மகாத்மா காந்திஜியின் பற்றி பரவலாக தெரியாத உண்மைகள்
Sat Aug 16, 2014 8:25 am
நடப்பதில் ஆர்வம் கொண்டவர். ‘உடற்பயிற்சிகளின் இளவரசன் நடைபயிற்சி’ என்று அவர் அவ்வப்போது குறிப்பிடுவது வழக்கம். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதிலிருந்து அவருக்கு நீண்டதூரம் நடப்பது மிகவும் பிடிக்கும். லண்டனில் சட்டம் படித்துக் கொண்டி ருந்தபோது, தினமும் 810 மைல் தூரம் நடப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். 1930ம் ஆண்டு, சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி நோக்கி, தனது 60வது வயதில் 241 மைல் தூரத்தை நடந்தே கடந்தார்.
காந்திஜியின் முதல் ரேடியோ உரை, 1931ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்தபோது ஒலிபரப்பானது. அமெரிக்க மக்களுக்காக அவர் ரேடியோவில் பேசினார். அவரின் முதல் பேச்சு, ‘இந்த விஷயத்தை நான் பேசலாமா?’ என்று ஆங்கிலத்தில் தொடங்கியது.
ஒருமுறை ரெயிலில் ஏறும்போது, ஒரு காலில் அணிந்திருந்த செருப்பு கழன்று தண்டவாளங்களுக்கு இடையே விழுந்துவிட்டது. அடுத்த கணமே, தன் மற்ற கால் செருப்பையும் கழற்றி கீழே போட்டுவிட்டு மேலே ஏறினார். ஒருகால் செருப்பை கண்டெடுப்பவர்களுக்கு அந்த செருப்பால் எந்த பயனும் இல்லை என்பதால் தன் மற்றொரு கால் செருப்பை அவர் கழற்றிப் போட்டார்.
காலம் தவறாமையை கண்டிப்புடன் காந்திஜி கடைபிடித்தார். அதற்காக அவர் தன் இடுப்பில் டாலர் கடிகாரம் ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டிருந்தார். படுகொலை செய்யப்பட்ட 1948ம் ஆண்டு ஜனவரி 30ந் தேதி அவர் சற்று மனவேதனையுடன் இருந்துள்ளார். ஏன் என்று நெருக்கமானவர்கள்
கேட்டபோது, அன்றைய இறை வணக்கத்திற்கு 10 நிமிடம் தாமதமாகப் போனதற்காக காந்திஜி வருத்தம் அடைந்துள்ளார்.
காந்திஜி வழக்கறிஞர். அந்த தொழிலில் 20 ஆண்டுகள் அவர் இருந்துள்ளார். எனினும், பெரும்பாலான வழக்குகளில் இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசி சமரச தீர்வு கண்டுவிடுவார். ‘இதனால் நான் எதையும் இழக்கவில்லை. என் ஆத்மாவையும் இழக்கவில்லை’ எனக் குறிப்பிடுகிறார்.
1948ம் ஆண்டு காந்திஜியின் உடலைச் சுமந்து சென்ற பீரங்கி வண்டி, 1997ல் அன்னை தெரசா உடலையும் சுமந்து சென்றது.
நோபல் அமைதி விருதுக்கு 1948ம் ஆண்டு காந்திஜி
தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். துரதிருஷ்டவசமாக அந்த ஆண்டில் அவர் படுகொலை செய்யப்பட்டதால், நோபல் பரிசுக்குழு அந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை யாருக்கும் வழங்கப்போவதில்லை என்று அறிவித்தது.
வயதான பிறகு காந்திஜி, பல் செட் அணிந்திருந்தார். அதை அவர் எப்போதும் அணிவதில்லை. சாப்பிடச் செல்லும்போது மட்டும் பொருத்திக் கொள்வார். சாப்பிட்டு முடித்ததும் அதை சுத்தப்படுத்தி, துடைத்து தன் இடுப்பு துணியில் பத்திரமாக வைத்துக் கொள்வார்.
காந்திஜி பேசும் ஆங்கிலம், ஐரிஷ் (அயர்லாந்து) பேச்சு வழக்கில் இருக்கும். இதற்கு காரணம், அவருக்கு முதலில் ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தவர்கள் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்கள்.
சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டிருந்த காலத்தில் இடுப்பில் மட்டும் அவர் துணியணிந்திருந்தார். ஆனால், லண்டனில் அவர் இருந்தபோது பட்டுத் தொப்பி, கணுக்காலுறை, கையில் பிரம்பு வைத்திருந்தார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து அவர் அட்டர்னி ஆனார். நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் முதலில் வாதாடும்போது, அவர் கால்கள் நடுங்கின. வாய் குளறியது. என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பிய அவர் தோல்வியில் கீழே உட்கார்ந்துவிட்டார்.
