நன்றி:–http://vadakkumangudi.com/
விடுமுறை நாள்களில் என்ன பண்ணலாம்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum