இந்திய ரூபாய்களில் காந்தியின் உருவம் எப்போது முதல் வெளியிடப்படுகிறது?''
Fri Sep 12, 2014 2:11 pm
''1969-ம் ஆண்டு, மகாத்மா காந்தியின் நூற்றாண்டுப் பிறந்தநாள் வந்தது. அதன் நினைவாக, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்களில் அவரது உருவம் வெளியானது. ஒரு மேடையில் அமர்ந்து புத்தகம் படிப்பது போல காந்தியின் உருவம் இருக்கும். பிறகு, 1987-ம் ஆண்டு 500 ரூபாய் தாளில் அவரது மார்பு அளவு உருவப்படம் வெளியிடப்பட்டது. பிறகு, 1996 முதல் படிப்படியாக அனைத்து ரூபாய் தாள்களிலும் காந்தியின் உருவம் இடம்பெற்றது. இதில் உள்ள காந்தியின் அழகுச் சிரிப்பு முகம், 1946-ம் ஆண்டு, இந்தியாவின் மாநிலச் செயலாளராக இருந்தவர், லார்ட் பெத்திக் லாரன்ஸ் (Lord Pethick Lawrence). அரசியல் விஷயமாக காந்திஜி அவரைச் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தில் உள்ள உருவத்தைத்தான், ரூபாய் தாள்களுக்குப் பயன்படுத்தினார்கள்.''
சுட்டி விகடன்...
சுட்டி விகடன்...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum