சார்லஸ் mc
நிறுவனர்
- Posts : 16182
Join date : 18/12/2012
Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
செல்வத்தை உண்டாக்கி, பாதுகாத்து, வளர்ப்பது குறித்து பார்த்தோம்… அவ்வாறு வளர்த்த செல்வத்தை, பராமரிப்பது மிகவும் அவசியம். தங்களிடம் உள்ள சொத்து வகையைப் பொறுத்து, ஒவ்வொன்றையும் பராமரிப்பதற்கு ஒரு கால அளவை வரையறுத்துக் கொள்ளலாம். உதாரணத்துக்கு சொத்து வரி செலுத்துதல் ஆண்டுக்கு ஒரு முறையாக இருக்கலாம். கட்டடங்களை ரிப்பேர் செய்து பெயின்ட் அடிப்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வரலாம். அதே போல் டீமேட் கணக்கில் இருக்கும் பங்குகள் சரியாக உள்ளனவா, அவற்றிற்கு டிவிடெண்ட், போனஸ் போன்றவை ஒழுங்காக வருகிறதா, இருக்கும் பங்குகளை அவ்வாறே வைத்துக் கொள்ளலாமா அல்லது விற்க/ வாங்க வேண்டுமா என்பதையெல்லாம் மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது கவனிக்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு நன்கு பெர்ஃபார்ம் செய்கிறதா அல்லது மாற்றங்கள் தேவையா என்பதை ஆண்டுக்கு ஒரு முறையாவது பார்க்க வேண்டும். மேலும் வங்கிக் கணக்குகள், டெபாசிட்கள், இன்ஷூரன்ஸ், மற்றும் செல்வம் சார்ந்த அனைத்தையும் முறையாகக் கவனித்து வருவதன் மூலம்தான் நாம் நமது செல்வத்தை நன்றாகப் பராமரிக்க முடியும். நன்றி: நாணயம் விகடன்
Permissions in this forum:
You
cannot reply to topics in this forum