தென் ஆப்பிரிக்காவில் அவர் வசித்த காலத்தில் அவரின் ஆண்டு வருமானம், 15,000 டாலர். இந்த தொகை, இப்போதுகூட பல இந்தியர்களின் கனவுத்தொகையாக உள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் அவர் பணத்தை குவித்தாலும் அவருக்கு மகிழ்ச்சியில்லை. காரணம், அவரின் சகஇந்தியர்கள், அங்கே வறுமையில் வாடினர். பசி, பட்டினியால் துவண்டிருந்தனர். அவர்களின் பசி, பிணியைப் போக்க தன் வருமானத்தின் பெரும் பகுதியை காந்திஜி செலவிட்டார்.
ஒருசமயம் காந்திஜி தன்னை சந்திக்க வந்திருந்த ஒருவருக்கு 35 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது தன் அருகில் இருந்த தனிச் செயலாளர் வி.கல்யாணத்திடம் கடனாக அந்த தொகையை பெற்று, வந்திருந்தவருக்கு கொடுத்தார். பின்னர் கல்யாணத்துக்கு பணம் கொடுக்க காசோலையாக வழங்கினார். காந்திஜி 2011948 அன்று வழங்கிய காசோலையை கல்யாணம், 2911948 அன்று பணம் பெறுவதற்காக வங்கியில் செலுத்தினார். மறுநாள் (3011948) மகாத்மா காந்திஜி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். காந்திஜி கடைசியாக கொடுத்த அந்த காசோலையை வங்கி கணக்கில் சேர்க்காமல் திருப்பி வாங்கிய கல்யாணம், அதை விலை மதிக்கமுடியாத பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு விலைமிக்கது அது.
நோபல் பரிசு பெற்ற 5 உலகத் தலைவர்களான, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் (அமெரிக்கா), தலாய் லாமா (திபெத்), ஆங் சான் சூ கியி (மியான்மர்), நெல்சன் மண்டேலா (தென் ஆப்பிரிக்கா) மற்றும் அடோல்போ பெரஸ் எஸ்க்யுவெல் (அர்ஜென்டினா) ஆகியோர், தாங்கள் மகாத்மா காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
காந்திஜிக்கு புகைப்பட கலைஞர்களைக் கண்டாலே பிடிக்காது. புகைப்படம் எடுப்பதையும் விரும்பாதவர் அவர். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த காலத்தில் அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்ட தலைவரே அவர்தான்.
மனித வடிவில் வந்த இயேசு மாண்டது வெள்ளிக்கிழமை. காந்தியடிகள் பிறந்தது வெள்ளிக்கிழமை. இந்தியா விடுதலை பெற்றது வெள்ளிக்கிழமை. தேசப்பிதா மகாத்மா காந்திடிகள் இறந்ததும் வெள்ளிக்கிழமைதான்.
காந்தியடிகளைக் கவுரவப்படுத்தும் வகையில் முதன்முதலில் அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட வெளிநாடு அமெரிக்கா. ஜனவரி 26, 1961.
1915ம் ஆண்டு ஒரு சமயம் சாந்திநிகேதனுக்கு காந்தியடிகள் சென்று கவிஞர் ரவீந்திரநாத் தாகூரைப் பார்த்து நமஸ்தே குருதேவ் என்று கைகூப்பி வணக்கம் சொன்னார். உடனே தாகூர், நான் குருதேவ் என்றால் நீங்கள் மகாத்மா என்று சொல்லி வணங்கினார். இதுவே, காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற அடைமொழி அமையக் காரணமான நிகழ்ச்சி.
மகாத்மா தனது வாழ்நாளில் ஒருமுறைகூட விமானப்பயணம் மேற்கொண்டதில்லை.
காந்திஜிக்கு டாக்குமென்டரி படம் எடுத்த முதல் நபர் ஏ.கே.செட்டியார் என்ற தமிழர். கடைசி வரை காந்தி பக்தராகவே வாழ்ந்து விளம்பரம் இன்றி பணிசெய்து மறைந்து போனார்.
இந்தியாவின் முதல் சுதந்திர தினமான 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் நாளை காந்தியடிகள் கொண்டாடவில்லை. அன்றைய தினம் வாழ்த்துச் செய்திகூட மகாத்மா அனுப்பவில்லை. மாறாக, வகுப்புவாத கலவரங்களினால் மனம் நொந்து காணப்பட்டார்.
காந்திஜி இரண்டு விஷயங்களுக்கு வருந்துவதுண்டு. ஒன்று, அவருடைய கையெழுத்து கிறுக்கலாக, எளிதில் புரியாமலிருக்கும் என்பது. இன்னொன்று, தம்மிடமிருந்த ஒரு கெட்ட பழக்கமான, யாரையாவது உடம்பைப் பிடித்து விடச் சொல்வது. அதாவது மசாஜ் செய்து கொள்வதைத் தனது கெட்ட பழக்கமாக காந்தி குறிப்பிட்டார்.
கிழிந்த துணிகளைத் தானே தைத்துக் கொள்வார் காந்திஜி. ஒருவர் எவ்வளவுதான் வறுமையில் இருந்தாலும் உடுத்துகின்ற உடைகள் மிக து£ய்மையாக இருக்க வேண்டும் என்று காந்திஜி விரும்புவார். அதை அவர் கடைசி வரை கடைபிடித்தார்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum