பொலிகார்ப் (Polycorp) கி.பி 69
Tue Jul 22, 2014 7:37 pm
இயேசுவின் சீடரான யோவானின் ஆவிக்குரிய மகன்களில் (சீஷர்களில்) ஒருவரான 07.22.2014-ல் பிறந்து ஸ்மைர்னா பட்டணத்தில் வாழ்ந்து வந்தார். இன்றைய துருக்கியில் உள்ள லிஸ்மிர் (Lzmir, Turkey) அந்த நாட்களில் ஸ்மைர்னா (Smyrna) என்று அழைக்கப்பட்டது. இந்த ஸ்மைர்னா பட்டணத்தில் அப்போஸ்த்தலராகிய பவுல் கிறிஸ்துவை அறிவித்து இருந்த்தால் ஒரு சிறு கூட்ட கிறிஸ்தவர்கள் அந்த பட்டணத்தில் இருந்தார்கள். இந்த ஸ்மைர்னா சபையானது கிறிஸ்துவின் நிமித்தம் துன்புறுத்தப்பட்ட ஆசியாவின் ஏழு சபைகளுள் ஒன்றாகும். அப்போஸ்த்தலராகிய யோவான் எழுதிய வெளிப்படுத்தின புத்தகத்தில் 1:11 - ல் அதை நாம் வாசிக்கலாம்.
கிறிஸ்து மரித்து உயிர்த்த முதல் நூற்றாண்டில் அநேக கிறிஸ்துவர்கள் ரோமானிய அரசர்களால் துன்புறுத்தப்பட்டனர். அப்போஸ்தலர்கள் இரத்த சாட்சியாக மரித்தனர். இந்த கால கட்டத்தில் தான் இயேசுவின் சீடரான யோவான் பத்மூ தீவில் இருந்து விடுதலை செய்யப்பட்டு எபேசு பட்டணத்தில் வந்து தன்னுடைய இறுதி நாட்களில் சபையினரை விசுவாசத்தில் திடப்படுத்தினார். இந்த எபேசு பட்டணமானது ஸ்மைர்னா பட்டணத்திற்கு அருகில் இருந்த படியால் அநேக கிறிஸ்த்தவர்கள் யோவானின் போதகங்களை கேட்க்க வருவதுண்டு. இந்த பிரகாரமாக வந்து கிறிஸ்துவை சொந்த இரத்ச்சகராக ஏற்றுக்கொண்டவர் தான் பொலிகார்ப். இவர் யோவானின் சீடர்களில் ஒருவரானார். பின் நாட்களில் யோவான் பொலிகார்பை ஸ்மைர்னா திருச்சபையின் பிஷப்பாக (தலைவராக அல்லது ஆயராக) ஏற்படுத்தினார்.
கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தில் கிறிஸ்தவர்கள் நிலைத்திருக்க இவர் மிகவும் உழைத்தார். இளம் வயதிலிருந்து முதிர் வயது வரை கிறிஸ்துவ சேவை செய்த்தால் இவரது பெயரை அறியாதவர் அந்த நாட்களில் இல்லை. பாகான் தெய்வங்களை வழி படுபவர்கள் கூட இவரது பேரில் நல்ல மரியாதை வைத்திருந்தனர். ஆனாலும் தங்கள் தங்கள் தெய்வங்கள் கிறிஸ்துவர்களால் நிராகரிக்கப்படுவதை உணர்ந்த இவர்கள் பொலிகார்ப்பின் விசாரிக்கும்படி ரோம ஆட்சியாளர்களிடம் முறையிட்டனர். இதை அறிந்த ஸ்மைர்னா சபை மக்கள் அவரை தலைமரைவாகும்படி படி வற்புறுத்தினர். பொலிகார்ப்போ இறுதி வரை மந்தையை மேய்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 86 வயது நிரம்பிய பொலிகார்பின் மரணம் நெருங்கிவிட்டதை தேவனும் கனவில் வெளிப்படுத்தினார். இவர் மரிப்பதர்க்கு மூன்று நாட்களுக்கு முன்பதாக இவரது தலையணை தீயில் எரிவதை கனவில் கண்டார். அதன்பின்பு தான் தீயால் எரிக்கப்பட்டு இரத்த சாட்சியாய் மரிக்க வேண்டும் என்ற தேவ சித்த்த்தை அவர் சபை மக்களுக்கு வெளிப்படுத்தினார். நாம் மரணத்திற்கு அருகாமையில் செல்ல செல்ல நித்திய மேன்மையின் அருகில் செல்கிறோம் என்று சபை மக்களை தைரியபடுத்தினார். இப்படியாக மரணத்திற்கு தப்பிக்க அதிக வழிகள் இருந்தும் தேவசித்தம் தன்னில் நிறவேற தன்னை ஒப்புக்கொடுத்தார். ரோமப் பேரரசன் மார்க்கூஸ் அவ்ரேலியுஸ் (Marcus Aurelius) ஆட்சியின் ஆறாம் ஆண்டில் ரோம போர்ச்சேவகர்களால் பொலிகார்ப் கைது செய்யப்பட்டார். அன்பின் அப்போஸ்தலனாகிய யோவானின் சீடரல்லவா இந்த பொலிகார்ப். தன்னை கைது செய்ய வந்தவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து உபசரித்தார். இதை கண்ட சேவகர்கள் இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை ஏன் கைது செய்து அழைத்து வர சொல்கிறார்கள் என்று வியந்தனர். இந்த சேவகர்களிடம் தனக்கு ஒரு மணி நேரம் ஜெபிக்க நேரம் தருமாறு பொலிகார்ப் வேண்டிக்கொண்டு ஜெபித்து சபையினரிடம் இருந்து விடைபெற்று ரோமபுரிக்கு சென்றார்.
அந்த நாட்களில் கிறிஸ்துவை வெளியரங்கமாக அறிக்கை செய்பவர்கள் அநேகர் கூடியிருக்கும் மைதானத்தில் மிருகங்களுக்கு இறைக்கப்படுவார்கள். இல்லையேல் தீக்கிரையாக்கப் படுவார்கள். இந்த மைதானத்திற்குள் எண்பத்தாறு வயது நிரம்பிய முதிர் வயதான பொலிகார்ப் அழைத்து செல்லப்படும் போது பரலோகத்தில் இருந்து "திடங்கொண்டு இந்த மனிதர்களோடு விளையாடு" என்ற குரல் கேட்கின்றது.
ரோம ஆளுநர் பொலிகார்பிடம் "கிறிஸ்துவை மறுதலித்து ரோமானிய கடவுளை வணங்கி ஜீவனை காத்துகொள்ளுமாறு" வற்புறுத்தினார். கிறிஸ்துவைப் பழித்து பேசினால் விடுதலை என்ற ஆசை வார்த்தைகளுக்கு இவர் இணங்கவில்லை. பொலிகார்பிடம் இருந்து வந்த விசுவாச வார்த்தைகள் "எண்பத்தாறு வருடம் நான் சேவித்து வரும் இயேசு இந்நாள் வரை எனக்கெந்த தீமையையும் செய்யவில்லை. இப்படியிருக்க எப்படி நான் என்னை இரட்சித்த இயேசு இராஜனை மறுதலிக்க முடியும்?" என்று கேட்டார். இதை கேட்டவுடன் அரங்கத்தில் கூடியிருந்த மக்கள் அவரை தீக்கிரையாகும்படி கூக்குரலிட்டனர். தீக்கிரையாகி இரத்த சாட்சியாக தான் மரிக்கவேண்டும் என்று ஏற்கனவே சொல்லிருந்தபடியாக இது நடந்தது. தனது கடைசி நேரத்திலும் கிறிஸ்துவை சாட்சியாய் அறிவித்து அந்த மக்கள் மனமாறும்படியாக கதறினார். இறுதியில் அவர் கைகள் கட்டப்பட்டு அவர்மேல் நெருப்பு வைக்கபட்டது. அந்த நெருப்பில் அவர் அவியாமல் அவரது உடல் தங்கம் போல மின்னியது. கொளுந்துவிட்டு எறிந்த தீயின் மத்தியில் தேவனை அவர் துதிப்பதை பார்த்த அநேகர் இயேசுவை மெய்தெய்வமாக ஏற்றுக்கொண்டனர். இதனால் கோபம் கொண்ட ரோம ஆளுநர் ஈட்டியால் அவரை குத்தி கொலை செய்ய சேவகர்களுக்கு கட்டளையிட்டான். இப்படியாக பொலிகார்ப் இரத்த சாட்சியாக மரித்தார்.
இவரது நினைவாக வருடம்தோறும் அவர் இறந்தநாளை கிறிஸ்தவர்கள் நினவுகூர்ந்து வருகின்றனர். பிப்ரவரி 23-ம் நாள் இவரது நினைவு நாள் அனுசரிக்கப்படுகின்றது. இவர் இரத்த சாட்சியாக மரித்தாலும் இன்றளவும் கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருகின்றார். நாமும் கிறிஸ்துவுக்காக தைரியத்தோடு ஊழியம் செய்வோம். தேசத்தை சுதந்தரிப்போம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum