தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பட்டா பெயர் மாற்றும்போது கவனிக்க வேண்டியவை! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பட்டா பெயர் மாற்றும்போது கவனிக்க வேண்டியவை! Empty பட்டா பெயர் மாற்றும்போது கவனிக்க வேண்டியவை!

Thu Aug 07, 2014 11:53 am
ஒரு சொத்தை வாங்கும்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரயப்பத்திரம் செய்வதவுடன் தாலுகா அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏனென்றால் கிரயப்பத்திரத்தில் உங்கள் பெயருக்கு சொத்து மாறிய விவரம் குறிப்பிட்டு இருந்தாலும், பட்டா பழைய உரிமையாளர் பெயரில் தான் இருக்கும் என்பதால் அதை உங்கள் பெயருக்கு உடனே மாற்றுவது அவசியமாகிறது.
இல்லாவிட்டால் சொத்தின் உண்மையான உரிமையாளர் யார்? என்பதை நிர்ணயிக்கும் பட்டா, சொத்தை உங்களுக்கு விற்பனை செய்தவர் பெயரிலேயே இருந்து விடும். எனவே பட்டாவில் பெயர் மாற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவ்வாறு பெயர் மாற்றம் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.
பெயர் மாற்றம்
ஒருவரிடம் இருந்து சொத்தின் முழு பரப்பளவையும் நீங்களே வாங்கி விட்டீர்கள் என்றால் பட்டாவை அப்படியே உங்கள் பெயருக்கு அதே சர்வே எண்ணுடன் மாற்றி விடலாம். பட்டாவில் பழைய உரிமையாளர் பெயருக்கு பதில் உங்கள் பெயரை மட்டும் தான் மாற்ற வேண்டி இருக்கும். சொத்தின் சர்வே எண், பரப்பு, உட்பிரிவு, தீர்வை, வரைபடம் போன்றவற்றில் எந்த மாறுதலும் செய்யப்பட வேண்டி இருக்காது.
ஆனால் நீங்கள் சொத்தின் ஒரு பகுதியை மட்டும் தான் வாங்குகிறீர்கள் என்றால் வாங்கிய சொத்துக்கு உங்கள் பெயரிலும், மீதி இருக்கும் சொத்துக்கு உரிமையாளர் பெயரிலும் பட்டா கொடுக்க வேண்டி இருக்கும். இதற்கு உட்பிரிவு பட்டா என்று பெயர். அதாவது சொத்தின் சர்வே எண்ணை ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளாக உட்பிரிவு செய்து பிரித்து கொடுக்கும் பட்டா ஆகும்.
தனித்தனி பட்டா
உதாரணமாக சர்வே எண் 100/1–ல் அடங்கியுள்ள 2 ஏக்கர் நிலத்தில் நீங்கள் ஒரு ஏக்கர் நிலத்தை மட்டும் வாங்கினால், பட்டாவுக்கு விண்ணப்பிக்கும்போது சர்வே எண் 100/1 இரண்டு பிரிவாக உட்பிரிவு செய்து 2 பட்டாவாக மாற்றப்படும். அதாவது சர்வே எண் 100/1 என்பது 100/1ஏ அடங்கிய ஒரு ஏக்கர் என்றும், 100/1பி அடங்கிய மற்றொரு ஏக்கர் என்றும் பிரிக்கப்பட்டு உரிமையாளருக்கும், நிலத்தை வாங்கிய உங்களுக்கும் தனித்தனியாக பட்டா கொடுக்கப்படும்.
இதனால் பட்டாவில் சர்வே எண் தவிர உட்பிரிவு எண், பரப்பு, தீர்வை, வரைபடம் அனைத்தும் மாறுபடும். புதிய உட்பிரிவு எண் அடங்கிய சர்வே எண் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும். அவை எல்லாம் சரியாக மாற்றப்பட்டு இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும். ஏனெனில் சர்வே எண்ணில் சிறு பிழை இருந்தால் கூட சிக்கல் ஏற்பட்டு விடும். பிறகு பிழை திருத்த பட்டா பெற வேண்டி இருக்கும்.
காலதாமதம் கூடாது
சொத்தின் ஒருபகுதியை மட்டும் வாங்கி விட்டு பட்டாவுக்கு விண்ணப்பிக்காமல் இருந்தாலும், நீங்கள் வாங்கிய பகுதி இடத்துக்கும் சேர்ந்து உரிமையாளர் பெயரிலேயே பட்டா இருக்கும் என்பதால் உடனடியாக பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்து விட வேண்டும்.
இல்லாவிட்டால் நீங்கள் வாங்கிய இடத்துக்கும் உரிமையாளர் சொந்தம் கொண்டாடும் நிலை வரலாம். ஒருவேளை அவர் இறந்து விட்டால் பின்னர் உங்கள் பெயருக்கான பட்டாவை பெற சிக்கல்களை சந்திக்க நேரலாம். ஆதலால் உட்பிரிவு பட்டா பெறுவதற்கு காலதாமதம் செய்யக்கூடாது.
நன்றி: தினத்தந்தி
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பட்டா பெயர் மாற்றும்போது கவனிக்க வேண்டியவை! Empty Re: பட்டா பெயர் மாற்றும்போது கவனிக்க வேண்டியவை!

Thu Aug 07, 2014 12:03 pm
ஒருவர் தமது சொத்தை விற்றாலோ அல்லது வேறு ஒருவரிடமிருந்து வாங்கினாலோ அல்லது வேறு ஒரு பெயருக்கு மாற்றினாலோ அதை ஆவணப்படுத்த வேண்டியது அவசியம். இரண்டு தனி நபர்களுக்கிடையே நடக்கும் விற்பனை நடவடிக்கையை பத்திரப்பதிவு செய்வது முதல் நடவடிக்கை எனில், அதனை அரசு அங்கீகரித்து அளிப்பதே பட்டா பெயர் மாற்றம்.

பட்டா உள்ள நிலம், கட்டிடம், காலி மனை, விவசாய நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் வாங்கப்படும்போது, அவற்றை விலை கொடுத்தோ, சொத்து வாரிசு உரிமைப்படியோ, பாகப்பிரிவினை பத்திரப்படியோ, உயில் ஆவணத்தின்படியோ வாங்குபவர் பட்டாவின் பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? யாரை அணுகுவது? விரிவான விவரங்கள் இங்கே.

பட்டாவில் என்னென்ன விவரங்கள் இருக்கும்?

பட்டா என்பது ஒரு நிலத்தின் உரிமை யாரிடம் இருக்கிறது என்பதைக் காட்டுவதாகும். இதில் உரிமையாளர் பெயர், பட்டா எண், ஊரின் பெயர், மாவட்டத்தின் பெயர், புல எண்(survey number), உட்பிரிவு , நிலத்தின் பரப்பு, தீர்வை, நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா போன்ற விவரங்களை உள்ளடக்கியிருக்கும்.

எங்கே விண்ணப்பிப்பது?

சொத்தின் எல்லைக்குட்பட்ட வட்டாட்சியரிடமோ அல்லது கிராம நிர்வாக அலுவலரிடமோ விண்ணப்பிக்கலாம். நேரில் விண்ணப்பத்தைக் கொடுத்தால் ஒப்புகைச் சீட்டு வாங்கி வைத்துக் கொள்வது அவசியம். அப்படி ஒப்புகைச் சீட்டு தராத பட்சத்தில் விண்ணப்பத்தை அஞ்சல் ஒப்புகையுடன் பதிவுத் தபாலில் அனுப்பிவிட வேண்டும்.

கட்டணம் எவ்வளவு?

பட்டா மாற்றத்திற்கு அதன் உட்பிரிவினைப் பொறுத்து 80 ரூபாயிலிருந்து 240 ரூபாய் வரைக்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

எப்படி விண்ணப்பிப்பது?

பத்திரப்பதிவு செய்து, 15 நாட்களில் பட்டா மாறுதலுக்காக சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு, ‘நான் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒளிநகல் பத்திரத்தில் உள்ள நிலத்தைக் கிரயம் பெற்றேன். நான் கிரயம் பெற்ற நிலத்தை என் பெயரில் பட்டா மாற்றம் செய்திட/ உட்பிரிவு செய்து தனிப்பட்டா அளித்திட வேண்டுகிறேன்’ என்று விண்ணப்பத்தைப் பதிவஞ்சலில் ஒப்புதல் அட்டையுடன் அனுப்பிவிட வேண்டும். இத்துடன் பத்திர ஆவணங்களின் நகலை இணைக்க வேண்டும்

எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?

சாதாரண பட்டா மாற்றத்திற்கு 15 நாட்களிலும், உட்பிரிவு செய்யவேண்டிய பட்டா மாற்றத்திற்கு 30 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும்.

பட்டாவின் அவசியம்

ஒருவரிடமிருந்து மற்றொருவர் நிலமோ, கட்டிடமோ விலை கொடுத்து வாங்கும்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யப்படும். பத்திரப்பதிவுக்குப் பின் வாங்கியவர், தமது பெயருக்கு பட்டா மாறுதல் செய்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் நில ஆவணங்கள் இருப்பதால் பத்திரப்பதிவு நகலை வைத்து உரிய கட்டணம் செலுத்தி, தன் பெயருக்கு மாற்றித் தர விண்ணப்பிக்க வேண்டும்.

வட்டாட்சியரிடமிருந்து சம்பந்தப்பட்ட நில அளவையாளருக்கு விண்ணப்பம் அனுப்பப்படும். விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட அவர், நிலத்தை நேரில் சென்று அளந்து, ஆவணங்களில் தேவையான மாறுதலைச் செய்து, பட்டா மாற்றம் செய்து வழங்குவார்.

வங்கிகளில் விவசாயக் கடன் பெற, நகைக் கடன் பெற, பத்திரப்பதிவு செய்ய, அரசின் நலத்திட்டங்களைப் பெற, இயற்கைச் சீற்றங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்போது வெள்ள அல்லது வறட்சி நிவாரணம் பெற... இப்படிப் பல அரசு சார்ந்த செயல்பாடுகளுக்கு பட்டா அவசியமாகிறது.

ஆவணங்களின் நகல்களைப் பெற..

பட்டா மாற்றத்திற்குப்பின் அடங்கல், சிட்டா, அ பதிவேடு, நிலவரைபடம் ஆகிய ஆவணங்களின் நகல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் எப்படி விண்ணப்பித்துப் பெறுவது என்பதை விளக்குகிறார் தகவல் உரிமைச் சட்ட பயிற்றுநர் எம்.சிவராஜ்.


‘எனக்கு சாதாரண பட்டா மாற்றம் ---- தாலுகா ---- கிராம ------ புல எண்ணில் அளிக்கப்பட்டது. இது குறித்துப் பதிவுகள் செய்யப்பட்ட சிட்டா, அடங்கல் நகல் அளிக்க வேண்டுகிறேன்.’


‘எனக்கு உட்பிரிவு தனிப்பட்டா ---- தாலுகா ---- கிராம ------ புல எண்ணில் அளிக்கப்பட்டது. இது குறித்துப் பதிவுகள் செய்யப்பட்ட சிட்டா, அடங்கல், அ பதிவேடு, நிலவரைபடம் ஆகியவற்றின் ஒளிநகலை அளிக்க வேண்டுகிறேன்.’


குறிப்பிட்ட 15/30 நாட்களுக்குள் பட்டா மாற்ற ஆணைகள் வராவிடில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விளக்கம் பெற : 94434 89976

பட்டா பெயர் மாற்றம் செய்தபின் கவனிக்க வேண்டியவை:

ஒரு சொத்தை வாங்கியபின் பின்னால் ஏதும் பிரச்சினைகள் வராமலிருக்க, வருவாய்த் துறையின் கீழிருக்கும் பதிவுத்துறையில் கீழ்க்கண்ட பதிவேட்டின் நகல்களைப் பெற்று வைத்திருப்பது அவசியம். இதனை வைத்து ஒரு சொத்து ஒருவரின் பெயரிலிருந்தால் அது அரசுப் பதிவேடுகளில் எங்கெங்கு பதிவாகியிருக்கும் எனத் தெரிந்துகொள்ளலாம்.

சிட்டா - குறிப்பிட்ட கிராமத்தில் ஒரு நபருக்கு எவ்வளவு நிலமிருக்கிறதென அரசு வைத்திருக்கும் பதிவேடு இது. இதிலும் பட்டாவில் உள்ள விவரங்களைப் போல உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம்? அது பயன்பாட்டில் இருக்கிறதா? தீர்வை கட்டப்பட்டுள்ளதா போன்றவை அடங்கியிருக்கும்.

அடங்கல் - ஒரு கிராமத்தின் மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் பட்டா எண், நிலத்தின் பயன்பாடு, சர்வே எண்ணுக்குரிய நிலத்தின் உரிமையாளர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும்.

அ பதிவேடு - பட்டா எண், பதிவு பெற்ற உரிமையாளர் பெயர், பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், சர்க்கார்(ச) அல்லது இனாம்(இ), ரயத்துவாரி(ர), நன்செய்(ந), புன்செய்(பு), மானாவாரி(மா), தீர்வு ஏற்படாத தரிசு(தீ.ஏ.த.), புறம்போக்கு ஆகியவை அடங்கியிருக்கும்.

நிலத்தின் வரைபடம் - சர்வே எண், நிலத்தின் வடிவம், நீள அகலம் ஆகியவற்றைக் காட்டும்.

பட்டா மாற்றம் மட்டுமே முழுமையானதல்ல. சாதாரண பட்டா மாற்றமெனில் அடங்கல், சிட்டா ஆகியவற்றிலும், உட்பிரிவு செய்யப்பட்ட பட்டாமாற்றமெனில் அடங்கல், சிட்டா, அ பதிவேடு, நிலவரைபடம் ஆகியவற்றிலும் மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவே பட்டா மாற்றம் முடிந்ததும் மேற்சொன்ன பதிவேடுகளின் நகல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதுவே பாதுகாப்பானது.

விரைவுப் பட்டா மாற்றம் உத்தரவிலும் கூட அந்தக் கிராம ஆவணங்களில் இதன் மாற்றம் குறித்து பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்வது அவசியம்.
 
நன்றி: புதியதலைமுறை
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பட்டா பெயர் மாற்றும்போது கவனிக்க வேண்டியவை! Empty Re: பட்டா பெயர் மாற்றும்போது கவனிக்க வேண்டியவை!

Thu Aug 07, 2014 12:10 pm
நமக்கு உள்ள சொத்து, வாரிசுரிமை, பாகப் பிரிவினை, உயில் ஆவணம் மற்றும் செட்டில்மெண்ட் பத்திரங்களின்படியோ அல்லது நாம் வெளியே வாங்கி இருந்தாலோ அதற்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும். அதை எப்படிச் செய்வது?

சொத்து எந்த தாலுகா அலுவலக எல்லைக்கு உட்பட்டதோ, அந்தப் பகுதி தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பதிவு மாற்றம் தொடர்பாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக 3 பக்கத்தில் விண்ணப்பப்படிவம் உள்ளது. இணையத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்தும் இதற்கு விண்ணப்பிக்கலாம். சர்வே எண் முழுவதும் வாங்கியிருந்து, அதற்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டுமென்றால், 15 நாள்களுக்குள் செய்து விடலாம். ஒரு சர்வே எண்ணில் ஒரு பகுதி, பட்டா மாற்றமாக (உட்பிரிவு) இருந்தால், 30 நாள்களிலும் பட்டா மாற்றம் செய்து கொடுக்கப்படும். இதற்கு கட்டணம் ரூ.80.

விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் பெயர், தகப்பனார்/கணவர் பெயர், இருப்பிட முகவரி மற்றும் பதிவு மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரம் ( மாவட்டம், வட்டம், கிராமத்தின் பெயர், பகுதி எண், நகர அளவை எண் / மறுநில அளவை எண், உள்ளூர் பகுதி / நகரத்தின் பெயர், தெருவின் பெயர், மனைபிரிவு எண் ஆகிய தகவல்கள் கொடுக்கப்படவேண்டும்).

மனை அங்கீகரிக்கப்பட்டதா / அங்கீகாரம் இல்லாததா என்பதை அறிவதற்காக மனைப்பிரிவு வரைபடமும் இணைக்கப்படவேண்டும்.

மனுதாரருக்கு சொத்து எவ்வாறு கிடைத்தது என்ற விவரமும் கூறப்பட வேண்டும் (தொடக்கத்தில் கூறப்பட்ட முறைகளில் ஒன்று)

சொத்து மனுதாரரின் கட்டுப்பாட்டில் உள்ளதா? எவ்விதம் கட்டுப்பாட்டில் உள்ளது? என்ற தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.(அதாவது, மாநகராட்சி சொத்துவரி செலுத்திய ரசீது / மின் கட்டண அட்டை / குடிநீர் வடிகால் இணைப்பு அட்டை / குடும்ப அட்டை / வாக்காளர் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று)

பதிவு மாற்றம் கோரும் இடம் சொத்தில் ஒரு பகுதியா அல்லது முழுமையானதா என்ற விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்.

பதிவு மாற்றம் கோரும் இடம் சொத்தின் ஒரு பகுதியாக இருந்தால், உட்பிரிவுக்கு கட்டணம் செலுத்திய (சலான் எண் / நாள் / தொகை / செலுத்திய வங்கி / கருவூலத்தின் பெயர்) விவரங்களை விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும்.

இந்த தகவல்களை தெரிவித்து, குறிப்பிட்ட காலத்துக்குள் பட்டா கொடுக்கப்படவில்லை என்றால், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யலாம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பட்டா பெயர் மாற்றும்போது கவனிக்க வேண்டியவை! Empty Re: பட்டா பெயர் மாற்றும்போது கவனிக்க வேண்டியவை!

Thu Aug 07, 2014 12:14 pm
“வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்!” எ‎ன்று கூறுவார்கள். இரண்டும் சாதாரண விஷயமல்ல எ‎ன்பதே அதன் தொனி. வீடு, நிலம் போ‎‎ன்ற அசையா சொத்துக்கள் வாங்கும் போது, அதற்கு சட்ட ரீதியில், முறையான வழிமுறை எ‎ன்ன என்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை. அரைகுறையாகக் கேள்விப்படும் விபரங்களை வைத்தும், பழக்கமானவர்கள் சொல்கிறார்களே எ‎ன்பதைக் கருத்தில் கொண்டும் சொத்துக்களை வாங்கி விடுகி‎‎ன்றனர். சொத்து சரியான முறையில் பதிவு செய்யப்படாதபோது உரிமையாளர்கள் பல ‏ இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது; சில சமயம் தமது சொத்துக்களைக் கூட இழக்கும்படி ஆகி விடுகிறது.

செ‎ன்னை தி.நகரில் இயங்கும் ட்ரைஸ்டார் ஹௌஸிங் பி லிட்(Tristar Housing Pvt Ltd) என்ற நிறுவனம் சொத்துக்கள் குறித்து ஆலோசனைகள் வழங்குவதோடு, அவற்றைப் பராமரிப்பதிலும் வாடிக்கையாளர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இந்நிறுவனத்தி‎ன் நிர்வாக இயக்குனர் திரு. பீட்டர் அவர்களை சந்தித்தோம்.

George Peter“நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு இது மூலகாரணமாக அமைந்துவிடுகிறது” எ‎ன்கிறார் பீட்டர்.

இது குறித்து பல நுணுக்கமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொ‎ண்டார். அவருட‎னான ஒரு பயனுள்ள நேர்காணல் இதோ:

சொத்து வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ அரசாங்கத்தி‎ன் எந்தெந்தத் துறைகளை நா‎ம் அணுக வேண்டும்?

மாநில அரசி‎ன் பதிவுத் துறை (Registration Department)யும், வருவாய்த் துறை (Revenue Department)யும், சொத்துப் பரிமாற்றத்தில் சம்பந்தப்படும். சொத்து வாங்கியபி‎ன்‏ இவ்விரு துறைகளிலும் உரிமையாளரின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

பதிவுத் துறையில் நாம் செய்ய வேண்டிய கடமைகள் எ‎ன்ன? சொத்து சம்பந்தமாக அந்தத் துறை பராமரிக்கும் விவரங்களைப் பற்றிக் கூறுங்களே‎ன்.

நாம் கிரையப் பத்திரம் (Sale Deed) செய்யும் சார்பதிவாளர் அலுவலகம் (Sub-Registration Office), பதிவுத் துறை (Registration Department)யின் கீழ் வருகிறது. இங்கு நாம் மற்றவரிடம் இருந்து இடம் வாங்கும்போது அதற்காக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் 8% முத்திரை தீர்வையாகவும் மற்றும் 1% பதிவுக் கட்டணமாகவும் செலுத்துகிறோம். ஆகவே, நாம் இடம் வாங்குவதற்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தவும் மற்றும் நிலம் விற்பவரும் வாங்குபவரும் சார்பதிவாளர் முன்னிலையில் கிரையப் பத்திரத்தில் கையொப்பம் இடவும் சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டி இருக்கிறது.

இந்தத் துறையின் பதிவேட்டில் ஒருவரிடம் இருந்து மற்றவர் இந்த இடத்தை வாங்கி இருக்கிறார்; அதற்கான பத்திர எண் இது என்ற விபரம் மட்டுமே இருக்கும். நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பது பற்றி இந்தத் துறை அக்கறை கொள்வதில்லை எ‎ன்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். ‏ இ‏தை முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும்.

அப்படியானால் உரிமையாளர் பெயரை எங்கே மாற்றம் செய்ய வேண்டும்?

வருவாய்த் துறை (Revenue Department)யில்தான் நிலத்திற்கான விவரங்கள் அ‎னைத்தும் இருக்கும். பட்டா (Patta), சிட்டா (Chitta), அடங்கல் (Adangal), 'அ' பதிவேடு (‘A' Register), நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) என ஐந்து வகையான பதிவேடுகளை‏ இந்தத் துறை பராமரிக்கிறது.

நிலத்தின் உரிமை நமக்குத்தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம்தா‎ன் பட்டா என்பது. ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்வதே பட்டாவை வைத்துத்தான். அதில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போ‎ன்ற விவரங்களுட‎ன், புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா எ‎ன்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையி‎ன் விவரங்களும் இருக்கும்.

ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா என்பது. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதா‎ன் ‘அடங்கல்' என்பது. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.

'அ' பதிவேட்டில் (‘A' Register) கீழ்க்கண்ட விபரங்கள் இருக்கும்:

1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) இடம் எவ்வாறு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. நிலங்கள் ஏதாவது ஒரு கிராமத்தின் கீழ் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு எ‎ண் கொடுக்கப்படும். அதுவே சர்வே எண் எ‎ன்பது. நம் கிரையப் பத்திரத்தில் சொத்து விவரம் (Schedule) பகுதியில் நம்முடைய இடம் எந்த சர்வே எண்ணில் வருகிறது என குறிக்கப்பட்டிருக்கும்.

இவை அனைத்திலுமே உரிமையாளர் பெயர் மாற்றப்பட வேண்டும் என்பது மனதில் கொள்வது மிகவும் அவசியம்.

இதில் இவ்வளவு விஷயங்கள் ‏இருக்கி‎ன்றனவா! சரி.. வருவாய்த் துறையில் நம்முடைய ஆவணங்களைப் பெயர் மாற்றம் செய்யத் தவறிவிட்டால் எ‎ன்னவாகும் எ‎ன்பதைப் பற்றியும் கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்களே‎ன்.

பட்டா பெயர் மாற்றம் செய்யாவிட்டால் வருவாய்த் துறையின் ஆவணங்களின் படி நீங்கள் உரிமையாளர் அல்ல. பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்தான் உரிமையாளர். ஒரு வேளை அரசாங்கம் நம்முடைய நிலத்தை கையகப்படுத்தினால், அதற்கான இழப்பீட்டுத் தொகை பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்களுக்கு வழங்கப்படும்.

நீங்கள் பட்டா பெயர் மாற்றம் செய்யவில்லை என்பதை உங்களுக்கு இடத்தை விற்றவர் தொரிந்து கொண்டால் அவர் பெயரில்
வரி செலுத்தி விடுவார். மேலும் அடங்கல் அவர் பெயருக்கு ஒவ்வொரு வருடமும் வாங்கி வைத்துக் கொள்வார். அடங்கல் அவர் பெயரில் இருந்தாலே அவர்தான் அதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது உறுதியாகி விடும். நாம் வேறொருவருக்கு விற்பனை செய்யும்போது இது பிரச்சினையைக் கொடுக்கும். எனவே, நம் இடத்தை கிரையப் பத்திர மூலம் பதிவு செய்து வாங்கி விட்டோம், எல்லாம் முடிந்துவிட்டது என இருக்கக் கூடாது. உடனே பட்டா பெயர் மாற்றம் செய்து வருவாய்த் துறையின் அனைத்து பதிவேடுகளையும் நமது பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

பலரது கனவான சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான பல உபயோகமான தகவல்களை மிக விளக்கமாகக் கூறினீர்கள். மிக்க ந‎ன்றி!

பீட்டர் அவர்களின் ஆலோசனை பெற விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்:
0091 44 2431 2431

நன்றி: நிலாச்சாரல்
Sponsored content

பட்டா பெயர் மாற்றும்போது கவனிக்க வேண்டியவை! Empty Re: பட்டா பெயர் மாற்றும்போது கவனிக்க வேண்டியவை!

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum