பெண்களை குறிவைக்கும் வாட்ஸ் அப் ஆபத்து
Tue Aug 12, 2014 10:18 am
மாறிவரும் சமூகத்தில் நமது வசதிக்கேற்ப நாம் பல்வேறு தொழிநுட்ப வசதிகளை பயன்படுத்தி வருகிறோம். அதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைத்தாலும், அதற்கேற்ப ஆபத்துகளும் பெருகிக் கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் இப்போது உள்ள இளம் தலைமுறையினரை ஆட்டிபடைக்கும் ஒன்று சமூக வலைதளங்கள். பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் தற்போது செல்போனில் பயன்படும் ஆப்ஸான வாட்ஸ்அப் மூலமாகவும் வரத்தொடங்கியுள்ளது. அது எப்படி நான் என் செல்போனில் தனிப்பட்ட முறையில் உபயோகிக்கும் ஆப்ஸ் தானே. அதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்ற கேள்வி அனைவருக்கும் வரும். அப்படி என்ன ஆபத்து? உங்களின் மொபைல் நம்பர் மற்றவர்களிடம் இருந்தால் மட்டுமே அவர்களால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பார்க்கவும், உங்கள் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யவும் முடியும். ஆனால் உங்களை தெரியாத நபர்கள் கூட உங்களை தொடர முடியும். எப்படி என்று கேட்கிறீர்களா? உங்களது நண்பர்களில் சிலர் வாட்ஸ்அப் குரூப்களில் உங்கள் பெயரையும் இணைக்கும் போது உங்கள் எண் குரூப்பில் உள்ள அனைவருக்கும் பகிரப்படப்படுகிறது என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். உங்களுக்கு எதிர்முனை நபர் யார் என்று தெரியாத போது அவர் தவறான பெயரில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது தகவல்களை பெற வாய்ப்புள்ளது. உஷார் தோழிகளே! இதனை உங்களது பிரைவஸி செட்டிங்கிற்கு சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன் ஆகியவற்றை My Contacts அல்லது Only me ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களை பாதுகாக்கலாம். குரூப்களில் பெரும்பாலும் இணைவதையும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதுமட்டுமின்றி ப்ளாக் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தொல்லை தருபவரை உங்கள் கணக்கை தொடராமல் தடுக்கும் வசதியும் வாட்ஸ்அப்பில் உள்ளது. மிக கவனமாக செயல்படுங்கள், சிறிய விடயம் மோசமானதாக மாறக்கூடும்..உஷார் தோழிகளே |
Re: பெண்களை குறிவைக்கும் வாட்ஸ் அப் ஆபத்து
Tue Aug 12, 2014 7:09 pm
‘வாட்ஸ் அப்’ மூலம் போலீஸ் மீதான புகார்களை தெரிவிக்க புதிய உதவி எண்ணை டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது..
மொபைல் சாதனங்களில் உடனுடக்குடன் செய்திகளை அனுப்புவதில் உலகெங்கும் பயன்படுத்தப்படும் ‘வாட்ஸ் அப்’ தற்போது குற்றங்களுக்கு எதிரான புகார்களை தெரிவிக்கும் ஆயுதமாகவும் மாறியுள்ளது. ஆடியோ மற்றும் வீடியோ செய்திகளை உடனடியாக பரிமாற்றம் செய்துக் கொள்ள முடியும் ‘வாட்ஸ் அப்’ மூலம் போலீஸ் மீதான புகார்களை தெரிவிக்க புதிய உதவி எண்ணை டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது. 9910641064 என்ற அந்த உதவி எண் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் அமலுக்கு வந்ததுள்ளது என்று டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. உங்களுடைய புகார்களை மட்டும் இன்றி உங்களிடம் லஞ்சம் பெற்றவர்கள் வாய்ஸ் மெசேஜ் மற்றும் வீடியோவையும் அனுப்ப முடியும்.
‘வாட்ஸ் அப்’ மூலம் புகார்களை அனுப்பும் வசதி ஆகஸ்ட் 6ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. ‘ஸ்டிங் ஆபரேஷன்’ எனப்படும் ரகசிய பதிவுகள் மூலமும் படம் பிடித்து ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை அனுப்பி வைக்கலாம் என்று டெல்லி போலீஸ் துணை ஆணையர் (லஞ்ச ஒழிப்பு பிரிவு) சிந்து பிள்ளை தெரிவித்துள்ளார். ‘வாட்ஸ் அப்’ புதிய வசதி மூலம் புகார் தெரிவிக்கலாம் என்பது குறித்து டெல்லி மக்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில் இந்தி மற்றும் ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கும் வசதி டெல்லி காவல் துறை ஆணையர் பி.எஸ்.பாஸியின் எண்ணத்தில் உதித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் யாராவது லஞ்சம் கேட்டாலோ, பொதுமக்களிடம் தவறாக நடந்து கொண்டாலோ அதனை ‘வாட்ஸ் அப்’ மூலம் படம் பிடித்து டெல்லி போலீசுக்கு அனுப்பி வைக்கலாம். எங்களுக்கு புகார்கள் வந்தால், முதலில் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளின் உண்மைத்தன்மை தடயவியல் அறிவியல் துறை உதவியுடன் சரிபார்க்கப்படும். உண்மை என்று தெரியவந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, உடனே தற்காலிக பணிநீக்கமும் செய்யப்படுவார், கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். என்று சிந்து பிள்ளை தெரிவித்துள்ளார். டெல்லியில் ஏற்கனவே 1064 மற்றும் 1800111064 என இரண்டு உதவி தொலைபேசி எண்கள் உள்ளன. தற்போது கூடுதலாக ‘வாட்ஸ் அப்’ மூலம் போலீஸ் மீதான புகார்களை புதிய உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum