’அன்பினால் அனைத்தும் சாத்தியமாகும்’
Sat Sep 27, 2014 1:16 pm
சனிக்கிழமை ஐந்து, ஐந்தரைக்கு எழுந்து குளித்து அந்தக் கூடத்துக்கு வருகிறார்கள். எல்லோரும் 10லிருந்து 15 வயதுள்ள சிறுவர் சிறுமியர்.
அங்கு ஏற்கெனவே வந்து இருக்கும் ஒரு மூத்த பெண், வந்திருக்கும் 12 வயது சிறுவனைப் பார்த்து,’ ஏன் நேத்து யோகா கிளாஸ்க்கு வரல?
‘எக்ஸாம் இருந்துச்சு..அதனாலதான் மேம்’ சொல்லும் பொது அவன் முகம் இறுக்கமாக இருந்தது.
’ஏன் தினம் சாப்பிடுறோம், தூங்குறோம்..அதுக்காக கிளாஸ் வர்றதை விட்டுருவியா? இனிமே ஒழுங்கா வரணும் என்ன?’ அவர் கேட்க கேட்க முகத்தின் இறுக்கம் கூடுகிறது இருவருக்குமே! சிறிது நேரத்தில் அவர் கிளம்பி விடுகிறார்.
******
அடுத்து ஒரு ஆசிரியை வருகிறார். முகமெல்லாம் புன்னகையை பூசி வந்திருக்கிறாரோ என்கிற அளவுக்கு அவரது முகத்தில், பார்வையில் ஒரு கனிவு இருக்கிறது.
’’ஏம்ப்பா ஹரிஸ் நேத்து கிளாஸ்க்கு வரல... ’’
‘’இல்ல ஆண்ட்டி ..எக்ஸாம் இருந்துச்சா அதனாலதான்”’
’’நாம் யோகா பண்றதே எதுக்கு...Memory power அதிகமாகணும்தானே கிளாஸே. நீ கிளாஸ்க்க்கு வந்திருந்தா இன்னும் ஈஸியா படிச்சிருக்கலாம். நேத்து கிளாஸ்ல நீ நிறைய மிஸ் பண்ணிட்ட..உன் பிரண்ட்ஸ்கிட்ட கேட்டுப் பாரு’’
’’ஃபிரண்ட்ஸ் கூட்டம் ஆமாம் என்பதுபோல் சொல்கிறது’’.
’’ஓகே ஆண்ட்டி இனிமே எக்ஸாம் நடந்தாலும் கிளாஸ்க்கு வரேன்’’.
’’ஆண்ட்டி உங்க தலையில இருக்குற பூ அழகா இருக்கு’’
’’அது என் பொண்ணு வித்யாசமா ஒரு புதுவகை நூல்ல வச்சு கட்டியிருக்கா. அதுதான். தேங்ஸ்டா ஹரிஸ்’’
அதுவரை முகம் இறுகியிருந்த ஹரிஸ் மிக இயல்பாகவும் சந்தோஷமாகவும் மாறுகிறான். சூரிய நமஸ்காரத்தை எல்லோரையும் விட அனுபவித்து செய்கிறான்.
மகனை வகுப்பில் விட்டுவிட்டு அங்கேயே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இதுதான் தோன்றியது.
’அன்பினால் அனைத்தும் சாத்தியமாகும்’
ஒரு காலைப்பொழுது அழகாக மாறுவதும், அழுகையாக மாறுவதும் வார்த்தைகளில் தான் இருக்கிறது.

Re: ’அன்பினால் அனைத்தும் சாத்தியமாகும்’
Mon Oct 06, 2014 2:46 pm
தாய் வயலில் வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் குழந்தை பக்கத்தில் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தது.
வேலை மும்மரத்தில் தாய் சிறிதுநேரம் குழந்தையைக் கவனிக்க வில்லை. திடீரென ஞாபகம் வந்து பார்த்தபோது குழந்தை கைபிடியில்லாத ஒரு கிணற்றின் விளிம்பருகே நின்று கொண்டிருந்ததைக் கவனித்தாள்.
அடுத்து ஒரு அடி எடுத்து வைத்தாலும் குழந்தை கிணற்றுக்குள் விழுந்துவிடும்.கூட இருந்தவர்கள் பதைபதைத்தார்கள்.
தாய் சிறிது கூட யோசிக்காமல் கொஞ்ச தூரம் மெதுவாக நடந்துசென்று,குழந்தையைப் பார்த்து,''பாப்பா,அம்மா வீட்டுக்குக் கிளம்பி விட்டேன் .நீ வருகிறாயா, இல்லையா?''என்று சப்தம் போட்டு சொன்னாள்.அடுத்த நிமிடம் குழந்தை திரும்பிதாயைப் பார்த்து ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டது.
தாயன்பு தானே அந்த இக்கட்டானநேரத்தில் சமயோசிதமாக சிந்திக்க வைத்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum