பன்னீர்க் கறி
Tue Sep 16, 2014 4:02 pm
தேவையான பொருட்கள்:
பன்னீர் -200 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
நறுக்கிய குடமிளகாய்- 1 கப் (பச்சை,சிவப்பு,மஞ்சள்)
சிறிதாக நறுக்கிய தக்காளி -- 1 கப்
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி.
பச்சை மிளகாய் --3
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி.
பூண்டு (அரைத்தது) - சிறிதளவு
இஞ்சி விழுது - சிறிதளவு
கடுகு - சிறிது
சீரகம் -1 /2 தேக்கரண்டி
கரம் மசாலா--1 தேக்கரண்டி
கறுவா,ஏலம்,கிராம்பு --சிறிதளவு
கறிவேப்பிலை- சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
முதலில் எண்ணெயில் பன்னீர் துண்டுகளை 5-10 நிமிடம் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் .
அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறுவா,ஏலம்,கிராம்பு கடுகு, சீரகம் போட்டு, சிவந்ததும், வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும் , வெங்காயம் ஓரளவு வதங்கியதும், இஞ்சி,பூண்டு விழுது , தக்காளி கறிவேப்பிலை போட்டு வதக்கவும்,பின்பு குடமிளகாய் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் பொடி,கரம் மசாலா போட்டு ஒரு டம்ளர் நீர் ஊற்றி தீயை குறைவில் வைத்து வேக விடவும் . குழம்பு பக்குவம் வந்ததும் பன்னீர் துண்டுகளைப் போட்டு 2 நிமிடம் கிளறி இறக்கவும் .
சுவையான பன்னீர்க்கறி ரெடி ......
வழங்கியவர் : Rajee Manoharan

Permissions in this forum:
You cannot reply to topics in this forum