Page 2 of 2 • 1, 2
நெல்லை அழகிய படங்கள்
Wed Aug 13, 2014 9:02 pm
First topic message reminder :
பாணதீர்த்த அருவி அல்லது அகத்தியர் அருவி - காரையார் டேம் உள்ளே
பாணதீர்த்த அருவி அல்லது அகத்தியர் அருவி - காரையார் டேம் உள்ளே
Re: நெல்லை அழகிய படங்கள்
Wed Aug 13, 2014 9:16 pm
திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வாநேரி என்ற ஊரில் உள்ள சி.எம்.எஸ் தேவாலயம்.
Re: நெல்லை அழகிய படங்கள்
Wed Aug 13, 2014 9:26 pm
நிலக்காட்சிகளை வரைவதில் தேர்ச்சி பெற்ற
தாமஸ் டேனியல், வில்லியம் டேனியல் என்ற
இரண்டு பிரிட்டிஷ் ஒவியர்கள் 1792ல்
கன்னியாகுமரி பகுதியில் பயணம் செய்த
போது களக்காடு கோவிலை ஒவியமாக
வரைந்திருக்கிறார்கள்
222 வருஷங்களுக்கு முந்தைய தமிழகத்தின் அரிய
ஒவியக்காட்சியது,
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில்
உள்ளது களக்காடு. இங்குள்ள சத்யவாகீஸ்வரர்
கோவில் அழகிய ஒவியங்களும் இசைத்
தூண்களும் சிற்பங்களும் கொண்டது, கி.பி.
12ஆம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட வர்மன்
என்னும் மன்னனால் கட்டப்பட்டது. சுற்றிலும்
பசுமையான வயல்களையும், குளங்களையும்
கொண்டது களக்காடு.
வில்லியம் டேனியல் தனது பதினாறாவது வயதில்
கிழக்கிந்திய கம்பெனியின் அழைப்பில்
இந்தியாவிற்கு வந்திருக்கிறார்,
அவரது மாமா தாமஸ் டேனியல் முன்னதாக
இந்தியாவில் பிரிட்டீஷ் கம்பெனியின் ஒவியராகப்
பணியாற்றியவர், இருவரும்
இணைந்து தென்னாட்டில் பயணம்
செய்து மதுரை. ராமேஸ்வரம், மகாபலிபுரம்
உள்ளிட்ட பல முக்கிய ஊர்களை அரிய ஒவியமாக
உருவாக்கியிருக்கிறார்கள்
இந்த ஒவியங்கள் Oriental Scenery என்ற
தொகுப்பாக வெளியாகி உள்ளது.
Re: நெல்லை அழகிய படங்கள்
Wed Aug 13, 2014 9:30 pm
திருநெல்வேலி மாவட்டம் ஐவகை நிலங்களையும் ஒருங்கே கொண்டு திகழ்கிறது.
குறுஞ்சி : மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள்!!!
முல்லை : களக்காடு சுற்று வட்டாரங்களில் அடர்ந்த காடுகள் சார்ந்த இடமாக காணப்படுகிறது!!!
மருதம் : திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பான்மையான இடங்கள் வயல் சார்ந்த பகுதியாக காணப்படுகிறது!!!
நெய்தல்: உவரி, கூடங்குளம் கடல் சார்ந்த இடமாக திகழ்கிறது!!!
பாலை: திசையன்விளை பகுதியில் தேரிக்காடு என்று அழைக்கப்படும் மணல் பகுதி பாலை நிலமாக காணப்படுகிறது!!!
Page 2 of 2 • 1, 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum