தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கிரையப் பத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிரையப் பத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் Empty கிரையப் பத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்

Fri Sep 05, 2014 8:35 pm
சொத்துக்கு உரிமை கொண்டாடும் முக்கிய ஆணவங்களில் முதன்மையானது கிரயப்பத்திரம். அதில் தான் சொத்து பற்றிய அனைத்து விவரங்களும் பதிவாகி இருக்கும். சொத்துக்கான சர்வே எண், பதிவு எண், யாருடைய பெயரில் சொத்து இருக்கிறது? அது வாங்கப்பட்ட ஆண்டு, சொத்தின் எல்லை அளவுகள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இடம்பெற்று இருக்கும். அதன் மூலமாக தான் சொத்து நமக்கு சொந்தமானது என்பதை உறுதிபடுத்த முடியும்.
நகல் பத்திரம்
பிறருக்கு சொத்தை விற்பனை செய்வதாக இருந்தாலும் சிக்கல் இன்றி பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். ஆதலால் கிரயப்பத்திரத்தை பாதுகாப்பாக வைத்திருக்க  வேண்டியது அவசியம். அது தொலைந்து போனால் சொத்து நமக்குரியதாக இருந்தாலும் சொந்தம் கொண்டாட முடியாத நிலை ஏற்படும். மீண்டும் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து நகல் பத்திரம் வாங்க வேண்டி இருக்கும்.
அதற்கும் சில நடைமுறைகள் இருக்கின்றன. முதலில் கிரயப்பத்திரம் தொலைந்து போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். அதற்கு கிரயப்பத்திரத்தின் பதிவு எண், அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சொத்து விவரங்கள் பற்றிய தகவல் தெரிந்திருக்க வேண்டும். பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் இருந்தால் அதன் மூலமாக புகாரில் விவரங்களை குறிப்பிட்டு விடலாம்.
சிரமங்களை சந்திக்கநேரும்
ஆனால் ஜெராக்ஸ் இல்லாமல் இருந்தால் சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஏதாவது ஒரு நோட்டில் கிரயபத்திரத்தில் இருக்கும் எண்கள், விவரங்களை குறிப்பிட்டு வைத்திருந்தால் அதன் மூலம் புகார் கொடுக்க ஏதுவாக இருக்கும். அப்படி எழுதி வைக்காத பட்சத்தில் கிரயப்பத்திர நகலை பெறுவதற்கு பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த சொத்தின் சர்வே நம்பராவது மனதில் பதிந்திருந்தால் அதன் மூலம் புகார் செய்ய முதல்கட்ட நடவடிக்கையாவது எடுக்கலாம்.
அதுவும் தெரியாத பட்சத்தில் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில் காவல் நிலையத்தில் கிரயப்பத்திரம் தொலைந்து விட்டதாக புகார் தெரிவித்தால்தான் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர நகலை எளிதாக பெற முயற்சிக்க முடியும். அத்துடன் பத்திர எண், பதிவு செய்யப்பட்ட ஆண்டு போன்ற  விவரங்கள் தெரிந்தால்தான் எளிதாக கிரயப்பத்திர நகலை பெற முடியும்.
கேள்விகள் எழும்
ஏனென்றால் 1987–ம் ஆண்டுக்கு முன்பு சொத்து வாங்கப்பட்டு இருந்தால் கணிணி மூலம் பத்திர நகலை பெறுவது இயலாது. அதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில்  இருக்கும் பழைய ஆவணங்களை தேடி  பிடித்து அதன் மூலமே நகல் பத்திரம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் காலதாமதத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அப்படியே நகல் கிரயப்பத்திரத்தை வாங்கினாலும் அதனுடன் பல்வேறு கேள்விகளும் எழுந்து நிற்கும். அதிலும் சொத்தை விற்பனை செய்வதாக இருந்தால் பல  கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். உண்மையிலேயே கிரயப்பத்திரம் தொலைந்து விட்டதா என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கும். ஏனெனில்  கிரயப்பத்திரத்தை வேறு யாரிடமாவது அடமானம் வைத்து பணம் வாங்கி இருக்கிறார்களா? என்ற சந்தேகத்தை வரவழைப்பதாகவே இருக்கும்.
பாதுகாக்க வேண்டும்
பிறரிடம் அடமானம் வைத்தது பற்றி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யாமல் இருந்தால் அது வில்லங்க சான்றிதழில் தெரியாது என்பதே சந்தேகத்துக்கு காரணமாக அமையும். அதனால் நகல் கிரயப்பத்திரம் வைத்திருக்கும் சொத்தை விற்பனை செய்வது சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். சொத்து தங்களுடையது தான்  எனத் தெரிந்தும் கிரையப்பத்திரம் தொலைத்து போனால் விற்பனை செய்ய முடியாமல் சிரமப்பட வேண்டியிருக்கும்.
கிரயப்பத்திரத்தில் இருக்கும் விவரங்கள் நினைவில் இல்லாத பட்சத்தில் எதுவும் செய்ய இயலாத நிலைதான் ஏற்படக்கூடும். ஆகவே கிரயப்பத்திரத்தை பத்திரமாக பாதுகாத்து வைக்க வேண்டும். அதை ஜெராக்ஸ் எடுத்து வைத்திருக்க வேண்டியதும் முக்கியம். அத்துடன் கிரயப்பத்திர விவரங்களை முக்கியமான நோட்டுகளில் எழுதி வைத்துக்கொள்வதும் நல்லது. அதுபற்றிய விவரங்களை வீட்டில் உள்ளவர்களிடம் தெரியப் படுத்தி விடுவதும் பிற்காலத்தில் உபயோகமானதாக இருக்கும்.
- See more at: http://chittarkottai.com
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிரையப் பத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் Empty Re: கிரையப் பத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்

Fri Sep 05, 2014 9:27 pm

பாகப்பிரிவினை சொத்தை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

சொத்து வாங்கும்போதுகிரையப் பத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் Pagam21091388 அதை விற்பவர் எந்த வகையில் அந்த சொத்துக்கு உரிமை உடையவராக இருக்கிறார் என்பதை நன்கு விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அவர் விற்பனை செய்யக்கூடிய சொத்துக்கான ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். அந்த ஆவணங்கள் அவருடைய பெயரில் தான் இருக்கிறதா? அவருடைய பெயருக்கு எப்படி மாற்றப்பட்டது? அவர் அந்த உரிமையை பெற்றது எப்படி? என்பது போன்ற விவரங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அவருடைய குடும்ப சொத்துக்கள் பிரிக்கப்பட்டு அதன் மூலம் சொத்தை விற்கக்கூடிய சொத்துக்கான உரிமையை பெற்று இருந்தால் அந்த தாய் பத்திரங்களை கவனமாக பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக அவரிடம் இருப்பது செட்டில்மெண்ட் (தான) பத்திரம் அல்லது பாகபிரிவினை பத்திரமாக இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.
செட்டில்மெண்ட் பத்திரம்
தன்னுடைய சொத்தை மற்றொருவருக்கு தானமாக எழுதி கொடுப்பது தான் செட்டில்மெண்ட் பத்திரம் ஆகும். தாய் அல்லது தந்தை பிள்ளைகளுக்கு சில சமயம் இந்த பத்திரம் மூலம் சொத்தை எழுதி கொடுப்பார்கள். அந்த பத்திரத்தில் ஏதேனும் நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டு இருக்கிறதா? என்பது தான் கவனிக்க வேண்டிய முதல் விஷயமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் சொத்து யாருக்கு தானமாக கொடுக்கப்பட்டு இருக்கிறதோ அவருக்கு அந்த சொத்தை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் உரிமை மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கலாம். அவ்வாறு கொடுக்கப்பட்டு இருந்தால் அந்த சொத்தை அவர் அனுபவிக்க முடியுமே தவிர அவரால் சொத்தை விற்பனை செய்ய முடியாது.
அவருடைய வாழ்நாளுக்கு பிறகு சொத்தின் உரிமையை பெறுபவருக்கு தான் விற்பனை செய்யும் உரிமை இருக்கலாம் என்பதால் தீவிரமாக அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதை கவனிக்காமல் சொத்தை வாங்கினால் சிக்கலை சந்திக்க நேரிடும். இதுதவிர சொத்தை தானமாக எழுதி கொடுப்பவருக்கு, செட்டில்மெண்ட் ஆவணத்தை ரத்து செய்யும் உரிமையும் இருக்கிறது. பெரும்பாலும் ரத்து செய்யப்படுவது இல்லை என்ற நோக்கிலேயே பத்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும். எனினும் அதுபற்றி எதுவும் குறிப்பிட்டு இருக்கிறாரா? என்பதையும் பார்க்க வேண்டும்.  
செட்டில்மெண்ட் பத்திரத்திலும் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் ஒன்றும் இருக்கிறது. அந்த சொத்து கூட்டு குடும்ப சொத்தாக இருந்தால் அதை செட்டில்மெண்ட் செய்ய தனிப்பட்டமுறையில் யாருக்கும் உரிமை கிடையாது. இப்படி இருக்கையில் செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் சொத்தை வாங்கும்போது உஷாராக இல்லாவிட்டால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
பாகப்பிரிவினை பத்திரம்
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சொத்தை பாகம், பாகமாக பிரித்து கொடுக்கப்படும் பாகப்பிரிவினை பத்திரம் மூலம் சொத்தை வாங்கும்போதும் அந்த சொத்தை பெற்றவருக்கு அதை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் உரிமை மட்டும் கொடுக்கப்பட்டு இருக்கிறதா? அல்லது விற்பனை செய்வதற்கும் அதிகாரம் இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும். மேலும் சொத்தை பாகப்பிரிவினை செய்து கொடுத்தவர் அந்த சொத்தை ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறதா? அதுபற்றி பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறதா? என்பதையும் பார்க்க வேண்டும்.
இதுதவிர பாகப்பிரிவினை சொத்தை பெற்றவர் தனது பெயருக்கு சொத்தை மாற்றி விட்டாரா? அவர் பெயரில் பட்டா பெற்று இருக்கிறாரா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும். சில இடங்களில் சொத்தை பாப்பிரிவினை மட்டும் செய்து இருக்கலாம். அவருடைய பெயரில் பட்டா இருக்காது. அப்படி இருக்கையில் அந்த சொத்தை வாங்கும்போது சிக்கல் ஏற்படலாம். எனவே சொத்தை விற்பவர் பெயரில் பட்டா மாற்றப்பட்டு இருக்கிறதா? அதற்கான தீர்வை செலுத்தி வருகிறாரா? அந்த ரசீது இருக்கிறதா? என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
நன்றி:[url=http://www.dailythanthi.com/After the partition of the considerations when buying property#]தினத்தந்தி[/url]
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிரையப் பத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் Empty Re: கிரையப் பத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்

Fri Sep 05, 2014 9:43 pm

கிரயப்பத்திரம் - Saledeed


கிரயப்பத்திரத்தை type செய்யும் போது ஏற்கனவே குறிப்பிட்ட முக்கியமான
விபரங்களில் பிழைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டு 1 : தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருவர் 1989-ல் படப்பையிலுள்ள
ஒரு Layoutல் வீட்டு மனை வாங்குகிறார். சொத்தை விற்பதற்கு இப்போது
முயல்கிறார். சொத்தை வாங்குபவர் இவரிடம் விலையை பேசி நிர்ணயம் செய்து
முன் தொகையைக் கொடுத்து சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்களின் Xerox copy-யை
வாங்கிச் செல்கிறார். சொத்து ஆலோசகர் ஒருவரிடம் கொடுத்து சரி பார்க்கும்
போதுதான் சொத்து விபரத்தில் சர்வே எண் தவறாக டைப் செய்யப்பட்டிருக்கிறது
தெரிகிறது. சொத்தை வாங்க நினைப்பவர் இந்த பிரச்சனையை சரி செய்து கொடுத்த
பின் சொத்தை வாங்கிக் கொள்வதாக கூறி நழுவுகிறார். சொத்தின் உரிமையாளர்
தனக்கு விற்பனை செய்த Power of Attorneyயைத் தேடி அலைகிறார். சுமார் 15
நாட்கள் கழித்து, 5 வருடங்களுக்கு முன்பாக Power of Attorney இறந்து
விட்டார் என்ற செய்தி கிடைக்கிறது. அதிர்ந்து போனவர் சொத்தின்
உரிமையாளரைத் தேடி அலைகிறார். அவர்களைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
இப்போது செய்வது அறியாமல் தவிக்கிறார்.

எடுத்துக்காட்டு 2:- சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் விழுப்புரத்தைச்
சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவரிடம் 6 மாதத்திற்கு முன்னால் 7 ஏக்கர் இடம்
வாங்கியிருக்கிறார்கள். கிரயப்பத்திரம் ஆங்கிலத்தில் type
செய்யப்பட்டிருக்கிறது. அதில் பாலசுப்ரமணியன் (Balasubramanian)
என்பதற்குப் பதில் பாலசுப்ரமணியம் (Balasubramaniam) என்று type
செய்யப்பட்டிருந்தது. இதை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் போது
யாரும் கவனிக்கவில்லை. பதிவு செய்து முடித்து கிரயப்பத்திரத்தைப் பெற்ற 6
மாதத்திற்குப் பிறகுதான் அந்த எழுத்துப் பிழையை அவர்களால் கவனிக்க
முடிந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட அந்த நிறுவனம் பிழைத் திருத்தப்
பத்திரம்(Rectification deed) ஒன்றை பதிவு செய்து அதை நிவர்த்தி செய்து
விட்டனர்.

பிழைத் திருத்தப் பத்திரம் என்பது என்ன?
ஒரு கிரயப்பத்திரம் பதிவு செய்யப்பட்ட பின் அதில் ஏதேனும் பிழை இருந்தால்
அதை நிவர்த்தி செய்வதற்குத் திரும்பவும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு
செய்யப்படும் பத்திரத்தின் பெயர்தான் பிழைத்திருத்தப் பத்திரம்
(Rectification Deed). சொத்தை எழுதிக் கொடுப்பவர், சொத்தை எழுதி
வாங்குபவர், அவருடைய பெயர் போன்றவற்றில் எழுத்துப் பிழை வரலாம் அல்லது
சொத்து விபரத்தில் உள்ள சர்வே நம்பர் (Survey No), மனை எண் (Plot No),
அளவுகள் (Measurement), எல்லைகள் (Boundaries) மாற்றி type
செய்யப்படலாம். இப்படிப்பட்ட பிழைகளை நிவர்த்தி செய்ய
ரூபாய்.50/-மதிப்புள்ள முத்திரைத்தாள் வாஙகி அதில் எவ்வாறு தவறாக type
செய்யப்பட்டிருக்கிறது என்பதை குறிப்பிட்டு பிழைத் திருத்தப்பட்ட சரியான
விவரத்தையும் குறிப்பிட வேண்டும். இதனைப் பதிவு செய்வதற்குக் கணினி
கட்டணமாக ரூபாய்.100/- மற்றும் உட்பிரிவு கட்டணம் இருந்தால் அதையும்
செலுத்த வேண்டும். கிரயப்பத்திரத்தைப் பதிவு செய்யும் முறை போன்றே
இதையும் பதிவு செய்ய வேண்டும்.
பிழையானது சர்வே எண்ணில் இருந்தால் அதற்கு கட்டண முறை சற்று
வித்தியாசப்படும். எடுத்துக்காட்டாக 2005-ல் சொத்து வாங்கிய ஒருவர்
சொத்து விவரத்தில் சர்வே எண்ணைத் தவறாக type செய்து விடுகிறார். இந்த
வருடம் அதற்குப் பிழைத் திருத்தப்பத்திரம் செய்ய நினைக்கிறார். 2005-ல்
உள்ள Guide line value-விற்கும் இப்போது உள்ள Guide line value-விற்கும்
வித்தியாசம் இருக்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் வித்தியாசத்
தொகையில் 8% முத்திரைத்தாளும் மற்றும் 1% பதிவு கட்டணமும் செலுத்த
வேண்டும். 5 வருடங்களாக Guide line value அதிகரிக்கவில்லை என்றால் மற்ற
பிழைத் திருத்தங்களுக்குச் செலுத்துவது போல கட்டணம் செலுத்தினால் போதும்.
கிரையப்பத்திரத்தை நாம் மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.
சொத்து நம் பெயரில் இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான
ஆதாரம்.
மதுரை அருகே ஒரு கிராமத்தில் 12 ஏக்கர் நிலம் உள்ள ஒருவர் திடீரென இறந்து
விடுகிறார். அந்த சொத்து எங்கு இருக்கிறதென்று அவருடைய
வாரிசுதாரர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரியும். ஆனால் வீடு முழுவதும்
தேடியும் அந்த நிலத்திற்கான கிரையப்பத்திரம் கிடைக்கவில்லை. வாரிசுகள்
எல்லோரும் சென்னையில் இருப்பதால் அந்த இடத்தை விற்க முடிவு
செய்கிறார்கள். அவர்கள் காவல் நிலயத்தில் கிரையப்பத்திரம் தொலைந்து
விட்டதாக புகார் கொடுக்க நினைக்கிறார்கள்.ஆனால் கிரையப்பத்திரத்தின்
பதிவு எண், மற்றும் கிரையப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்
சொத்தின் விவரம் முதலியவை தெரியவில்லை. கிராம அலுவலரை (VAO) அணுகி ஒரு
வழியாக சொத்தின் சர்வே எண்களைக் கண்டுபிடித்து, கிரையப்பத்திரம்
காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். சிறிது காலம்
கழித்து காவல்
நிலையத்தில் இருந்து கிரையப்பத்திரம் தொலைந்து விட்டது என சான்றிதழ்
பெற்றுக்கொண்டு கிரையப்பத்திர நகல் (duplicate copy) வாங்குவதற்கு
சார்பதிவாளர் அலுவலகத்தை நாடுகிறார்கள். அங்கு பத்திர எண், மற்றும் பதிவு
செய்யப்பட்ட ஆண்டு முதலிய விவரங்கள் கேட்கப்படுகின்றன. பத்திரத்தின்
Xerox copy கூட இல்லாத காரணத்தினால் இரண்டுமே அவர்களால் கொடுக்க
முடியவில்லை. சொத்து 1987-க்கு முன்பு வாங்கி இருந்த காரணத்தினால்
சார்பதிவாளர் அலுவலகத்தில் கணினி (computer) மூலமும் காண முடியவில்லை.
அதனால் பத்திர நகல் கிடைப்பது கடினமாக இருக்கிறது. சார்பதிவாளர்
அலுவலகத்தில் தேடி எடுப்பதற்கு எப்படியும் காலதாமதம் ஆகும். அப்படியே
கிரையப்பத்திரம் கிடைத்தாலுமே சொத்து வாங்குபவர்கள் எழுப்பும் கேள்வி,
உண்மையிலேயே கிரையப்பத்திரம் தொலைந்து விட்டதா? அல்லது இறந்தவர்
யாரிடமாவது அடமானம் வைத்து பணம் வாங்கி இருக்கிறாரா? என்பது தான். இதைக்
காரணமாக வைத்துக்கொண்டு சிலர் நிலத்தின் விலையை மிகக் குறைவாக
கேட்கிறார்கள்.
சொத்து தங்களுடையது தான் எனத் தெரிந்தும் கிரையப்பத்திரத்தை தொலைத்து
விட்ட காரணத்தினால் அதை விற்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.
நாம் சொத்து வாங்கும் போதும் அல்லது விற்கும் போதும் சார்பதிவாளர்
அலுவலகத்தில் பத்திரப்பதிவின் போது நம்முடைய Photo ID original (புகைப்பட
அடையாளத்தின் அசல் படிவம்) கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். அதை
சார்பதிவாளர் சரிபார்த்த பின்தான் பத்திரத்தைப் பதிவு செய்வார்.
தென்காசிக்கு அருகில் ஆலங்குளம் என்ற ஊரில் ஆந்திராவில் உள்ள குண்டூரில்
இருப்பவருக்கு 10 ஏக்கர் நிலம் இருந்தது. அதை விற்பனை செய்ய முடிவு
செய்து அதை பதிவு செய்வதற்கு ஆந்திராவில் இருந்து வந்து சேர்ந்த அவர்
தன்னுடைய Photo ID original எதையும் எடுத்து வரவில்லை. சார்பதிவாளரிடம்
எவ்வளவோ அவர் முறையிட்டும், அது விதிக்கு அப்பாற்பட்ட ஒன்று என்று
சார்பதிவாளர் மறுத்து விட்டார். வேறு வழியில்லாமல் ஒரு நாள் அங்கேயே
தங்கியிருந்து மறு
நாள் courier மூலம் original ID கிடைத்த பின்புதான் அவரால் பத்திரப்
பதிவு செய்ய முடிந்தது.
கிரையப்பத்திரம் பதிவு செய்யும் முறையில் சேர்க்கப்பட வேண்டியவை:-
நாம் வாங்கும் சொத்து ஒரு முழு சர்வே எண்ணில் அமைந்துவிட்டால் அதற்காக
கட்டணம் ஏதும் செலுத்த
வேண்டிய தேவையில்லை. ஆனால் ஒரு சர்வே எண்ணில் பகுதியாக இருந்தால் அதற்கு
உட்பிரிவு கட்டணம் செலுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக நாம் ஒரு
Layout-ல் வீட்டுமனை ஒன்று வாங்குகிறோம். அந்த வீட்டுமனை இரண்டு சர்வே
எண்களின் பகுதியாக அமைந்திருந்தால் உட் பிரிவு கட்டணமாக ஒரு சர்வே
எண்ணுக்கு ரூபாய்.40/- வீதம் ரூபாய்.80/- கட்ட வேண்டும்.
நாம் வாங்கும் இடத்தில் கட்டிடங்கள் ஏதாவது இருந்தால் அந்த கட்டிடங்களின்
விவரங்களை இணைப்பு 1A என்ற படிவத்தில் குறிப்பிட்டு கிரையப்பத்திரத்துடன்
இணைக்க வேண்டும். அதில் கட்டிடத்தின் மொத்த பரப்பளவு, வருடம், சுவரின்
தடிமன், தளம், முதலிய விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். கட்டிடத்தின்
மொத்த மதிப்பையும் நாம் குறிப்பிட வேண்டும். சொத்து உள்ள இடத்திற்கான
Guide line value-உடன் கட்டிடத்திற்கான மதிப்பும் சேர்க்கப்பட்டு தான் 8%
முத்திரை தாள் மற்றும் 1% பதிவுக்கட்டணம் வசூலிக்கப்படும். சார்பதிவாளர்
அலுவலகத்தில் நாம் பதிவு செய்த பிறகு, அந்த அலுவலகத்திலிருந்து அதிகாரி
ஒருவர் வந்து கட்டிடத்தை பார்வையிட்டு நாம் குறித்திருக்கும் மதிப்பு
சரியானதா என்று முடிவு செய்வார். நாம் குறிப்பிட்ட மதிப்பு குறைவாக
இருக்கும் பட்சத்தில் வித்தியாசத்தொகை 8% பணம் கட்ட வேண்டும். அதற்குப்
பிறகுதான் பத்திரம்
நம் கையில் கொடுக்கப்படும்.
சில சமயம் நாம் வெளி ஊர்களில் சொத்து வாங்கும் போதும் முத்திரைத்தாள்களை
நாம் இருக்கும் இடத்தின் அருகில் உள்ள அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட
முத்திரைத்தாள் விற்பனையாளரிடம் வாங்குவோம். பத்திரத்தையும் இங்கேயே type
செய்து எடுத்துச் செல்வோம். அந்த பட்சத்தில் முத்திரைத்தாள் விற்பனை
செய்பவரிடம் ஒரு சான்றிதழ் வாங்கிக் கொள்ள வேண்டும்.
அதில் முத்திரைத்தாளின் நம்பர், வாங்கிய தேதி, அதன் மதிப்பு, எத்தனை
தாள்கள் வாங்கப்பட்டன முதலியன குறிக்கப்பட்டு அது எந்த கருவூலத்தில்
வாங்கப்பட்டு நமக்கு அவரால் விற்கப்படுகிறது என்று உறுதிமொழி இருக்கும்.
இந்தச் சான்றிதழைதான் நாம் பதிவு செய்யும் சார்பதிவாளர் அலுவலகத்தில்
சமர்ப்பிக்க வேண்டும். வெளி ஊரில் சென்று பதிவு செய்பவர்களுக்கு இது
மிகவும் முக்கியம்.
கிரய ஒப்பந்தம்(sale agreement) பதிவு செய்வதற்குக் குறைந்த கட்டணம்தான்
பதிவு துறையால் வசூலிக்கபடுகிறது. முத்திரைத்தாள் மதிப்பு ரூ.20-ம்
மற்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் முன்பணத் தொகையில் (Advance) 1%
பதிவுக் கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. இப்படி இருந்தும் பல பேர் கிரய
ஒப்பந்தத்தைப் பதிவு செய்வது இல்லை. இதற்குக் காரணம் முன்பணத் தொகையில்
பதிவு கட்டணம் வாங்கப்பட்டாலும் விற்கப்படும் விலையின் முழு தொகையும்
ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும். வருமான வரிக்காக பலர் இதை
தவிர்க்கிறார்கள். ஒரு வேளை பேசப்படும் விலையை விட குறைவாக ஒப்பந்தத்தில்
குறிப்பிடபட்டால் அதை ஒரு சான்றாக வைத்துக் கொண்டு சொத்தை வாங்குபவர்
முழு தொகையையும் கொடுக்க மாட்டார் என்ற அச்சம் விற்பவர்களிடம் இருக்கும்.
ஆனால் அடமானத்திற்குக் கட்டணம் சற்று அதிகமாக வசூலிக்கப்படுகிறது. சாதாரண
அதாவது possession இல்லாத அடமானத்திற்கு கடன் பெறும் மதிப்பில் 4% அல்லது
ரூ.20,000/- இதில் எது குறைவோ அந்த மதிப்பிற்கு முத்திரைத்தாளும் 1%
அல்லது ரூ.5,000/- இதில் எது குறைவோ அது பதிவு கட்டணமாகவும்
வசூலிக்கப்படுகிறது. இந்த மதிப்பு அதிகம் என கருதி இதை பலர் பதிவு
செய்வது இல்லை. மேலும் ஏற்கனவே அடமானம் வைத்து கடன் வாங்குபவர்களுக்கு
இந்த தொகை ஒரு சுமையாக தெரிகிறது. ஒரு வேளை அவர்கள் ஒத்துக்கொண்டாலும்
கடன் கொடுப்பவர் வருமான வரி கணக்கு காட்டுவதற்கு பயந்து கொண்டும் பதிவு
செய்ய சம்மதிப்பதில்லை.
மேற்கண்ட இரண்டுமே சொத்து எந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு
செய்யப்பட்டு இருக்கிறதோ அங்கு தான் பதிவு செய்ய வேண்டும். வெளியூரில்
சொத்து வைத்து இருப்பவர்கள் அங்கு சென்று பதிவு செய்வதை ஒரு வேலையாக
கருதியும் மேற்கண்ட இரண்டையும் பதிவு செய்வதில்லை.
பதிவு செய்யப்படாத அடமானம் மற்றும் கிரைய ஒப்பந்தம் போன்றவை EC-ல் வராத
பட்சத்தில் நாம் எப்படி அதை கண்டுபிடிப்பது ?
ஒருவர் சொத்தை அடமானம் செய்யும் போது அது பதிவு செய்யப்படாவிட்டலும்
சொத்தின் original பத்திரத்தை அடமானம்
பெற்றவர் வாங்கி வைத்துக் கொள்வார். அதனால் ஒரு சொத்தை நாம் கிரைய
ஒப்பந்தம் செய்யும் போது xerox copy-யை வைத்து நாம் மற்ற விவரங்களை உறுதி
செய்து கொண்டாலும் original பத்திரத்தைப் பார்த்த பிறகு தான் கிரைய
ஒப்பந்தமே செய்ய வேண்டும். அது மிக முக்கியம். இதன் மூலம் நாம் சொத்து
அடமானத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால் ஏற்கனவே ஒருவரிடம் சொத்தின் உரிமையாளர் கிரைய ஒப்பந்தம் செய்து
இருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்வது அரிது. ஏனெனில் பொதுவாக கிரைய
ஒப்பந்தம் செய்பவரிடம் original பத்திரத்தை சொத்தின் உரிமையாளர்
கொடுக்கத் தேவையில்லை.
இதை கண்டு பிடிப்பதற்கு வேறு என்ன வழி?
இதற்கு ஒரே தீர்வு பதிவு செய்யப்படாத ஒப்பந்தம் (unregistered sale
agreement) செல்லுபடியாகாது என்ற சட்டத்தை அரசாங்கம் கொண்டு வர வேண்டும்.
மேலும் சொத்து சம்பந்தமான பதிவு செய்யப்படாத அடமானம், மற்றும் பதிவு
செய்யப்படாத எந்த நடவடிக்கைகளும் செல்லுபடியாகாது என சட்டம் இருந்தால்
இது போன்ற மோசடிகள் நடக்காது. சொத்து சம்பந்தமான எல்லா நடவடிக்கைகளுமே
பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். ஏனென்றால் பதிவு செய்யப்படும்
எல்லா விவரங்களுமே EC-ல் வந்து விடுவதால் சொத்து அடமானத்திலs் உள்ளதா
அல்லது வேறு ஒருவரிடத்தில் கிரைய ஒப்பந்தம் செய்யப்பட்டிருகிறாதா என நாம்
தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

நன்றி: ஃபிராங்கிளி ஸ்பீக்கிங்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிரையப் பத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் Empty Re: கிரையப் பத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்

Fri Sep 05, 2014 9:45 pm

தாய் பத்திரம்


தாய் பத்திரம்
சொத்து வாங்கிய உடனேயே சிலர் அந்த சந்தோஷத்தில் தாய் பத்திரங்களை
விற்பனையாளரிடமிருந்து வாங்க மறந்து விடுகிறார்கள். இதில் பல பேர் ஒரு
Lay out-ல் வீட்டு மனையை வாங்குபவர்கள் தான். Lay out-ல் வீட்டு மனை
வாங்கும் எல்லோருக்கும் original தாய் பத்திரம் கொடுக்க முடியாது
என்பதினால் அவர்களுக்கு நகல் மட்டுமே Lay out விற்பவரால் கொடுக்கப்படும்.
அதை நாம் கிரயப்பத்திரம் பதிவு செய்யும் அன்றே வாங்கி விட வேண்டும்.
அரக்கோணம் அருகில் ஒரு Lay out-ல் வீட்டு மனை ஒன்றை ஒருவர் 2005-ஆம்
வருடம் வாங்குகிறார். பத்திரப்பதிவு முடிந்த பிறகு கிரயப்பத்திரத்தை
மட்டும் வாங்கி பத்திரமாக வைத்துக் கொள்கிறார். 5 வருடங்கள் கழித்து
வருவாய்த்துறையில் பட்டா வாங்க நினைக்கும் போது அதற்கு தாய்பத்திரம்
தேவைப்படுகிறது. தனக்கு வீட்டு மனை விற்பனை செய்த நிறுவனத்தின்
அலுவலகத்திற்கு சென்று பார்க்கும் போது அந்நிறுவனம் அங்கிருந்து காலி
செய்து 3 ஆண்டுகள் ஆகின்றன என்ற செய்தி கிடைக்கிறது. ஆனால் எங்கு மாறி
சென்றிருக்கிறார்கள் என்ற விவரம் கிடைக்கவில்லை. பொதுவாக
கிரயப்பத்திரத்தில் யார் யாரிடமிருந்து மாறி வந்தது என்ற விவரங்கள்
குறிக்கப்பட்டிருக்கும். அதை வைத்து அதற்கு முந்தைய கிரயப்பத்திரத்தின்
நகலை பெறுகிறார். அந்த கிரயப்பத்திரத்தில் இருந்து எந்த விவரங்களும்
கிடைக்கவில்லை. இப்போது அவரால் பட்டாவை மாற்ற முடியவில்லை. இந்த வீட்டு
மனையை விற்பனை செய்தது ஒரு Real estate நிறுவனம் என்பதால் அவர்கள்
சொத்தின் உரிமையாளரிடம் Power of attorney வாங்கி அதை வீட்டு மனைகளாகப்
பிரித்து விற்பனை செய்து இருக்கிறார்கள். வருவாய்த்துறையின்
பதிவேட்டின்படி சொத்தின் உரிமையாளர் பெயா¢லும் பட்டா இல்லை. அதற்கு
முன்பு சொத்தை வைத்திருந்தவர் பெயரில் பட்டா இருக்கிறது. இது சம்பந்தமான
தாய் பத்திரங்கள் இல்லாத காரணத்தினால் பட்டா மாற்றம் செய்ய முடியாமல்
தவிக்கிறார்.
Sponsored content

கிரையப் பத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் Empty Re: கிரையப் பத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum