தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
யோகா யோகா ஒரு கிறிஸ்தவ மருத்துவரின் கண்னோட்டம் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

யோகா யோகா ஒரு கிறிஸ்தவ மருத்துவரின் கண்னோட்டம் Empty யோகா யோகா ஒரு கிறிஸ்தவ மருத்துவரின் கண்னோட்டம்

Mon Aug 25, 2014 8:16 am
யோகா யோகா ஒரு கிறிஸ்தவ மருத்துவரின் கண்னோட்டம் Yoga
முற்காலங்க‌ளிலெல்லாம் மக்களிடையே காலரா, வாந்திபேதி, நிமோனியா, தொற்றுநோய்க‌ள் என கிருமிகளினால் ப‌ர‌வும் வியாதிக‌ள் மிக அதிக அளவில் காணப்பட்டன‌. ஆனால் இந்நாட்க‌ளில் ச‌ர்க்க‌ரை, இர‌த்த‌க் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு, ம‌ன‌ அழுத்த‌ம் போன்ற‌ வாழ்க்கைமுறை சார்ந்த (Life style diseases) வியாதிகளே அதிகமாகப் பேசப்படுகின்றன‌. மருத்துவத் துறையின் அசூர வள‌ர்ச்சி மற்றும் தகவல் தொழில் நுட்பங்களின் பெருக்கம் மருத்துவருக்கும் நோயாளிக்குமிடையே உள்ள இடைவெளியை அதிகரிக்கச் செய்கிறது… ம‌ருத்துவ‌ச் செலவினத்தைக் கூட்டுகிற‌து… சில வேளைகளில் செல‌வு செய்ய ப‌ண‌ம் இருந்தும் செலவு செய்துகூடப் புண்ணிய‌மில்லை என மருத்துவத்துறை கைவிரிக்கும் நிலைமையில், எப்படியாயினும் தீர்வு கிடைத்து விடாதா என்ற எதிர்பார்ப்போடு மாற்று மருத்துவ முறைக‌ளில் (Alternative Medicine) நாட்ட‌ம் செலுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மருத்துவமனைகளுக்கு வந்துசெல்லும் நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு இருப்பது அவரது மனரீதியான பாதிப்புகளினால் ஏற்படும் உடல்நல கோளாறுகளே. இந்நிலையில் அவர்கள் மருந்து மாத்திரகளை மறந்துவிட்டு மாற்று மருத்துவ முறைகளில் ஊக்குவிக்கப்படுவது ஒன்றும் புதிர‌ல்ல. உலகில் யோகா, ஆழ்நிலை தியானம் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மாற்று மருத்துவ முறைகள் உள்ளன. ஒருவித‌த்தில் ஆங்கில மருத்துவத்தின் (Allopathic Medicine) வ‌றைய‌றுக்க‌ப்ப‌ட்ட‌ எல்லையே யோகா போன்ற மாற்றுமுறை மருத்துவத்தின் வள‌ர்ச்சிக்கு காரணம் எனலாம்.



யோகா என்பது என்ன?
சமஸ்கிருத மொழியிலிருந்து வந்த யோகா என்ற வார்த்தைக்கு “இணைப்பு” என்று பொருள். உட‌ல் ஆச‌ன‌ நிலைக‌ள் ம‌ற்றும் மூச்சுப்பயிற்சிக‌ள் மூலம் மனிதனை இறைவனுடன் இணைக்க முற்படும் மனித முயற்சியே யோகா என்றழைக்கப்படுகிறது.

யோகா என்பது அடிப்படையில் ஒரு தனிமனித ஒழுக்கம், வாழ்க்கை முறை, சுய முன்னேற்ற கருவி, உடல் மற்றும் மனநலம் பேணும் ஒரு அறிவியல் சார்ந்த கலை, ஆன்மிக சாதனம் இப்படிப் பலராலும் பலவிதமாக கருதப்படுகிற்து. மன அமையின்மை, மன அழுத்தம், அலைச்சல், வேலைப் பளு, மாசடைந்த உணவு, சுற்றுப்புற சூழல், ஊடகங்களின் தாக்கங்கள் ஆகிய போன்ற சமுதாய சவால்களை எதிர்த்துப் போராடுவதற்கு யோகா ஒரு நல்ல ஆயுதம் என்கின்றனர்.
நம்மில் பலரும் யோகா என்றாலே, தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து வலுவினை ஊட்டும் ஒரு சாதாரணமான உடற்பயிற்சி என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அது உடற்பயிற்சிக‌ளுக்கெல்லாம் மேலான தத்துவங்களை மையமாகக் கொண்டுள்ளது.

சுமார் கி.மு. 150 வருடங்களில் உருவான பதஞ்சலி யோகசூத்திரத்தின் படி யோகாவில் யமம். நியமம், ஆசனம், பிராணயமம், பிரத்யாகரம், தாரணை, தியானம் ம‌ற்றும் சமாதி என ஆக‌ மொத்தம் எட்டுவகையான வழிமுறைகள் உண்டு. ஆனால் பிந்நாட்களில் 15 ம் நூற்றாண்டில் ஆசனம் (குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருக்கும் உடற்பயிற்சி), பிராணயமம் (சுவாசத்தை உள்ளே வெளியே இழுக்கும் மூச்சுப் பயிற்சி) என்ற இரண்டு அம்சங்களை மட்டும் உள்ளடக்கிய கதா யோகா உருவெடுத்து மற்ற மதத்தினருடன் எதிர்நோக்கும் தத்துவ தர்க்கங்களை சற்றே சாமர்த்தியமாக தவிர்த்து இன்று உலகமுழுவதிலும் பிரபலமாகி வருகிற‌து. 


யோகாவின் தத்துவப் பின்னணி:
யோகா வெளிப்படையாகவே கிறிஸ்தவ தத்துவங்களுக்கு எதிரானது. மனிதனை கடவுளோடு இணைக்க முற்படும் முயற்சியே யோகா என்றறிந்தோம். கடவுளைக் குறித்த கருத்தில் இரண்டிற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது.
முப்பத்து முக்கோடி தெய்வங்களைக் கொண்ட இந்து மதக் கருத்தின் படி காண்ப‌தெல்லாம் கடவுள் தான். இறைவன் ஒரு ஆள்த்தத்துவத்தோடு இல்லாமல் ஒரு ஆன்மீக பொருளாக அண்ட சராசரத்திலுள்ள எல்லாவற்றிலும் வியாபித்துள்ளார் என அது கூறுகிறது. ஆனால் கிறிஸ்தவமோ, இறைவன் என்பவர் மனிதன் உட்பட அண்ட சராசரங்கள் அனைத்தையும் தனது வார்த்தையினால் படைத்த ஆள்த்தத்துவமுள்ள ஒருவரே என தெளிவாய் கூறுகிறது.
ம‌னிதனைக் குறித்த கருத்திலும் இரண்டிற்குமிடையே வேறுபாடு உள்ளது. காண்ப‌தெல்லாம் கடவுள் என்பதால், உடல் ஆசன மற்றும் மூச்சுப் பயிற்சிகள் மூலமாக மனிதனும் இறை நிலையை அடைகிறான் என்பது யோகாவின் கருத்து. இது “நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்” (ஆதி.3:4) என்று சாத்தான் ஏவாளை வஞ்சித்தது போல் அல்லவா உள்ளது. பரிசுத்த வேதாகமமோ மனிதன் இறைவனால் தனது சொந்த சாயலில் படைக்கப்பட்ட ஒரு படைப்பு; படைப்பும் படைத்தவரும் ஒன்றாகிவிட முடியாது என கூறுகிறது.
மனிதனின் அடிப்படை பிரச்சினையும் அதற்கான தீர்வும் குறித்த விஷயத்தில் மனிதன் தனது இறைநிலையை உணராமல் இருப்பது தான் அவன‌து அனைத்துவகையான பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதும் அத‌னை அவன் த‌னது முய‌ற்சியினால் அடைந்து விட‌லாம் என்பதும் யோகாவின் க‌ருத்து. ப‌ரிசுத்த‌ வேதாக‌ம‌த்தின் படியோ ம‌னித‌னின் பாவ‌நிலைமையே அவன‌து பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம்; இயேசுகிறிஸ்துவின் இரத்தமே சகல பாவங்களையும் நீக்கி, அவ‌னை சுத்திகரிக்கும். இது கிருபையாய் தேவ‌னால் அருள‌ப்ப‌டும் அன்ப‌ளிப்பு; அது முய‌ற்சியினால் ச‌ம்பாதிக்க‌ இய‌லாத‌ ஒன்று.யோகா உண்மை தெய்வத்திற்குப் பதிலாக ஒருவன் தன்னையே மையப்படுத்திக் கொள்ள‌ போதிக்கிற‌து. வாழ்வின் இக்கட்டான வினாக்களுக்கு தீர்வை வேதாகமத்தில் தேடுவதைத் தடுத்து அவன் தனது மனசாட்சியையே நாடும் படி ஊக்குவிக்கிற‌து.



அதிலென்ன தவறு?
அதெல்லாம் சரி, எப்படியாயினும் யோகா ஒருவிதத்தில் நன்மையைத் தானே தருகிறது. பின்னர் அதிலென்ன தவறு; பின்னணியிலுள்ள தத்துவத்தை மட்டும் தவிர்த்து விட்டு வெறும் யோகாசன நிலையையும் உடற்பயிற்சியையும் மட்டும் எடுத்துக் கொள்வதில் தவறு இல்லையே என சிலர் கூறுவது எனது காதினுள் தொனிக்கிறது. அது சரியாக இருக்க வாய்ப்பில்லை.

அனைத்து வகையான யோகாவுமே ஆன்மீகப் பயிற்சிகளே. ஒவ்வொரு யோகாசன நிலையும் இந்து தெய்வங்களை வழிபடுவதாகும். உடல் ஆசன மற்றும் பயிற்சிகளை அவ்ற்றின் ஆன்மீக ஈடுபாடுகளிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது. இதுகுறித்து, Hinduism Today என்ற பத்திரிக்கை (April -June 2003) த‌ன‌து க‌ருத்தாக‌ “க‌தா யோகாவை இந்து ம‌தத்திலிருந்து பிரித்துப் பார்ப்ப‌து ஒரு ஏமாற்று வேலையாகும். அநேக‌ யோகா ஆசிரிய‌ர்க‌ள் அத‌ன் வேர் இந்து மத‌த்தில் இருப்பதையும் அத‌ன் ஆன்மீக‌ நோக்கத்தையும் அறியாதிருக்கிறார்கள்” என்று கூறி த‌னது ஆத‌ங்கத்தை வெளிப்ப‌டுத்தியுள்ள‌து.
உண்மை தெய்வத்தின் அருளால் வியாதிகள் அகலும் போது, தீய சக்திகளின் வல்லமையினாலும் வியாதிகள் விலகும் என்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். அது ஆச்சரியமல்ல; ஏனெனில், சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே (2 கொரி. 11:14). எனவே வியாதியை நீக்குவதால் ஒருவர் தெய்வமாகி விட முடியாது. ஆனால், நம்முடைய தேவனோ உண்மை தெய்வமாக இருப்பதினால் தான் அவரால் சரீர சுகத்தை மட்டுமல்ல, ஆவி ஆத்துமா சரீரம் முழுவதுமான ஒரு பூரண தெய்வீக சுகத்தை அருளுகிறார். எனவே நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள் (1 யோவான் 4:1).

அது எப்படி அந்த வேலையைச் செய்கிறது என்பது மிகவும் முக்கியம். வேதாகமத்திற்கு முரண்பாடான‌ மந்திர சக்தியினால் அது நடை பெறுகிற‌தா? அப்படியெனில் அது இறுதியில் விடுதலையை அல்ல அடிமைத்தனத்தையே கொண்டு வரும். எனவே எதையும் ஏற்றுக் கொள்ளுமுன் எல்லவற்றையும் சோதிக்கும் மனப்பக்குவம் வேண்டும். அப்போது தான் நலமானதை பிடித்துக் கொள்ளமுடியும். யோகா போன்ற மாற்று மருத்துவ முறைகளில் எது நல்லது எது பொல்லாதது என தெளிவாக எளிதில் வறையறுக்க இயலாத நிலையில் … “பொல்லாங்காய்த் ‘தோன்றுகிற’ எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்” என்ற‌ தார‌க‌ மந்திர‌த்தை க‌டைபிடிக்க‌ வேண்டும். விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே (ரோமர் 14:23). எனவே சந்தேகத்திற்கிடமான செயல்களில் விலகியிருப்பது தான் நல்லது.



கிறிஸ்த‌வ‌ யோகா?
சமீப காலங்களில் உடல் மற்றும் மூச்சுப் பயிற்சியையும் வேதாகம தியானத்தையும் இணைத்து கிறிஸ்தவ யோகா என்று புதிதாக ஒன்று முளைத்திருக்கிறது. கிறிஸ்தவ யோகா என்பது அடிப்படையிலேயே ஒரு வார்த்தை முரண்பாடு. ஒருவனை கிறிஸ்தவ இந்து, இல்லையென்றால் இந்துக் கிறிஸ்தவன் என்று நம்மால் வர்ணிக்க இயலுமா? ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? (யாக்கோபு 3:11). நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது என்று பரிசுத்த வேதம் தெளிவாய் போதிக்கிறது.(மத். 7:18). எனவே யோகா என்ற மரத்தின் வேர் ஆதாரத்தை எண்ணிப் பார்க்க வேன்டியது மிகவும் அவசியம்.
சுவிசேசத்தை பிரசங்கியுங்கள்… வியாதியுள்ளவர்களை சொஸ்தமாக்குங்கள்… இதுவே பன்னிரு சீடர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளையின் வரிசை(மத். 10:7,Cool. ச‌ரீர நலனில் காட்டும் அக்கறையைக் காட்டிலும் ஆன்மீக‌ ந‌ல‌னே மிக‌வும் முக்கிய‌ம். ஏனெனில், ச‌ரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது (1 தீமோ 4:Cool.



வேத‌ம் நமது தியான‌மாக‌ட்டும்; ஜெபம் நமது பயிற்சியாகட்டும்:
வேதாக‌ம‌த்தின் ப‌டி தியான‌ம் என்ப‌து பரிசுத்த வேதத்தில் வெளிப்ப‌டுத்தப்ப‌ட்டுள்ள‌ ச‌த்திய‌ங்க‌ள் எந்த‌ அள‌விற்கு நமக்கு ச‌ம்பந்த‌ப்ப‌ட்ட‌வை என‌ சிந்த‌னை செய்து அவற்றை நமதாக்கிக் கொள்லுத‌லைக் குறிக்கிற‌து. தாவீதின் தியான‌ங்க‌ள் ச‌ங். 119 முழுவதிலும் தெளிவாய் திரும்ப‌த் திரும்ப‌ வெளிப்ப‌டுகின்ற‌ன. வேத வாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிற ப‌டியால் (2 தீமோ. 3:16) அவையாவும் நிச்சயமாக நாம் தியானிக்க‌த் த‌குந்த‌வையே.
வேத‌த்தின் மூல‌ம் தேவ‌ன் ந‌ம்மோடு பேசுகிறார்; ஜெப‌த்தின் மூல‌மாக‌ நாம் அவ‌ரோடு உற‌வாடுகிறோம். இக்கட்டான சூழ்நிலைகளில் கூட‌ தானியேல், தன் மேலறையிலே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான் என்பதை அறிவோம். நமது பிரச்சினைகளை இறைவனிடம் எடுத்துக் கூறி உரிய தீர்வைப் பெற்றுக் கொள்ள ஜெபமே சிறந்த‌ பயிற்சியாகும்.


“போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்” என்று தீர்மனித்த பவுலைப் போன்று நாமும் தெளிவுள்ளவர்களாய் மற்ற சக விசுவாசிகளுக்கு எந்த விதத்திலும் இடறலாயிராமல் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவோம்; வழி நடத்துவோம்.
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, அவருடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை (ரோமர். 12:1). 

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum