ஒரே கிளிக்கில் வேலையை முடிங்க
Sun Aug 17, 2014 9:15 am
நாம் அனைவரும் நமது வேலையை கணனியில் தொடங்கும் முன் பவர் பொத்தானை பயன்படுத்துவோம். அதே சமயம் வேலையை முடிக்கும் போது அனைத்து விண்டோவையும் முறைப்படி மூடி விட்டு ’start’ ஆப்ஸ்சனை கணனியில் தேடிக் கொண்டிருப்போம். ஏனெனில் ஷட்டவுன் பொத்தான் அங்கு தான் இருக்கும். இந்த விடயம் பலரையும் கடுப்பேற்றும் ஒன்றாக இருக்கும். இந்த காரணத்திற்காக பலரும் சில சமயங்களில் டிவியை போல் கணனியை ஆப் செய்து விட்டு ஓடிவிடுவார்கள். அதற்காக அவர்கள் தகுந்த பிரச்சனைகளை அவர்களது கணனியில் சந்திப்பார்கள். முன்பெல்லாம் கணனியை இது போன்று ஆப் செய்து விட்டு போனாலோ, அல்லது அனைத்து புரோகிராம்களை முறைபடி குளோஸ் செய்யாவிட்டாலும் அவர்களது கணனியில் பல சிக்கல்கள் தலையை எட்டிபார்க்கும். ஆனால் தற்போது உள்ள கணனிகளில் உள்ள முக்கியமான உறுப்புகள் மதர்போர்டு, கேபினட் போன்றவைகள் ATX வகையானதாக உள்ளது. அதனால் பிரச்சனைகள் வருவது குறைவாக உள்ளது. வாங்க.. ஒரே கிளிக்கில் ஆப் செய்யலாம் இந்த பிரச்சனையை கண்ட்ரோல் பேனலில் Power Options சென்று choose what the power button do என்பதினை கிளிக் செய்து, when i press the power button என்பதில் Shutdown என்பதினை தேர்ந்தெடுக்கலாம். மேலும் அதில் பல சிறப்பு அம்சங்கள் இருக்கும். Shutdown க்கு பதிலாக sleep, nothing என சில ஆப்ஸனும் இருக்கும். மடிக்கணனியில் மேலும் மடிகணனியில் உள்ள Power Options மூலம் உங்கள் திரையை மூடுவதன் மூலம் உங்கள் கணனியை ஆப் செய்யலாம். இனி நீங்கள் அவசரமாக கணினியை ஷட்டவுன் செய்ய வேண்டுமெனில் பவர் பொத்தானை அழுத்தினால் மற்றும் திரையை மூடினால் போதுமானது. உங்களுடைய கணனி பாதுகாப்பாக ஷட்டவுன் ஆகிவிடும். Thanks: Lankasri |
Permissions in this forum:
You cannot reply to topics in this forum