ஏழு பண்டிகைகளில் மீட்பின் திட்டமா?
Tue Aug 26, 2014 1:08 pm
1.பஸ்கா பண்டிகை, 2. புளிப்பில்லாத அப்பப் பண்டிகை, 3. முதற்ப்பலனாகியபண்டிகை , 4. பெந்தெகொஸ்தே பண்டிகை, 5. எக்காளப் பண்டிகை, 6. பாவ நிவாரணப் பண்டிகை மற்றும் 7. கூடாரப் பண்டிகை என இந்த ஏழு பண்டிகைகள் மூலமாக தேவன் நம்மை பாதுகாக்கும் மீட்பின் திட்டத்தை வைத்திருக்கின்றார் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா!
இஸ்ரவேல் மக்கள் நடுவிலே வாழ விரும்பிய தேவன், தனக்கென பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்கும் படியாக மோசே கட்டையிட்டார். அந்த ஆசரிப்பு கூடாரத்தில் (TABERNACLE) ஒளிகொடுக்கும் படியாக 45 கிலோ எடையுள்ள, ஐந்தரை அடி உயரமுள்ள பொன்குத்துவிளக்கை செய்வதற்க்கான காரியங்களை அவருக்கு தெரிவித்தார். ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும். (யாத் 25:8&32) என்று தெளிவான வரைபடத்தை மோசேக்கு அளித்தார் தேவன். குத்துவிளக்கின் ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு பணிடிகையை மறைமுகமாக குறிக்கின்றது.
இடது புறத்தின் முதல் கிளையானது - பஸ்கா பண்டிகை – இந்த பண்டிகை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் பெற்ற மாபெரும் விடுதலையைச் நினைவுகூறும் படி செய்கின்றது. புதிய ஏற்ப்பாட்டு காலத்தில் இந்த பண்டிகை, இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை குறிக்கின்றது. உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி இயேசு, நமக்காய் சிலுவையில் இரத்தம் சிந்தி நம்மை மீட்டுக்கொண்டார்.
இரண்டாவது கிளையானது - புளிப்பில்லாத அப்பப் பண்டிகை – இந்த பண்டிகை எகிப்தின் பழைய பாவங்களால், விடுதலை பெற்ற மக்கள் தங்களை தீட்டுப் படுத்தக் கூடாது என்பதை நினைவுகூறும் படி செய்கின்றது. புதிய ஏற்ப்பாட்டு காலத்தில் இந்த பண்டிகை, இயேசு கிறிஸ்துவின் சரீரத்தை கல்லறையில் வைத்தாலும் மரணம் அவரை மேற்கொள்ளாததை குறிக்கின்றது.
மூன்றாவது கிளையானது - முதற்ப்பலனாகியபண்டிகை - இந்த பண்டிகை கர்த்தரால கிடைக்கபெற்றவற்றில் முதல் பலனை கர்த்தருக்கே செலுத்துவதாகும். புதிய ஏற்ப்பாட்டு காலத்தில் இந்த பண்டிகை, இயேசு கிறிஸ்து முதன்மையானவராக உயிரோடு எழுந்ததை குறிக்கின்றது.
நடுவில் உள்ள நான்காவது கிளையானது - பெந்தெகொஸ்தே பண்டிகை – இந்த பண்டிகையானது எகிப்தை விட்டு புறப்பட்ட ஐம்பதாவது நாளில் சீனாய் மலையில் கர்த்தர் இறங்கியதை குறிகின்றது. புதிய ஏற்ப்பாட்டு காலத்தில் இந்த பண்டிகை, கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு ஐம்பதாவது நாளில் பரிசுத்த ஆவியானவர் பெந்தெகொஸ்தே நாளில் மாம்சமான யாவரையும் நிரப்பினதைக் குறிக்கின்றது. இந்த பண்டிகை பரிசுத்த ஆவியானவர் நம்மை சத்தியத்திலே வழிநடத்தும் தற்போதைய காலத்தை குறிக்கின்றது.
ஐந்தாவது கிளையானது - எக்காளப் பண்டிகை – இந்த பண்டிகையில் செம்மறி ஆட்டின் கொம்பினால் செய்யப்பட எக்காளத்தை ஊதுவார்கள். இஸ்ரயேல் மக்களை வானாந்திரத்தில் ஒன்று சேர்க்க பயன்படுத்திய எக்காள சத்தத்தை நினைவுபடுத்துவதாய் இருந்தது. புதிய ஏற்ப்பாட்டு காலத்தில் இந்த பண்டிகை, மணவாளன் இயேசு, மணவாட்டி சபையை மத்திய ஆகாயத்துக்கு எடுத்துக்கொள்ளுதலை (இரகசிய வருகையை) குறிக்கின்றது.
ஆறாவது கிளையானது - பாவ நிவாரணப் பண்டிகையை - புதிய ஏற்ப்பாட்டு காலத்தில் இந்த பண்டிகை, இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகயையும் அதை தொடர்ந்து நடக்க இருக்கின்ற ஆயிரம் வருட அரசாட்சியை குறிக்கின்றது. இயேசுவின் இரண்டாம் வருகையின் துவக்கத்தில் பிசாசானவன் இயேசுவை எதிர்த்து அர்கமெதோன் யூத்ததில் தோல்வியடைந்து ஆயிரம் வருடம் பாதாளத்தில் கட்டப்படுவான். ஆயிர வருட அரசாட்சியின் முடிவில் பிசாசானவன் மீண்டும் இயேசுவுடன் கடைசி யூத்ததில் தோல்வியடைந்து பின்னர் அக்கினி கடலில் தள்ளப்படுவான். அப்பொழுது பாவிகளுக்கான வெள்ளை சிங்காசன நியாத்தீர்ப்பு இருக்கும்.
ஏழாவது கிளையானது - கூடாரப் பண்டிகை – இந்த பண்டிகையில் இஸ்ரயேலர் ஏழு நாட்களுக்குக்கூடாரங்களில் தங்கியிருபார்கள். இஸ்ரயேலர் வனாந்தரத்தில்கூடாரங்களில் அவர்கள் தங்க நேர்ந்ததை அது அவர்களுக்கு நினைவுபடுத்தியது. புதிய ஏற்ப்பாட்டு காலத்தில் இந்த பண்டிகை, புதிய வானம் மட்டும் புதிய பூமியில் நாம் நித்திய நித்தியமாய் வாழப்போவதைக் குறிகின்றது.
பழைய ஏற்ப்பாட்டின் இந்த ஏழு பண்டிகையும் புதிய ஏற்பாட்டின் காலத்தில் நிறைவேறி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பண்டிகையும் இயேசு கிறிஸ்த்துவின் மூலமாய் தேவன் நமக்கு வைத்துள்ள மீட்பின் திட்டத்தை தெள்ளத் தெளிவாக தெரிவிகின்றது. பிசாசனவன் தனது சகல தந்திரங்களினாலும், இந்த மீட்பின் ஏழு பண்டிகைகளைக் குறித்த விழிப்புணர்வு செய்திகளை விசுவாசிகளுக்கு சென்றடையாமல் தடை செய்ய நினைக்கின்றான். ஆசீர்வாதமான செய்திகளிலும், வாக்குத்தத்த வசனகளிலும் மக்களை மூழ்கச்செய்து, சபை எடுத்துக் கொள்ளுதல் சமயத்தில் அநேக விசுவாசிகளை தடுத்து நிறுத்தி உபத்திரவ காலத்திற்க்குள்ளாய் அதாவது அவனுடைய ஏழு வருட ஆட்சிக்குள்ளாய் கொண்டு செல்ல துரிதமாய் செயல் பட்டு வருகின்றான். ஏழு பண்டிகைகளில் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டத்தை அறியாதவர்கள், ஏழு வருட உபத்தரவதிற்க்குள்ளாய் செல்வதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. தேவன் உண்டாக்கிய ஏழு பண்டிகைகளைக் குறித்த காரியங்களை பின்வரும் செய்திகளில் காணலாம்.
நன்றி: விசுவாசத்தில் வாழ்க்கை
Permissions in this forum:
You cannot reply to topics in this forum