பதிலுக்கு பதில்
Thu Feb 21, 2013 8:28 pm
ரொட்டிக்
கடை வைத்திருந்தார் ஒருவர். அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது
அவருக்கு வெகுவாக சந்தேகம். தன்னை அவர் ஏமாற்றுவதாக வருத்த்ஹம் இருந்தது.
அரை கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை. எடை குறைவாக
இருக்கிறது என்று குற்றம் சாட்டினார். சண்டை முற்றி ஒரு நாள் நீதிபதி முன்
வழக்கு வந்தது.
வெண்ணெய் வியாபாரி தன்னிடம் கொடுத்த வெண்ணெய்
பொட்டலத்தை நீதிபதி முன் நிறுத்துக் காட்டிய ரொட்டிக் கடைக்காரர்
"பாருங்கள் 450 கிராம் தான் இருக்கிறது. இப்படித்தான் என்னை பலமுறை ஏமாற்றி
இருக்கிறார். இவரை தண்டியுங்கள்" என்று கூச்சலிட்டார். நீதிபதி வெண்ணெய்
வியாபாரியை பார்த்து "என்ன சொல்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் 50 கிராம்
குறைவாகத் தரலாமா? அது குற்றமில்லையா?" என்று கேட்டார்.
"ஐயா.. என்னிடம் எடைக்கல் கிடையாது. அதனால் 500 கிராம் எடையுள்ள பொருள்
ஏதேனும் ஒன்றை எடைக் கல்லுக்குப் பதிலாக பயன்படுத்துவது வழக்கம்.
பெரும்பாலும் இவரது கடை ரொட்டியைத் தான் வாங்குகிறேன். அதையே அவ்வாறு
பயன்படுதுவேன். பாக்கெட் மீது எடை 500கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை
நம்பி இவரது ரொட்டியை எடைக் கல்லுக்குப் பதிலாக தராசில் பயன்படுத்துவேன்.
இப்போது பாருங்கள் என் வெண்ணெயும் அவரது ரொட்டியும் சம எடையாக இருக்கும்."
என்று தராசில் இரண்டையும் எதிர் எதிராக வைத்தார். சமமாக இருந்தது.
எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களே ஒழிய தானும்
பிறரை ஏமாற்றக் கூடாது என்று ஏன் நினைப்பதில்லை. நாம் கிறிஸ்துவின்
சுபாவங்களை வெளிப்படுத்தாமல் நம் சுற்றத்தார் அவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்
என்று நினைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
நம் ஆண்டவரும் கூட இதையே நம்மிடம் கேட்பாரே? ஆம்! அவர் சொன்னதை கொஞ்சம் கவனியுங்களேன்?
மத்தேயு 7:12 ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ,
அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும்
தீர்க்கதரிசனங்களுமாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum