சூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா? பாரத ரத்னா பட்டமா?
Wed Jul 23, 2014 6:32 pm
சிவகிரி, ஜூலை 23- சூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா? பாரத ரத்னா பட்டமா? என்ற கேள்வியை எழுப்பினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
ஜாதியால் பிளவுபட்டிருக்கக்கூடாது!
ஜாதி முறை உலகத்தில் வேறு எங்காவது உண்டா? சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகியிருக்கிறதே, இந்த 67 ஆண்டுகளில் எந்த நாட்டிலாவது சூத்திரன் என்று ஒருவன் இருக்கிறானா? பஞ்சமன் என்று ஒருவன் இருக்கிறானா? தாழ்த்தப் பட்டவன், பிற்படுத்தப்பட்டவன் என்று நம் நாட்டில் இருப்பதுபோல, வேறு எந்த நாட்டிலாவது உண்டா? 1944 ஆம் ஆண்டு டிவேலி நிக்கோலஸ் என்பவர் வெளி நாட்டுப் பத்திரிகையின் ஆசிரியரை இந்தியாவிற்கு அனுப்பினார்கள்; அப்பொழுது இந்தியா சுதந்திரமடைய வில்லை. அவர் காஷ்மீர்முதல் கன்னியாகுமரிவரை சுற்றிப் பார்த்துவிட்டு, ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதினார்; அந்த புத்தகத்தின் தலைப்பு இந்தியாவைப்பற்றி எனது தீர்ப்பு! A Verdic on India அதில் அவர் எழுதுகிறார், நான் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரிவரை சுற்றிப் பார்த்தேன்.
பல பேரை சந்தித்தேன். இந்தியா முழுவதும் நான் சுற்றியிருக்கிறேன். ஆனால், இவ்வளவு நான் சுற்றினாலும், ஒரு இந்தியரைக்கூட பார்க்க முடியவில்லை. அடுத்து சொல்கிறார், இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரையும் நீங்கள் யார்? என்று கேட்டால், நான் ஒரு இந்தியன் என்று பதில் சொன்னவர்கள் ஒருவர்கூட கிடையாது.
நான் ரெட்டியார்; நான் செட்டியார்; நான் கவுண்டர்; நான் வன்னியர்; நான் சாஸ்திரி; நான் மிஸ்ரா; நான் சட்டோபாத்தியா என்றுதான் சொன்னார்களே தவிர, நான் ஒரு இந்தியன் என்று யாரும் சொல்லவேயில்லை.
இதைத்தான் நான், இந்தியாவில் ஒரு இந்தியனைக்கூட பார்க்கவில்லை என்று சொன்னேன்; நான் இனிமேல்தான் அதுகுறித்து ஆராய்ச்சி செய்யவேண்டும் என்றார்.
சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும், அறிவைக் கொடுக்கலாகாது!
ஜாதியால் நாம் பிரிக்கப்பட்டிருக்கிறோம்; ஜாதியால் பிளவுபட்டிருக்கிறோம்; ஒன்றாக சேர வாய்ப்பில்லாமல் இருந்தோம். நல்ல வாய்ப்பாக திராவிடர் இயக்கம் வந்ததினால், மக்கள் எல்லாம் ஒன்றாக சேரக்கூடிய வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், மற்ற இடங்களில் அந்த வாய்ப்பு கிடையாதே! மற்ற நாடுகளில் ஜாதியே கிடையாதே! சூத்திரர்களுக்கு எதை கொடுத் தாலும், அறிவைக் கொடுக்கலாகாது என்று வைத்திருந்தார்கள்.
ஒரு காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப் பெதற்கு என்று கேட்டார்கள்; இன்றைக்கு கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும், ஊதுகிற அடுப்பே கிடை யாது; திருகுகின்ற அடுப்பைத்தான் கொடுத்திருக்கிறார். இன்றைக்கு மக்கள் எல்லாம் வசதியாக இருக்கிறார்கள்.
பெண்கள் மிகப்பெரிய அளவிற்கு படிக்கிறார்கள்; பிளஸ் டூ தேர்விலும் சரி, பத்தாம் வகுப்புத் தேர்விலும் சரி, பெண்கள்தான் முதல் இடத்தைப் பிடிக்கின்றனர்.
சரசுவதி பூஜை ஆண்டுதோறும் கொண்டாடக்கூடிய நாட்டில், கல்விக்குத் தனியாக ஒரு கடவுளை வைத் திருக்கும் நமது நாட்டில், பாட்டி சரசுவதிக்குக் கையொப்ப மிடத் தெரியாது; ஆனால், பேத்தி சரசுவதி டாக்டர் சரசுவதி; வழக்குரைஞர் சரசுவதி; நீதிபதி சரசுவதி; பொறியாளர் சரசுவதி; அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., சரசுவதி இவ்வா றெல்லாம் வந்திருக்கின்றார்களே, இது சரசுவதி பூஜை யினால் வந்ததா? தயவு செய்து நடுநிலையாளர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். பெரியார் பாடுபட்டதின் விளைவாகத்தான் பெண்கள் இன்றைக்கு இவ்வளவு படித்திருக்கிறார்கள்; திராவிடர் இயக்கத்தினுடைய சாதனைதான், இத்தனை கல்விப் பெருக்கம். திராவிட இயக்கத்தினுடைய சாதனை மட்டுமல்ல, பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசருடைய அரிய முயற்சியினால்தான், இவ்வளவு பெரிய சமுதாய மாற்றங்கள். இன்னும் படிக்கவேண்டும்; படிக்கவேண்டும். எல்லாருக்கும் எல்லாமும் என்ற நிலை வந்துவிட்டது.
ஆனால், ஜாதிய அமைப்பில் என்ன சொல்கிறான், சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக் காதே, கல்வியைக் கொடுக்காதே என்று. இந்த இயக்கம் வந்த பிறகுதானே, சூத்திரன் என்றாலே என்ன தெரிந்து கொண்டோம்! பெரியார் கேட்டார், அறிவும், மானமும் உள்ள சமுதாயமாக இந்த சமுதாயத்தை மாற்றிடவேண்டும் என்று தெளிவாகச் சொன்னார்.
நம்மாளிடம் சென்று, ஏங்க, உங்களிடம் பணம் இருக்கிறதா? என்று கேட்டாலும் சரி, உங்களிடம் வீடு, நிலம் இல்லையா? என்று கேட்டாலும் சரி கோபம் வராது. ஆனால், ஏங்க, உங்களுக்கு மூளை இருக்கிறதா? என்று கேட்டால்,
சூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா? பாரத ரத்னா பட்டமா?
உடனே அவர், ஆத்திரப்பட்டு, கோபப்பட்டு என்னைப் பார்த்தா இந்தக் கேள்வியைக் கேட்கிறாய் என்று அடிப் பதற்குப் பாய்ந்து வருவார்.
மானமும் அறிவும் உள்ள மக்களாக இந்த மக்களை ஆக்கவேண்டும் என்று சொன்னால், அறிவும், மானமும் நமக்கிருந்திருந்தால், பெரியாருக்கு முன்னால், எவ்வளவு மகாத்மாக்கள், ஜீவாத்மாக்கள், பரமாத்மாக்கள், அவதாரங் கள் எல்லாம் தோன்றினார்களே, அவர்கள் ஏன் சூத்திரப் பட்டம் ஒழியவேண்டும் என்று சொல்லவில்லை.
சூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா? பாரத ரத்னா பட்டமா?
சூத்திரன் என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்று எழுதி வைத்திருக்கிறானே, இன்னமும் சட்டத்திலே இருக்கிறதே! வழக்குரைஞர்களாக இருக்கக்கூடிய நண்பர்கள் இங்கே இருக்கிறார்கள்; அவர்கள் தயவு செய்து இந்து சட்டத்தின் அடிப்படையில் எவ்வளவு மாற்றங்கள் வந்திருந்தாலும், இன்னமும் ஜாதி என்கிற வார்த்தை இருக்கிறது அல்லவா! அந்த ஜாதிப்படி, சூத்திரன் என்கிற வார்த்தை நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படுகிறதா, இல்லையா?
செவ்வாய்க் கோளிற்கே ராக்கெட் விட்டுவிட்டார்கள்
இன்றைக்கும் நாம் கட்டிய கோவிலுக்குள் செல்ல முடியாதே! வேண்டுமென்றால், குறிப்பிட்ட அளவிற்கு உள்ளே செல்லலாம். தமிழர்கள் நிலம் கொடுத்து; தமிழர்களின் பணத்தினால் கட்டப்பட்ட கோவிலின் கர்ப்பக் கிரகத்திற்குள் செல்வதற்கு இன்னமும் உரிமை உண்டா? இதனைக் கேட்பதற்கு வேறு ஆள் உண்டா?
நீங்கள், இன்றைக்குப் பெண்கள் படிக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள்; பெண்கள் கல்லூரி வேண்டும் என்று சொல்கிறீர்கள். அது வரவேற்கத்தகுந்ததுதான்; பெண் களுக்கு அப்பொழுதுதான் அறிவும், தெளிவும், துணிவும் ஏற்படும்; சொந்தக்காலில் நிற்க முடியும். இன்றைக்கு மூட நம்பிக்கைகள் பரவியிருப்பதால், 45 வயதானாலும் பெண்களுக்குத் திருமணம் நடக்காமல் இருக்கிறதே, ஏனென்று கேட்டால், செவ்வாய் தோஷம் என்று சொல்கிறார்கள். ஒரு செவ்வாய் தோஷக்காரர், இன்னொரு செவ்வாய் தோஷக்காரரைத்தான் தேடவேண்டும் என்று கதை கட்டிவிட்டார்கள். ஆனால், இன்றைய நிலை என்ன? அறிவியல் வளர்ந்துவிட்டது; செவ்வாய்க் கோளிற்கே ராக்கெட் விட்டுவிட்டார்கள்; அதுவும் என்றைக்கு அனுப்பினார்கள் என்றால், செவ்வாய்க்கிழமை அன்று. ஈரோட்டு சம்மட்டியால் மட்டுமே, பெரியாருடைய தத்துவங்கள் மட்டுமேதான்
மூட நம்பிக்கைக்கு மூளையில் போட்ட விலங்கு இருக்கிறது பாருங்கள், அது சாதாரண விலங்கல்ல; கையில் போட்ட விலங்கு, அரசியல் விலங்கு; காலில் போட்ட விலங்கு, பொருளாதார விலங்கு. ஆனால், மூளையில் போட்ட விலங்கு இருக்கிறதே, அது பண்பாட்டு படை யெடுப்பினால் போடப்பட்ட விலங்காகும். காலிலோ, கையிலோ விலங்கு போட்டால், அதனை உடைக்க வேண்டும் என்கிற எண்ணம் வரும். ஆனால், கண்ணுக்குத் தெரியாத மூளையில் அல்லவா விலங்கினை போட்டுள் ளான். அதை உடைப்பதற்கு ஒரே ஒரு சம்மட்டிதான்; ஈரோட்டு சம்மட்டியால் மட்டுமே, பெரியாருடைய தத்துவங்கள் மட்டுமேதான் அந்தத் துணிச்சலை உண்டாக்கும்.
இன்றைக்கு அறிவியல் பரவினாலும், அங்கேயும் மூட நம்பிக்கை நிரவியிருக்கிறது; தயார் செய்கிறவர் என்ன செய்கிறார்; 1000 விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து பாடுபட்டு, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதற்கு அறிக்கை தயார் செய்தால், அதைக் கொண்டு போய், திருப்பதி வெங்கடாசல பதி முன் வைத்து, ஒரு சுற்று சுற்றி, அங்குள்ள அய்யர் அதற்கு ஒரு அபிஷேகம் செய்வதுபோல், ஏதோ செய்த பிறகு, அதனை எடுத்துக்கொண்டு வருகிறார். ஏற்கெனவே விட்ட ராக்கெட்டால் ஒன்றும் ஆகவில்லை.
திருப்பதி வெங்கடாசலபதிக்கு ராக்கெட்டை விடக் கூடிய சக்தி இருந்தால், அவருக்கு ஏன் காவல்துறை யினரின் பாதுகாப்பு? உண்டியலுக்குப் பக்கத்தில் பாதுகாப்பு? உண்டியலிலுள்ள பணத்தை எண்ணும்போது, அறிவியல் சாதனமான கேமராக்கள் ஏன்?
சர்வசக்தி வாய்ந்தவர்; சர்வ வியாபி; அங்கிங்கெனாபடி எங்கும் இருக்கிறவர்தான் கடவுளாச்சே! காவலர் ஒருவரின் முன்பு பிக்பாக்கெட் அடித்தால், உடனே அவர் பிடித்துக் கொள்வாரா? மாட்டாரா? சாதாரண மனிதனுக்கே அந்த ஆற்றல் உள்ளபோது, சர்வ சக்தி ஆற்றல் வாய்ந்த கடவுள் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்? செவ்வாய் தோஷம் என்று சொன்ன காலம் போய், இன்றைக்கு செவ்வாய்க் கோளில் மனிதன் குடியேறப் போகிறான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அறிவு வளர்ந்திருக்கக்கூடிய காலகட்டத்தில், இன்னமும், நம்மில் கீழ்ஜாதிக்காரர்கள் படிக்கக்கூடாது; இன்னமும் நம் சொந்த சகோதரர்கள், நாய், பன்றி, கழுதை போகலாம்; ஆனால், ஆறறிவு படைத்த மனிதன் செல்லக்கூடாது என்று வைத்திருந்தார்களே; அதற்காகத்தானே தந்தை பெரியார் போராடினார்; அதுதானே வைக்கம் போராட்டம். காந்தியார்கூட தந்தை பெரியாரை கண்டித்தார்; நீங்கள் ஏன் கேரளாவுக்குச் சென்று ரகளை செய்கிறீர்கள்; தமிழ்நாட்டில் இருப்பவர் ஏன் அங்கே சென்றீர்கள் என்று கடிதம் எழுதினார்.
சத்தியாகிரகம் செய்து அந்த உரிமைக்காகப் போராடுகிறோம்; இது நியாயமா? தவறா?
பெரியார் அந்தக் கடிதத்திற்குப் பதில் எழுதினார், மகாத்மா ஜி அவர்களே, வைக்கத்திலுள்ள கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நாய், கழுதை, பன்றி செல்கிறது; இவையெல்லாம் சத்தியாகிரகம் செய்தா அந்த உரிமை யைப் பெற்றன. நாங்களெல்லாம் சத்தியாகிரகம் செய்து அந்த உரிமைக்காகப் போராடுகிறோம்; இது நியாயமா? தவறா? என்று நீங்கள் சொல்லுங்கள் என்று கடிதம் எழுதினார்.
காந்தியார் அதற்குப் பதில் சொல்லவில்லை.
கீழ்ஜாதியைச் சேர்ந்த ஒருவர் வழக்குரைஞரான பிறகுகூட அந்தத் தெருக்களில் நடமாடக் கூடாது என்பதன் விளைவுதானே, அந்த வைக்கம் போராட்டமே வெடித்தது; இதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஜாதி ஒழியவேண்டும் என்பது எதற்காக? எல்லோருக் கும் கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான். இன்றைய தலைமுறையினருக்கு வரலாறு தெரியாமல் இருக்கலாம்; இன்றைக்குக் கல்வி நீரோடை நாடெல்லாம் ஓடியிருக்கிறது; பெரியாரால், திராவிடர் இயக்கத்தால், திராவிட ஆட்சியினால்!
பொறியியல் கல்லூரிகள் மட்டுமே 575 கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைந்தவை. இவை யெல்லாம் தனித்தனியே பல்கலைக் கழகங்கள்; தனித்தனி அமைப்புகள்.
முத்தன் மகன் முனியன்; குப்பன் மகன் சுப்பன் இவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள்? ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்கள்; அமெரிக்காவில் இருக்கிறார்கள்; எந்த ஊரில் இருக்கிறார்கள் என்றுகூட பெற்றோர்களுக்குத் தெரியாது! ஏதோ ஒரு ஊரில் இருக்கிறான்; ஞாயிற்றுக்கிழமை மட்டும் தொலைபேசியில் தொடர்பு கொள்வான்; நாங்கள் பேசுவோம் என்று சொல்வார்கள்.
ஒடுக்கப்பட்டவனுக்கு முன்னுரிமை கொடு!
அந்த அளவிற்கு இன்று வளர்ந்து வந்தது எப்படி? இதென்ன, மந்திரக்கோலால் வந்ததா? இல்லையே! தொடர்ந்து இந்த இயக்கம் பாடுபட்டதால், எல்லோருக்கும் படிப்பு வேண்டும்; சமூகநீதி வேண்டும்; இட ஒதுக்கீடு வேண்டும்; இட ஒதுக்கீட்டில் ஒடுக்கப்பட்டவனுக்கு முன்னுரிமை கொடு; பசியேப்பக்காரனை பந்தியில் முன்னால் உட்கார வையுங்கள்; புளியேப்பக்காரன் அஜீரணத்தினால் இருக்கிறான் - மேல்ஜாதிக்காரன் அவர்கள் எல்லாம் கொஞ்சம் பின்னால் இருக்கட்டும்; இப்படி இந்த இயக்கம் பாடுபட்டதினால், அருமை நண்பர்களே மிகப்பெரிய அளவிற்கு மாற்றங்கள் இன்றைக்கு வந்திருக்கிறது.
எனவேதான் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், நம்முடைய மக்களுக்கு அறிவும், மானமும் ஏற்பட வேண்டும். எனவே, இந்த சூத்திர இழிவு பட்டம் - ஜாதி ஒழியவேண்டும். சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் என்று இருக்க வேண்டும்; பெண்ணடிமை நீங்கவேண்டும்; மனிதர்கள் எல்லோரும் கைகோர்த்துக் கொண்டிருக்கவேண்டும்; இருப்பதை எல்லாருக்கும் பங்கிட்டு வாழவேண்டும்.
இப்படி ஒரு நல்ல கொள்கையைச் சொல்லி, இந்த நாட்டில் அது இடையறாமல் வரவேண்டும் என்று நினைத் தால், ஆதிக்கவாதி சும்மா இருப்பானா? இன்றைக்குப் போராட்டம் அதற்காகத்தானே! இட ஒதுக்கீடு கூடாது! இட ஒதுக்கீடு கூடாது என்று இன்னமும் போராடிக் கொண்டிரு க்கிறார்கள். இன்னமும் நீதித் துறையில் பார்த்தீர்களே யானால், இந்த ஊரில் நிறைய வழக்குரைஞர்கள் இருக் கிறீர்கள்; நீதிமன்றம் இருக்கின்ற இடம்; உச்சநீதிமன்றத்தில் 31 நீதிபதிகள் இருக்கிறார்கள்; 31 நீதிபதிகளில் ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதிகூட கிடையாது. தாழ்த்தப்பட்ட சமுதாயம் இந்தியா முழுவதும் 24 சதவிகிதம் இருக் கிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் 75 சதவிகிதம் இருக்கிறார்கள்; சிறுபான்மையர்களான கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து 90 சதவிகிதம் உள்ளனர். உச்சநீதிமன்றத்தில் 31 நீதிபதிகள் இருக்கிறார் கள்; ஆனால் 31 நீதிபதிகளில் ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதி கூட கிடையாது.
அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நன்றி அறிவிப்பு விழா!
நீண்ட காலத்திற்கு முன்பு, பெரியார் அவர்கள் பாடு பட்டு, கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில், 1971 காலகட்டத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்; தந்தை பெரியாரை அழைத்து, நன்றி அறிவிப்பு விழா போல் ஒரு விருந்து கொடுத்தார்கள்;
அய்யா உங்கள் உழைப்பினால்தான் நாங்கள் இவ்வளவு பேர் இந்தளவிற்கு வந்திருக்கிறோம்; அதற்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம் என்று சொன்னார்கள்.
அய்யா உங்கள் உழைப்பினால்தான் நாங்கள் இவ்வளவு பேர் இந்தளவிற்கு வந்திருக்கிறோம்; அதற்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம் என்று சொன்னார்கள்.
கலைஞருடைய கவனத்திற்கு இதை எடுத்துச் செல்லவேண்டும்
உடனே அய்யா சொன்னார், உங்கள் அறிவு, ஆற்றல், திறமையினால், வந்திருக்கிறீர்கள்; என்னுடைய கொள்கைக் காக நான் பாடுபடுகிறேன் என்று சொல்லிவிட்டு, நீங்கள் எல்லாம் இதை சொல்கிறீர்கள். என்னுடைய கவலை என்னவென்றால், நூறு வருஷத்தைத் தாண்டிய (அன்றைய காலகட்டத்தில்) சென்னை உயர்நீதிமன்றத்தில், தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர், நீதிபதியாக வர முடியவில்லை. எவ்வளவு பேர் படித்து வழக்குரைஞர்களாக இருக்கிறார்கள். ஏன் வர முடியவில்லை. இப்பொழுது தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது. ஆகவே, கலைஞருடைய கவனத்திற்கு இதை எடுத்துச் செல்லவேண்டும் என்று சொல்கிறார். என்னை அழைத்து, விடுதலையில் இதுபற்றி தலையங்கம் எழுதுங்கள் என்று சொன்னார்.
உடனே நான் மறுநாளே அதுபற்றி தலையங்கம் எழுதினேன்.
12 ஆவது இடத்தில் இருந்த, வரதராஜன்
அடுத்த நாள் தாமதிக்கவில்லை கலைஞர் அவர்கள், சட்ட அமைச்சர் மாதவனை அழைத்து, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில், மாவட்ட நீதிபதிகளாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கேட்டார். 12 ஆவது இடத்தில் இருந்தார், வரதராஜன் என்பவர். அவருக்குச் சலுகை கொடுத்து, வாய்ப்பு கொடுங்கள் என்றார்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இல்லை, அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றார்.
வரதராஜன் அவர்கள் கடலூர் மாவட்டத்தில் நீதிபதி யாக இருந்தார். அவருக்கு உத்தரவு வந்தது; நீங்கள் உயர்நீதிமன்ற நீதிபதியாகிவிட்டீர்கள் என்று.
அவருக்கு ஆச்சரியம்! நான் 12 ஆவது இடத்தில் இருக்கிறேனே, வரவே வராது என்று நினைத்திருந்தேனே; உடனே வந்துவிட்டதே என்று. அது பெரியார் சொல்லி உடனே நடைபெற்றது.
திருவில்லிபுத்தூர் வீராசாமி அவர்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். ஒரு தாழ்த்தப்பட்டவர் நீதிபதியாக வரவேண்டும் என்பதில், அவருடைய பங்கும் இருந்தது; பிற்படுத்தப்பட்டவர்களும் ஒத்துழைத்தார்கள். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வரதராஜன் வந்தார். அதற்காக கலைஞர்மேல் பல பேருக்கு ஆத்திரம். தி.மு.க.வின்மீதும் ஆத்திரம், அது இன்றைய காலகட்டம் வரையில் நீடிக்கிறது.
ஏனென்றால், அதுவரையில் வழக்குரைஞர்களாக பார்ப் பனர்கள்தான் இருப்பார்கள்; நம்மாள் வழக்குரைஞராக வர முடியாது. நீதிபதிகளும் பார்ப்பனர்களாகத்தான் இருப் பார்கள்.
அங்கே நீதிபதியாக அய்யர் உட்கார்ந்திருக்கும்போது, அவரைப் பார்த்து, ஓ! மை லாட்! (கடவுளுக்கு சமமானவரே) என்று சொல்வார்கள்.
Read more: http://viduthalai.in/page-4/84550.html#ixzz38I3aKUXR
Permissions in this forum:
You cannot reply to topics in this forum