சண்டே ஸ்பெஷல்: மஸ்ரூம் பிரியாணி
Sun Aug 17, 2014 9:10 pm
சண்டே ஸ்பெஷல்: மஸ்ரூம் பிரியாணி |
மழைக்காலத்தில் அதிகம் வளர கூடிய, சுவைமிக்க உணவுப் பொருள் தான் காளான். இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது, பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. சிறியோர் முதல் பெரியோர் வரை அதிகம் விரும்பி சாப்பிடும் மஸ்ரூம் பிரியாணி ரெசிபி உங்களுக்காக செய்முறை விளக்கத்துடன். தேவையானவை பாஸ்மதி அரிசி - 250 வெங்காயம் - 1 தக்காளி - 2 புதினா - கைப்பிடி அளவு கொத்தமல்லி - தேவையான அளவு எண்ணெய் - 3 டீஸ்பூன் நெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு அரைக்க வேண்டியவை சோம்பு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பட்டை இலை - 2 பூண்டு - 10 பல், கிராம்பு - 2, மிளகு - அரை டீஸ்பூன், மிளாகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தனியாத்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய் - 2 துருவியது, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், ஏலக்காய் - 2 செய்முறை முதலில் அரிசியை 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.அரைக்க வேண்டியவற்றை ஒன்றாக அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். இதன் பின்னர் அரைத்து வைத்திருந்த விழுது, நறுக்கிய தக்காளி, காளான், உப்பு, புதினா, கொத்தமல்லி எல்லாவற்றையும் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும். இதன்பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அரிசியை போட்டு வெந்ததும் இறக்கி நன்றாக கிளறவும். தேவையென்றால் சிறிதளவு நெய் விட்டு கிளறி பரிமாறலாம்! சுவையான காளாண் பிரியாணி ரெடி! Thanks: Lankasri |
Permissions in this forum:
You cannot reply to topics in this forum