இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?!
Mon Aug 11, 2014 9:30 pm
இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரியும். இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?!
டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள்.
அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும்.
நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே,
ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும்,
டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும்,
நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும்,
எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது ஆகும்.
சரி...உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்.
சரி...உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum